லக்கி பாஸ்கராக மாறும் விருச்சிக ராசி.. இனி அதிர்ஷ்டம் கொட்டும்.. குருவின் அருளால் ரேஞ்சே மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

கிரகப் பெயர்ச்சி

2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

rahu-ketu-peyarchi-lets-see-what-kind-of-benefits-and-remedies-for-viruchigam-scorpio-people-dur

ராகு கேது பெயர்ச்சி

ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான் இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.

ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்கும் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீனம் ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.

அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு 4 ம் பாவத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகிறார். ஏழரை சனியில் பாதி அஷ்டம சனி. அஷ்டம சனியில் பாதி அர்த்தாஷ்டம சனி. ராசிக்கு எதிரியாக வரக்கூடிய சனி பகவான் 4 ஆம் வீட்டில் அமர்ந்து இதுநாள் வரை உங்களை துவம்சம் செய்து பல்வேறு பாதிப்புகளை கொடுத்து வந்தார். 10 ஆம் பாவமாக விருச்சிகத்தைப் பார்ப்பது தொழில், எதிரி, வம்பு, வழக்கு, போட்டி, கடன் தொல்லை என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பார்கள்.

தனவரவு அதிகரிக்கும்

குரு 7 ஆம் இடத்தில் இருந்து அஷ்டம குருவாக 8 ஆம் இடத்துக்குச் செல்வதால் அச்சப்படத் தேவையில்லை. சனி பகவான் 4 ஆம் வீட்டில் இருந்து வெளியில் போவதால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. குரு அஷ்டம ஸ்தானத்தில் மறைந்தாலும் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் அமோகமான காலகட்டமாக இருக்கும். குரு ராசிக்கு 2 ஆம் வீட்டுக்கு அதிபதியான தன ஸ்தானத்துக்கும், தன காரகத்துக்கு அதிபதியாக வருவதால் தன வரவு அதிகரிக்கும்.

கடன்கள் தீரும்

வருமானத்தை அதிகரிக்கும். லாபம், தனம் வரும். பல கடன்களை அடைத்து முடிப்பீர்கள். விருச்சிகத்துக்கு அதிபதியான செவ்வாய் நட்சத்திரமான அவிட்ட நட்சத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் இடம், பிரிவினை, சொத்துப் பிரிப்பது, பூமி விஷயம், இட விஷயம், கட்டட விஷயங்கள் ஆகியவை பாதியில் நிற்பது, ஆவணப் பிரச்சனை எல்லாம் ஒவ்வொன்றாக நிவர்த்தி ஆகும்.

சொத்துப் பிரச்சனை

10 ஆம் பாவத்தில் கேது வருவதால் அரசனைப் போல வாழ்வு உண்டாகும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. கேது பகவான் உங்களுக்கு செவ்வாயைப் போல செயல்படும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனுகூலம் உண்டாகும். அப்பாவின் சொத்துகள், அவருடைய பிரச்சனைகள் தீரும். அதன் மூலம் அனுகூலம் பெறுவீர்கள். அப்பாவின் கடன்கள் அனைத்தும் தீரும்.

தொழிலில் முன்னேற்றம்

கேது பகவான் சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் போது வாழ்க்கை துணை மூலமாகவும், வெளிநாட்டு தொடர்பு மூலமாகவும், வியாபார கூட்டாளிகள் மூலமாகவும் ஆதாயம் ஏற்படும். கேது பகவான் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போது தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்தில் புதிய ஞானம், புதிய திருப்புனை, புதிய ஐடியாக்களை புகுத்தி மேலும் மேலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

வழிபாடு

குரு பார்வை கிடைப்பதால் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றிமேல் வெற்றி உண்டாகும். செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் இரு தினங்களிலும் ராகு காலங்களில் துர்கை வழிபாடு, ராகவேந்திரர் வழிபாடு செய்வது நல்லது. குறிப்பாக, செவ்வரளி மலர்கள் வைத்து பிரதான அம்மன் கோவில்களில் வழிபாடு செய்வது அபிவிருத்தியைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+