தனுசு ராசிக்கு திடீர் ஜாக்பாட்.. உச்சம் தொடும் வாய்ப்பு.. பொன்னான காலகட்டம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கிரகப் பெயர்ச்சி

2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

Rahu ketu peyarchi dhanusu Astrology

ராகு கேது பெயர்ச்சி

ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான் இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.

அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இப்போது தான் ஏழரை சனி முடிஞ்சுது, எல்லா பிரச்சனைகளும் முடிந்தது என்று நிம்மதி அடைந்தனர். ஆனால், அதற்குள் 4 இல் சனி அர்த்தாஷ்மட சனி. ராசியாதிபதி குரு 6 ஆம் இடத்தில் வந்து சிக்கிக் கொண்டார். இதனால், நோய், எதிரி, வம்பு, வழக்கில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகம் இருக்கும். 10 ஆம் பாவத்தில் கேது குருவின் பார்வையில் அமர்ந்தும் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்திருக்கும். கடன் மட்டுமே மிச்சமாக இருந்திருக்கும். 6 இல் குரு வந்தது மட்டும் உங்களுக்கு பிரச்சனை கிடையாது. 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்தில் ராகு அமர்ந்து உங்களை படாத பாடு படுத்தியிருக்கும்.

வீடு, வாகனம், மனை, போக்குவரத்தில் படாதபாடு பட்டிருப்பீர்கள். தொடர்ச்சியாக கடன் வாங்கி வாங்கி சிக்கியிருப்பீர்கள். நிறைய பேருக்கு ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்பட்டிருக்கும். வைத்தியத்தை மாற்றி மாற்றி மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பீர்கள். தற்போது சனிப்பெயர்ச்சியில் 4 ஆம் பாவத்தில் சனி அமர்கிறது. ராகு கேது பெயர்ச்சியில் இரண்டு பிளஸ் பாயிண்டுகள் உள்ளன.

லாபம் கொட்டும்

உங்களுக்கு 3 ஆம் இடம் எனும் வெற்றி ஸ்தானத்தில் ராகு பகவான் வந்து அமருகிறார். 7 ஆம் பாவத்தில் குரு அமர்ந்து ராசியைப் பார்க்கவுள்ளார். இதனால், பாவம் பலம் பெறுகிறது. குரு லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார். அதே சமயம் 3 ஆம் இடத்தில் இருக்கும் ராகுவை பார்ப்பதால் குரு சண்டாள யோகம் உண்டாகும். வெகுநாட்களுக்குப் பிறகு உங்களுக்கு வெற்றியைத் தரும் காலகட்டமாக இருக்கும்.

பிரச்சனைகளுக்கு தீர்வு

4 இல் சனி போவதால் அர்த்தாஷ்மட சனி மைனஸ் என்று எண்ண வேண்டாம். 3 ஆம் பாவத்தில் ராகு வருவது உங்களுக்கு 200 சதவீதம் நன்மையைத் தரும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அடுத்த கட்டத்துக்குச் செல்லும் அமைப்பு உண்டாகும். தொழிலில், துறையில் முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கையில் அடுத்தகட்டத்துக்குச் செல்வீர்கள். தொழிலில் விஸ்தாரம் வெற்றி, மேன்மை, பல பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டாகும்.

எல்லாமே நன்மை

நிறைய புதிய உத்திகளைக் கையாளுவீர்கள். வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு வரும். குடும்பத்தில் ஒற்றுமை, சுபகாரியம், சந்தோஷம் உண்டாகும். செவ்வாயின் நட்சத்திரத்தில் ராகு பகவான் சஞ்சாரம் செய்யும்போது பஞ்சாமதிபதியாக செவ்வாய் வருவதால் வயதை அனுசரித்து குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு தெளிவு கிடைக்கும். வேலைவாய்ப்பு, திருமணம், சுபகாரியங்களில் நன்மை உண்டாக்கும்.

வெற்றி மேல் வெற்றி

வெற்றி ஸ்தானத்தில் ராகு பகவான் குரு பார்வையில் வந்து அமருவதால் பெரிய ஜாக்பாட் உண்டாகும். இந்த காலகட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பாக்கிய ஸ்தானத்தில் கேது வந்து அமருவதால் தந்தையின் உடல்நிலை, பூர்வீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தந்தை வழி சொந்தக்காரர்களிடம் வாக்குவாதத்தை, பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டம்

வெகுநாட்களுக்குப் பிறகு நல்ல வாய்ப்புகள், வெற்றி, வெளிநாட்டு யோகம், பல பிரச்சனைகளுக்குத் தீர்வு, புதிதாக வியாபாரம் ஆரம்பிப்பது போன்றவற்றுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும். ஒரு இடத்தை விற்று புதிய இடத்தை வாங்குவீர்கள். இந்த ஒன்றரை வருட காலத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வழிபாடு

கேது பகவானுக்கு லட்சுமிநரசிம்மர் வழபாடு செய்வது நல்லது. சனி, ஞாயிறன்று ஆஞ்சநேயர் வழபாடு, சூரிய நமஸ்காரம் செய்வது நல்ல பலன்களைத் தரும். அனுமன் சாலிசா பாராயணம் செய்வது, நரசிம்மரை வழிபடுவது அமோகமான நன்மைகளைப் பெற்றுத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+