ராகு கேது பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெறவுள்ள 3 ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி விரைவில் நிகழவுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் சனிப்பெயர்ச்சி முடிந்துள்ளது. விரைவில் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் ராகு கேது பெயர்ச்சியால் சிறப்பான பலன்களை பெற போகும் 3 ராசிகள் குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ராகு கேது
ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி 18 மாதங்களுக்கு ஒருமுறை நிகழும். அதன்படி இந்த வருடம் ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. திருக்கணிதப்படி மே 18 ஆம் தேதியும், வாக்கிய பஞ்சாங்க படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. பொதுவாக மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகர்ந்தாலும் ராகு கேது மட்டும் பின்னோக்கி நகரும்.

உயர்வு
ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். .கிரகங்களில் ராகு மிகவும் வலிமையானது. அவர் வலிமையான கும்ப ராசிக்கு வருவதால் கீழ்நிலையில் உடல் உழைப்பை அதிகம் செலுத்தும் மக்களின் பொருளாதாரத்தில் உயர்வு இருக்கும்.
அரசியல்
கேது பகவான் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் அரசியல்வாதிகளுக்கு பயங்கர முன்னேற்றம் இருக்கும். அரசு அதிகாரிகளுக்கும் ஏற்றம் இருக்கும். எல்லாவற்றிலும் மாற்றம், முன்னேற்ம் என்று இந்த ராகு கேது பெயர்ச்சியால் அமோகமான பலன்களை பெறப் போகும் 3 ராசிகள் குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.
மிதுனம்
மிதுனம் ராசிக்கு ராகு பகவான் ஒன்பதாம் இடத்துக்கும், கேது பகவான் மூன்றாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இதனால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். கடந்த காலங்களில் இருந்த தடைகள் நிவர்த்தியாகி, எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். வாழ்க்கை முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும்.
முன்னேற்றம்
பாக்கிய ஸ்தானத்தில் ராகு வருவதும், அதில் குரு பகவான் பார்வை இருப்பதும் ராஜ யோகத்தை கொடுக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை, செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். குழந்தைகள் எல்லாவற்றிலும் முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட பயணங்களில் ஆதாயம் உண்டு.
வெற்றி
சிந்தனைகள் தெளிவடையும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். பூர்விக சொத்து சம்பந்தப்பட்ட தடைகள் நீங்கி அதனால் நல்ல பலன்கள் கிடைக்கும். சென்ற இடமெல்லாம் சிறப்பாக மாறி, எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கொட்டும். நீண்ட காலமாக திட்டமிட்ட புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்
துலாம்
துலாம் ராசிக்கு ராகு பகவான் ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் மூலம் தொட்டது துலங்கும். அடுத்தடுத்து நல்ல பலன்களால் வாழ்க்கை மொத்தமாக மாறும். பஞ்சம ஸ்தானத்தில் ராகு அமர்ந்து, குரு பார்வையும் இருப்பதால் உச்சத்துக்கு செல்வீர்கள். வீடு, பணி, தொழிலில் ஆகியவற்றில் எதிர்பார்த்த இட மாற்றங்களால் மனம் மகிழும்.
அதிர்ஷ்டம்
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் குரு இருப்பதால் எல்லாவற்றிலும் பிரம்மாண்ட வெற்றிகளை குவிப்பீர்கள். வாழ்க்கை துணை மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த பிரச்னைகள் சரியாகி அன்யோன்யம் அதிகரிக்கும். அதிர்ஷ்டம், ஜாக்பாட் கொட்டும்.
மீனம்
மீனம் ராசிக்கு கடந்த மாதம் ஜென்ம சனி தொடங்கியது. தற்போது ராகு கேது பெயர்ச்சியில் அவர்கள் நல்ல பலன்களை பெறப் போகிறார்கள். சனி கொடுக்கும் கஷ்டங்களை, ராகு கேது அரணாக இருந்து பாதுகாக்க போகிறார்கள். அதிர்ஷ்ட தேவதை வீடு தேடு வருவார்.
ஆரோக்கியம்
வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களை கொடுக்கும் அருமையான காலகட்டம். ஜென்மத்தில் சனி இருப்பதால் எல்லாவற்றிலும் சற்று மெதுவாக சென்றாலும் காரியங்கள் நிறைவேறும். வெளிநாட்டு தொடர்புகளால் ஆதாயம் உண்டு. சமூகத்தில் அந்தஸ்து கூடும். பெயர், புகழ் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைகள் நிவர்த்தியாகும். சுப காரியங்கள் கைக்கூடும்.
-
Meenam: மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்.. பணம், சொத்து, வெற்றி தேடி வரும்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications