புரட்டாசி மாத ராசிபலன்கள் 2021: இந்த 3 ராசிக்காரர்களுக்கும் திடீர் யோகங்கள் தேடி வரும்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம். இந்த மாதத்தில் கிரகங்களின் கூட்டணி கன்னி ராசியில் இணைகிறது. கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் யோகங்கள் நிறைந்த
சென்னை: தெய்வீக அனுக்கிரகம் நிறைந்த புரட்டாசி மாதம் கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு யோகங்களும் அதிர்ஷ்டங்களும் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணம் செய்வதால் கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. கன்னி ராசி புதன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் இந்த மாதத்தில் சூரியன் செய்வாய் இணைந்து பயணம் செய்வது சிறப்பு. நவகிரகங்களின் சஞ்சாரம், கூட்டணி பார்வையால் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
புரட்டாசி பிறக்கும் போது ரிஷபத்தில் ராகு, கன்னி ராசியில் சூரியன்,புதன், செவ்வாய், துலாம் ராசியில் சுக்கிரன், விருச்சிகத்தில் கேது, மகர ராசியில் சனி, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. புரட்டாசியில் கிரகங்களின் மாற்றம் உள்ளது. கன்னி ராசியில் இருக்கும் புதன் புரட்டாசி 6 ஆம் தேதி துலாம் ராசிக்கு நகர்கிறார். 11ஆம் தேதி புதன் வக்ர ஆரம்பமாகிறது. 15ஆம் தேதி மீண்டும் கன்னி ராசிக்கு புதன் செல்கிறார். சுக்கிரன் 16ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். 25 ஆம் தேதி சனிபகவான் வக்ரம் முடிந்து நேர்கதியில் பயணம் செய்கிறார்.
புரட்டாசி மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மாதம். அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். 17-09-2020 முதல் 16-10-2020 வரை புரட்டாசி மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

வேலையில் புரமோசன்
புரட்டாசி மாதம் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது. யோகாதிபதி செவ்வாய் சூரியன் புதனோடு இணைந்து 3ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். அரச பதவி கிடைக்கும். தொட்ட காரியம் துலங்கும். தடைகள் உடைபடும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுக்கிரன் சாதகமாக பயணம் செய்வதால் பண வரவு அதிகரிக்கும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். சொத்து விசயங்களில் கவனம் தேவை. பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். சிலருக்கு நல்ல இடத்தில் கை நிறைய சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

பண வரவு
நினைத்ததை சாதிக்கப் போகிறீர்கள். காதல் விசயங்களில் வெற்றிகள் தேடி வரும். திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் தேடி வரும். உணவு விசயத்தில் கவனம் தேவை. ரியல் எஸ்டேட் தொழில் சாதகமாக இருக்கும். திருமணம் முடியும் வரை அமைதியாக இருப்பது நல்லது. வேலையில் திடீர் புரமோசன் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வேலையில் திடீர் இடமாற்றம் ஏற்பட்டால் ஏற்றுக்கொள்வது நல்லது. சனிக்கிழமையன்று ஸ்ரீரங்கநாதரை வழிபட நன்மைகள் நடைபெறும். புரட்டாசி மாதம் மொத்தத்தில் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.

சொல்வாக்கு அதிகரிக்கும்
உங்கள் ராசிநாதன் சூரியன் இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். பேச்சில் தெளிவும் கம்பீரமும் ஏற்படும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். மனதில் தைரியம் கூடி வரும். செவ்வாய் இரண்டாம் வீட்டில் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. எதிரிகள் விசயம் முடிவுக்கு வரும் அதிக அளவில் கோபத்தை கட்டுப்படுத்தவும். வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வண்டி வாகனங்கள் வாங்கலாம். விஐபிக்கள் அறிமுகம் கிடைக்கும். வாக்கு ஸ்தானாதிபதி புதன் ஆட்சி உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. சொன்ன சொல் காப்பாற்றுவீர்கள். வியாபாரிகள் வரி விசயங்களில் கவனம் தேவை.

செல்வாக்கு கூடும்
சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் செல்வாக்கு அதிகரிக்கும். காரிய வெற்றிகள் அதிகரிக்கும்.
பெரிய பொறுப்புகள் பதவிகள் தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று பாடுவீடுகள். வியாபாரத்தில் லாபம் வரும். வேலை செய்யும் இடத்தில் பளு கூடும் சமாளிப்பீர்கள். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. பல்வலி கண் வலி வர வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் தொடர்ந்து அக்கறை காட்டுங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும்.புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று கருடனை வணங்கலாம். அன்னதானம் செய்வது முக்கியமானது. நரசிம்மர் காயத்ரி மந்திரம் சொல்வது நல்லது.

வண் வாகனம் சேரும்
புதனை ராசி அதிபதியாகக்கொண்ட கன்னி ராசிக்காரர்களே, உங்கள் ராசிநாதன் உங்கள் ராசியில் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்கிறார். கூடவே சூரியன், செவ்வாய் இணைந்திருக்கின்றனர். கோபம் அடிக்கடி எட்டிப்பார்க்கும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு வேலை கிடைக்கும். சோம்பேறித்தனத்தை விட்டு விட்டு சுறுசுறுப்பாக இருங்கள். தாய்வழி உறவினர்களால் உதவிகள் தேடிவரும். சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், பண வரவு அதிகரிக்கும் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பழைய வண்டியை கொடுத்து விட்டு புது வண்டி வாங்கலாம் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கலாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

யோகங்கள் நிறைந்த மாதம்
புத ஆதிபத்ய யோகம் கூடி வந்துள்ளது மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான மாதமாக அமைந்துள்ளது. உயர்கல்வியில் சாதிப்பீர்கள். புதன் உங்கள் ராசியிலும் ஆட்சி பெற்று பயணம் செய்தாலும் சிலநேரங்களில் வக்ரமடைந்தும் பயணம் செய்கிறார். கண்களில் பிரச்சினை வரலாம். நரம்பு கோளாறுகள் வரும் என்பதால் கவனம் தேவை. பெருமாள் கோவிலுக்கு சென்று அனுமனை வழிபடுவது நல்லது. அனுமன் சாலீசா கேட்பது ஏற்றத்தையும் நன்மையையும் தரும். பதற்றத்தை தவிர்ப்பது நல்லது. பெண்கள் மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது. கர்ப்பிணிப்பெண்கள் கவனமாக இருக்கவும். ஏழை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுக்கவும்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications