சிம்ம ராசிக்கு செம அதிர்ஷ்டம்.. எந்தெந்த விஷயங்களில் யோகம் தெரியுமா?.. முழு விவரம்
Rasi palan this week: செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் சிம்மம் ராசிக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த வாரத்தில் ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் ஆரம்பிக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்கு உகந்த மாதமாகும். சிம்மத்தில் இருக்கும் சூரிய பகவான் கன்னி ராசிக்கு வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம், கன்னி மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி மஹாளயபட்சம் ஆரம்பிக்கிறது. மஹாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதி வருகிறது. இந்த நாளில் ஏழைகளுக்கு உணவு தானமாக அளிப்பது, அரிசி பருப்பு வாங்கி கோயிலுக்கு கொடுப்பது நன்மை பயக்கும்.
இதைத்தொடர்ந்து, அக்டோபர் 11 ஆம் தேதி நவராத்திரி ஆரம்பிக்கிறது. அந்த வகையில், செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையிலான (ஆவணி 28 முதல் புரட்டாசி 3) காலகட்டத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்
சிம்மம் ராசியினருக்கு பொருளாதாரத்தில் மிக முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்படும். பல் சிகிச்சை செய்வது, ஞானப்பல் பிரச்சனைகள் போன்ற பாதிப்புகள் வரும் அமைப்புள்ளது. பணத்தை கொடுதது சிக்கிக் கொள்வது, சண்டை போட்டு ஒரு காரியத்தை முடிப்பது என ஒரு மாதம் பிரச்சனைகள் இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம், பேரக் குழந்தைகள், மருமகன், மருமகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது.
திருமண யோகம்
யாரையும் நம்பி பணத்தைக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. எந்த காரியத்தை செய்தாலும் அதனை 2 வாரத்துக்கு தள்ளிப்போடுவது நன்மை. 3, 4 ஆம் இடம் நன்றாக இருக்கிறது. லாப ஸ்தானம் அற்புதமாக இருக்கிறது. எல்லா விஷயங்களும் அற்புதமாக நடக்கும். திருமண யோகம் உண்டாகும். வாக்குறுதி கொடுப்பதை 15 நாட்களுக்குத் தவிர்ப்பது நல்லது.
சிக்கல் வரும்
வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் உறவுகள், நட்புகளை காயப்படுத்தாமல் இருப்பது நன்மை பயக்கும். மகிழ்ச்சியுடன் இருப்பது மேன்மையைத் தரும். நிறைய நன்மைகள் நடக்கும். ரத்த பந்த உறவுகள், உறவினர்களால் நிறைய சிக்கல்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சூரியன் பார்வை சனிக்கு இருப்பதால் அஷ்டமசனியால் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும்.
கவனம்
வண்டி, வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. படிக்கட்டுகள், வழுக்கலான இடங்கள், கட்டில், வேலை ஆட்கள் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. தொலைதூரப் பயணங்கள், தெரியாத நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. நரம்பு, காது, மூக்கு, தொண்டை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
சனிக்கிழமை தோறும் விநாயகர் வழிபாடு, பெருமாள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். வார்த்தைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பதட்டத்தை தவிர்ப்பது நல்லது. சிவபெருமான் கோயிலில் வில்வம் கொடுத்து வழிபாடு செய்வது நன்மையைத் தரும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 75 சதவீதம் நன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
