ரிஷப ராசிக்கு விட்டு போனதெல்லாம் கிடைக்க போகுது.. நம்பிக்கையளிக்கும் நவம்பர் மாதம்
நவம்பர் மாத ராசி பலன்: 2025 ஆம் வருடம் இப்போதுதான் பிறந்தது போல உள்ளது. அதற்குள் 11வது மாதமான நவம்பர் மாதம் பிறக்க போகிறது. இந்த வருடத்தில் ஏற்கனவே கிரக நிலைகளில் ஏராளமான மாற்றங்களை சந்தித்துவிட்டோம். நவம்பர் மாதத்திலும் கிரக நிலைகளில் மாற்றங்கள் காணப்படும். இது சில ராசிகளுக்கு நற்பலன்களை கொடுக்கும். சில ராசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலையும் வரலாம். நவம்பர் மாதம் ரிஷபம் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்களை கொடுக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் கடக ராசியில் உச்ச பலத்தில் இருக்கிறார். அவர் நவம்பர் 11 ஆம் தேதி வக்ர கதி அடைகிறார். பொதுவாக சில ராசிகள் குரு பகவான் உச்சமடைந்தாலே நல்ல பலன்களை பெறுவார்கள். சில ராசிகள் குரு பகவான் உச்சத்தில் இருந்து வக்ரமானால் நல்ல பலன்களை பெறுவார்கள். மேலும் இந்த நவம்பர் 28 ஆம் தேதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

நவம்பர் மாத பலன்கள்
சூரியன், சுக்கிரன் இணைந்து மூல திரிகோண வீட்டில் இருக்கிறார்கள். இதில் சூரியன் நீசமடைந்தாலும் நீட்ச பங்க ராஜயோகம் கிடைக்கப் போகிறது. மேலும் சுக்ரன், புதன் இணைந்து லட்சுமி நாராயண யோகம் தரப்போகிறார்கள். சூரிய பகவான் 16 ஆம் தேதிக்கு பிறகு செவ்வாயின் வீடான விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அதே வீட்டில் 26 ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அங்கு செவ்வாய் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். தவிர குருவின் பார்வையும் உள்ளது.
சூரியனும், செவ்வாயும் இணைவது மிகப்பெரிய யோகத்தைக் கொடுக்கும். இதனால் அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் மிகப்பெரிய ஏற்றம் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல யோகம் கிடைக்கும். இந்த கிரக நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் ரிஷபம் ராசிக்கு கிடைக்கும் பலன்களை காணலாம்.
ரிஷபம்
ரிஷபம் ராசி மற்றும் ரிஷப லக்னத்தினருக்கு உங்களின் ராசி அதிபதியான சுக்கிரன் ஆறாம் வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கிறார். பொதுவாக ஆட்சி பெற்ற, உச்சம் பெற்ற கிரகங்கள் மறைவு ஸ்தானத்தில் இருந்தாலும் யோக பலன்களை கொடுக்கும். உங்கள் ராசியாதிபதியான சுக்ரன் ஆறாம் வீட்டில் லட்சுமி நாராயண யோகத்துடன் ஆட்சி பலத்தில் இருக்கிறார். இது நீங்களே எதிர்பார்க்காத அற்புதமான பலன்களை தரும்.
புகழ்
கடன் சுமை குறையும். கடந்த காலங்களில் தடைபட்ட, இழுபறியாக இருந்த காரியங்கள் தற்போது நிறைவேறும். உங்கள் பெயர் புகழுக்கு பங்கம் ஏற்பட்ட இடங்களில் தற்போது பெயர், புகழ் அதிகரிக்கும். பெயர், புகழ் மட்டுமல்ல நீங்கள் இழந்த பணம், சொத்து எல்லாவற்றையும் மீட்கும் மாதம் இது. மருத்துவ செலவுகள் குறையும். தாயாரின் ஆரோக்கியத்தில் சற்று முன்னேற்றம் இருக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகளும் விலகும்.
வழக்குகள்
மனதில் இருந்த குழப்ப நிலை மாறி, செய்யும் காரியங்களில் எல்லாம் வெற்றி வந்து சேரும். ராசி அதிபதி ஆறாம் இடத்தில் இருப்பதால் உத்யோகம், தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். புதிய உத்யோகம் தேடுவோர், உத்யோகத்தில் மாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். சொந்த வீடு கனவு நனவாகும். நிலம், வீடு போன்ற சொத்து சேர்க்கை இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்த கடன்கள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
நிம்மதி
பண வரவு நன்றாக இருக்கும். திருமண தடைகள் விலகும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் விலகி, அந்யோநியம் கூடும். மனதில் தெம்பு அதிகரித்து உற்சாமாக வலம் வருவீர்கள். நிம்மதியான ஓய்வு கிடைக்கும். முதலீட்டில் லாபம் நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு செலவு செய்வதற்கான சூழல் உருவாகும். பணம், கடன் சார்ந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் வீடு அருகில் உள்ள முருகன் கோயில் சென்று வழிபடுவது நற்பலன்கள் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications