Purattasi matha palan: சிம்ம ராசிக்கு அடுத்தடுத்து குட்நியூஸ்.. ரிலேசன்ஷிப்பில் ரொம்ப கவனம்
புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த பிரவேஷம் நடக்கிறது.

சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் அமர்கின்றனர். சுக்கிரன், கேது பஞ்சம ஸ்தானம் எனும் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரம் பெற்று சனி வக்கிரப் பார்வையால் சூரியனும், புதனும் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர்.
புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு உங்கள் ராசியிலேயே இத்தனை நாள் சூரியன் அமர்ந்து கொண்டிருந்தால் அற்புதமான வெற்றியைக் கொடுத்துக் கொண்டிருந்திருக்கும். நம்பிக்கையை அதிகரித்திருக்கும். எளிமையாக அனைத்து விஷயங்களையும் செய்யும் உத்வேகம் கொடுத்திருக்கும். எல்லா இடங்களிலுமே ராஜா மாதிரி இருந்திருப்பீர்கள். ராசி, லக்கினத்திலேயே புதன், கேது, சூரியன் இருந்ததால் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. எந்த குரூர கிரங்களின் பாதிப்பும் இல்லாததால் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இருந்திருக்கும்.
ரிலேசன்ஷிப்பில் கவனம்
இப்போது சுக்கிரனும், கேதுவும் ராசி லக்கினத்தில் இணைவதால் சளி பிரச்சனை அதிகமாக இருக்கும். எந்த ஆட்களுடன் பேசக்கூடாதோ அவர்களுடன் பேசும் நிலைமை ஏற்படும். ஆண்களாக இருந்தால் தவறான உறவுகள் உண்டாகும் வாய்ப்புள்ளது. பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மற்றவர்களை நம்பி மோகத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
வாக்குறுதி
குடும்ப ஸ்தானம் எனும் 2 ம் இடத்தில் சூரியனும், புதனும் இருப்பதால் வாக்குறுதிகள் கொடுக்காமல் இருப்பது நல்லது. வாக்குறுதிகள் கொடுத்தாலும் அவை நடக்காது. நாக்கில் புண், பல் எடுத்துவிட்டு புதிய பல் வைப்பது போன்றவை ஏற்படலாம். எந்த விஷயங்கள் சொல்ல வேண்டும். எதனை சொல்லக்கூடாது என்று சிந்தித்துப் பேசுவது நல்லது. நாம் பேசும் வார்த்தை நமக்கே எதிராக அமையும்.
ஆரோக்கியத்தில் கவனம்
2, 8க்குரிய பாவங்களில் கெட்ட கிரகங்களின் பார்வை இருந்தால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளதால் கவனமாக இருப்பது நல்லது. இதில் ஒரு அதிர்ஷ்டம் என்றால் லாபத்தில் குரு அமர்ந்திருப்பதுதான். பெரிய வெற்றி, விடிவுகாலம் அதுதான்.
அதிர்ஷ்டம்
எதிர்பார்க்கக்கூடிய நல்ல விஷயங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு இடத்தில் இருந்து வேலையை விட்டு இன்னொரு வேலையை சேர்வீர்கள். சிம்மத்திற்குப் பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. புதன், குரு திரிகோணத்தில் வலிமையாக அமர்ந்திருப்பது தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய செய்ய அற்புதமான நற்பலன்களைப் பெறுவீர்கள். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 70 சதவீத நன்மைகளும் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications