வெற்றி மேல் வெற்றி வரும்.. கும்ப ராசிக்கு வரும் அதிர்ஷ்டம்.. குடும்பத்தில் இந்த விஷயத்தில் உஷார்

Subscribe to Oneindia Tamil

Rasi palan this week: அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்பம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

rasi-palan-this-week-what-kind-of-benefits-will-get-kumbam-people-from-oct-12-to-18

சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. பெண்களை பெருமைப்படுத்தக் கூடிய நவராத்திரி வரக்கூடிய அற்புதமான மாதம். அக்டோபர் 11 ஆம் தேதியான இன்று நவராத்திரி ஆரம்பிக்கிறது. நவராத்திரி 9 தினங்களில் தேவிகளை வழிபாடு செய்வது ஏராளமான நன்மைகளைத் தரும். இந்த வாரத்தில் ஐப்பசி மாதமும் பிறக்கவுள்ளது.

அந்த வகையில், அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான (புரட்டாசி 25 முதல் ஐப்பசி 1 ஆம் தேதி வரை) காலகட்டத்தில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன்

கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கக்கூடிய அமோகமான காலகட்டம். நிறைய பிரச்சனைகள் தீரும். படிப்படியாக முன்னேற்றம் பெறக்கூடிய காலகட்டம். டிசம்பர் மாதம் வரை மட்டுமே அழுத்தங்கள் இருக்கும். நவம்பர் பாதியில் இருந்தே அழுத்தம் குறைவதைக் காண்பீர்கள். கும்பம், மகர ராசியினர் வீட்டில் சிறிய அறுவை சிகிச்சைகள், தீ விபத்து போன்றவை நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது.

முயற்சிகளில் வெற்றி

நிறைய மாற்றங்கள் நடைபெறக்கூடிய காலகட்டம். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சுக்கிரன் தன் வீட்டிலே இருந்து வக்கிரமாவதால் திருமணம், மறுமணம் நடக்கக்கூடிய அமைப்பு உள்ளது. ஆரோக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் தீரும். நீங்கள் முயற்சி செய்யும் வாய்ப்புகள் இப்போது கிடைக்கும். எல்லா விஷயத்திலும் வெற்றி பெறுவீர்கள். வழக்குகளில் சாதகமான நிலை ஏற்படும்.

கவனம்

பெற்றோர், பெரியோர்களை மிகுந்த கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. பரம்பரையாக இருக்கும் நோய் பாதிப்புகளில் மிக கவனம் தேவை. ரத்தத்தில் பரவும் தொற்று நோய், ப்ளூ, சளி தொந்தரவுகளில் கவனம் தேவை. குடும்பத்தில் துணையின் ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பரிகாரம்

மன அழுத்தம் ஏற்படும். குழப்பமான மன நிலை இருந்து கொண்டே இருக்கும். இஷ்ட தெய்வ கோயில்களுக்கு தினமும் சென்று வழிபாடு செய்வது நன்மை பயக்கும். தியானம், யோக போன்றவற்றில் ஈடுபடுவது நன்மை பயக்கும். மந்திர ஜெபம் செய்வது நன்மை பயக்கும். வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது சகலவித பிரச்சனைகளையும் போக்கும்.

வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை தோறும் மாகன்கள் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 85 சதவீதம் நன்றாக இருக்கும். மகாலட்சுமி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+