ராகு கேது பெயர்ச்சி 2023: கோடீஸ்வர யோகம்.. 2 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். அக்டோபர் மாதத்தில் ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். ராகு கேது பெயர்ச்சியினால் கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி: நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11 பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு பகவான் குருவைப் போலவும் கேது பகவான் புதனைப் போலவும் செயல்பட உள்ளனர்.

Rahu ketu peyarchi palan 2023: Rahu Ketu Kumbam and Meenam rasi palan and Parikaram

கும்பம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே... மூன்றாம் வீட்டில் உள்ள ராகு 2ஆம் இடத்திற்கும், ஒன்பதாம் வீட்டில் உள்ள கேது 8ம் இடத்திற்கும் வருகிறார்கள். ஏற்கனவே ராகு கேது இருந்த இடமும் யோகமான இடம் தான். 2ஆம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிறுப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். இதில் ராகு வருவதால் ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் சங்கடங்கள் வந்தாலும் அதையும் தாண்டி உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும். வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால், பேச்சினால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். சமயோசிதமாகச் சிந்தித்துப் பேசவேண்டியது அவசியம். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். எதிர்பாராதச் செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து போனாலும், மகிழ்ச்சிக்குக் குறையிருக்காது. தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் சிறப்பான முறையில் நடைபெறும்.

சொத்து பிரச்சினை: பூர்வீக சொத்து மற்றும் வீடு மனைகளால் பிரச்சனை வரலாம். எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந்தப்பட்ட வகையில் சுப விரையம் ஏற்படும். அன்னிய இனத்தவர்களால் அனுகூலமும் ஆதாயம் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம்.

சோதனைகளை சமாளிப்பீர்கள்: இதுநாள் வரை தடைப்பட்ட காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனி சுபமாக முடியும். கேது 8ஆம் வீட்டிற்கு வரப்போவதால் தொட்டது துலங்கும். பெண்கள், இதுநாள்வரை சோம்பலாக இருந்தீர்கள். இனி சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். நகை, பணம் போன்ற விலையுயர்ந்த பொருள்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் -வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளிக்க முடியும்.

பரிகாரம் என்ன: கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். இது வரை யாரோ நமக்கு செய்வினை வைத்து விட்டார்களோ என்று பயந்து போன உங்களுக்கு கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி குடும்பத்தில் குதூகலத்தையும், அதிக வருமானத்தையும் தருவார். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு விளக்கு போட மேலும் நன்மைகள் நடைபெறும்.

மீனம் ஜென்ம ராகு: ராகுபகவான் இது வரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிலும் கேது பகவான் எட்டாவது வீட்டிலும் சஞ்சரித்தனர். இப்பொழுது ஜென்ம ராசியில் வரும் ராகுவிற்கு சனியின் பார்வையும்,கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெருமை,ஆற்றலை குறிக்கும் இடமாகும். நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். ராகுவை சனி பார்ப்பதால் தேவையில்லாத விரைய செலவை கொடுக்கும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும்.

வேலையில் முன்னேற்றம்: வியாபாரத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். பொருளாதார நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். உங்களை சிலர் அவமதித்து பேசினாலும் அதற்கு சரியான பதிலடி கொடுப்பீர்கள். உங்களின் களத்திர ஸ்தானத்தை ராகு பார்வையிடுவதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும்.உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு கைகூடி வரும். வெளி உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். நேரம் கடந்து சாப்பிடும் வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்.

களத்திர கேது கவனம்: உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானமான 7வது வீட்டிற்கு கேது வரப்போவதால் கணவன், மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். தொழில் ரகசியங்களை யாரிடமும் வெளியிடவேண்டாம். உத்தியோகத்தில் பதவி உயரும். மேலதிகாரியை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

பரிகாரம் என்ன: ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் அதன் அடிப்படையில் அவர்களின் பெயர்ச்சிக்கு 3 மாதத்திற்கு முன்னே அவர்களின் ஆட்டத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். இனி எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள். ராகு, கேதுப் பெயர்ச்சி, கவலைகளிலிருந்து உங்களை விடுவித்து முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும். திருவோண நாளில் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்ய நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+