Purattasi 2025: புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவு சாப்பிடக் கூடாது.. முழு விவரம் இதோ
Purattasi matha palan: ஆவணி மாதம் நிறைவடைந்து பெருமாளுக்கு உரிய மாதமான புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி, கொலு என பல்வேறு விசேஷங்களைக் கொண்ட மாதமாகும். புரட்டாசி மாதத்தில் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவுகளை பெரும்பாலும் உண்பது வழக்கம். புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை ஏன் சாப்பிடக் கூடாது என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பிறந்தது புரட்டாசி
புரட்டாசி மாதம் இன்று பிறந்துள்ளது. பெருமாள் மாதம், வைணவ மாதம், புண்ணிய மாதம், முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பொழியும் மாதம் என்று அழைக்கப்படுகிறது. மாதங்களில் 6 ஆவது மாதமாக வரக்கூடிய மாதம். சூரிய பகவான் ராசி மண்டலத்தில் 6 ஆவது ராசியாகிய கன்னி ராசியில் அமரும் மாதமே புரட்டாசி மாதம்.

பண்டிகைகள்
பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது நவராத்திரி தான். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என ஏகப்பட்ட விசேஷங்கள் வரவுள்ளன. கொழு பொம்மைகளைக் கொண்டு பூமியில் கடவுளை வைத்து மனதிலே ஏற்ற கொண்டாடக்கூடிய மாதமாகும். இந்த மாதத்தில் அம்பாளுக்கு ஏராளமான விசேஷங்கள் கொண்டாடப்படும்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மாதத்தில் முக்கியமான மஹாளய அமாவாசை. நீண்ட நாட்களாக முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்காமல் இருப்பவர்கள் புனித நதிகள், ஆற்றோரங்களில், கடலோரங்களில், குளக்கரைகளில் முன்னோர்களை நினைத்து வழிபட்டு ஆசிர்வாதம் பெறும் மாதமாகும். சூரியன் கன்னியில் அமர்ந்துள்ளதால் இந்த மாதத்தில் முன்னோர்களை நினைத்து வழிபடுவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
பெருமாள் வழிபாடு
108 திவ்ய தேசங்களிலும் பிரம்மோற்சவம், கருட சேவைகள் போன்ற அனைத்து சிறப்பு வழிபாடுகளும் நடக்கக்கூடிய மாதமாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் நெற்றியில் திருநாமம் இட்டு பெருமாளை வழிபட்டால் அற்புதமான நல்ல பாக்கியங்கள் கிடைக்கும். புரட்டாசி மாதத்திற்கு அதிபதியாக புதன் வருவதால் இந்த மாதம் மகா விஷ்ணு மாதம் என்று அழைக்கப்படுகிறது.
புதன் சைவத்திற்கு உரிய கிரகமாவார். புதன் துவர்ப்பு சுவைக்கு உரியவர். அதனால் தான் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. துளசி தீர்த்தம் போன்ற துவர்ப்பான உணவுகள் போன்றவை சாப்பிட்டு விரதம் இருந்து இறைவனை வணங்கும் அற்புத மாதமாகும்.
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவு சாப்பிடக் கூடாது என்ற கேள்வி எல்லோருக்குமே இருக்கும். புரட்டாசி மாதத்தில் சூரியனின் வெளிச்சம், வெயில் மிகவும் குறைவாக இருக்கும். இதனால், செரிமானக் கோளாறு, வயிறு தொடர்பான பிரச்சனைகள் உருவாகும் என்பதால் தான் சைவ உணவை முன்னோர்கள் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். சூட்டை கிளப்பி விடும் மாதம் இந்த மாதம்.
பொன்னுருக காய்ந்த மண்ணுருக மழை பொழியும் மாதம் புரட்டாசி மாதம். அதனால், வெயிலும் மழையும் இந்த காலகட்டத்தில் சமமாக இருக்கும். அதனால் தான் இந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்த்து, சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று அறிவியல் பூர்வமாக நமது முன்னோர்கள் ஆய்ந்தறிந்து கூறியிருக்கின்றனர்.
புதன் உப்பு சப்பு இல்லாத கிரகம் என்பதால் தான் உப்பை குறைத்துக் கொண்டு துவர்ப்பு சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. புதனுடைய அதிதேவதை பெருமாளை இந்த மாதத்தில் வழிபடுவதால் அற்புதமான மேன்மைகள் உண்டாகும்.












Click it and Unblock the Notifications