Magaram Rasi Palan: மகர ராசிக்கு வரப்போகும் 2 ஆபத்து.. இந்த விஷயத்தை மட்டும் பண்ணுங்க
புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த பிரவேஷம் நடக்கிறது.

சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் அமர்கின்றனர். சுக்கிரன், கேது பஞ்சம ஸ்தானம் எனும் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரம் பெற்று சனி வக்கிரப் பார்வையால் சூரியனும், புதனும் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர்.
புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானம் எனும் 9 ஆம் இடத்தில் சூரியன், புதன் அமர்ந்திருப்பது நல்ல அமைப்பாகும். 9 ஆம் இடம் என்பது அப்பா, அப்பாவின் தலைமுறை, பூர்வீக சொத்தைக் குறைக்கும். சூரியன் புதன் சேர்ந்து சனி வக்கிரமாக பார்வையில் அமரும்போது 2 விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கம்யூனிகேஷன் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
பெண்ணால் பாதிப்பு
கோபத்தினால் செல்போன் உடைவது போன்றவை ஏற்படும். கால்களில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அஷ்டமத்தில் சுக்கிரன், கேது சேரும்போது பெண்ணினால் பாதிப்புகள் ஏற்படும். பெண்ணின் அடிவயிறு, கர்ப்பப்பையில் பிரச்சனைகள் வரும்.
அபிஷேகம்
விரையத்துக்கும், 2 ஆம் இடத்துக்கும் குரு பார்வை இருக்கிறது. ஆனால், அங்கு ராகுவும் அமர்ந்திருக்கிறது. உச்சிஷ்ட மகா கணபதிக்கு ஜலாபிஷேகம், பாலாபிஷேகம், இளநீர் அபிஷேகம் செய்வது அற்புதமான பாக்கியங்களைக் கொடுக்கும். எதிர்பார்க்காத நன்மைகள் நடக்கும். அவசரப்படாமல் பொறுமையாக இருக்க வேண்டும். பாக்கிய ஸ்தானத்தைப் பொருத்தவரை முயற்சிகள் எல்லாம் தடைபட்டு பின்பு ஜெயிக்கக்கூடிய நிலைமை ஏற்படும்.
கவனம்
விசா வாங்கிக் கொடுக்கிறோம், கன்சல்டன்ஸியில் சேர்ந்தால் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும் போன்றவற்றை நம்பாமல் இருப்பது நல்லது. பாக்கிய ஸ்தானத்தில் பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக பாஸ்போர்ட் முடக்கப்படும். வெளியூர், வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்படும். அப்பாவின் ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும். அமரும் இடத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
கடனுக்காக அலைந்தவர்களுக்கு கடன் கிடைக்கும் யோகம் உண்டு. பொறுமை இருந்தால் நன்மைகள் கிடைக்கும். நல்ல ஏற்றங்களைப் பெற கபாலீஸ்வரரை வழிபாடு செய்வது நல்லது. ஆரோக்கியம், எலும்ப, கேல்சியம், பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. மற்றபடி பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. ஆரோக்கியத்தில் மட்டும் மிகுந்த கவனம் தேவை.
மதிப்பெண்
சந்தோஷம் ரீதியா 75 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமும் நன்மைகளைப் பெறுவீர்கள். கபாலீஸ்வரர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும். உச்சிஸ்ட மகா கணபதிக்கு அபிஷேகத்துக்கு கொடுப்பது உங்களை பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் தன்மை உண்டாகும்.












Click it and Unblock the Notifications