Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. வீடு, நிலம், சொத்துகளைக் குவிக்கும் யோகம்
வார ராசி பலன்: நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு வரக்கூடிய மாதமே கார்த்திகை மாதம். செவ்வாய் வீட்டிற்கு சூரியன் வரும் மாதம். கார்த்திகையில் மிக பிரசித்திபெற்ற விசேஷம் கார்த்திகை தீபம், சபரிமலைக்கு மாலை போடுவது. செவ்வாய் வீட்டிற்கு சூரியன், அதாவது பகை வீட்டிற்கு சூரிய வரும் காலகட்டம்.
அந்த வகையில், நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு உங்களுடைய செல்வாக்குகள் கூடும் காலகட்டம். படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவுக்கான உத்தரவாதம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்திலும், துணை விஷயத்திலும் கவனமாக இருப்பது நல்லது. சிறிதாக செய்யக் கூடிய வாக்குவாதங்கள் கூட நிம்மதியை குலைக்கும் என்பதால் கவனமாகப் பேசுவது நல்லது.
தொழிலில் அனுகூலம்
குடும்பத்தில் மற்றவர்கள் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்களும் தலையிடாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத சங்கடங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள் பெரிய அளவிலான சந்தோஷத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும்.
சுப விரய யோகம்
வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். நல்ல லாபங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் வந்து சேரும். பதவி உயர்வில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். சுப விரயங்கள் நடக்கும் காலகட்டம். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தடைகள் நீங்கும்
திருமணத்தில் இருந்து வந்த தடைகள், குழந்தை பாக்கியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நல்ல வரன்கள் கிடைக்கும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை ஏற்படும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்ற நன்மைகள் ஏற்படும். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள், ஆசைப்பட்ட விஷயங்கள் அனைத்தும் நடக்கும் காலகட்டம். சமுதாயத்திலும், குடும்பத்திலும் உங்கள் செல்வாக்குகள் அதிகரிக்கும் நல்ல காலகட்டம்.
வழிபாடு, பரிகாரம்
செவ்வாய்க்கிழமைகளில் மதிய வேளையில் சாப்பாடு, எலுமிச்சை ஊறுகாய் தானம் கொடுப்பது நன்மையைத் தரும். பொருள்கள் காணாமல் போவது, அதிக விரயம் ஏற்படுவதைத் தடுக்கும். கார்த்திகை மாதம் முழுவதும் இதனை செய்து கொள்வது உங்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தும். முருகர் வழிபாடு செய்வதும், சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது அல்லது படிப்பது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
-
ஜூன் மாத பலன்: ரிஷப ராசி வாழ்க்கையில் ஏற்பட போகும் திருப்பம்.. தூக்கிவிடும் சுக்கிரன் -
குருப்பெயர்ச்சி 2026: பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? குரு அருளால் அதிர்ஷ்ட மழை! -
ஜூன் மாத பலன்: மேஷ ராசிக்கு ஜூனில் வரப்போகும் சூப்பர் மாற்றம்.. நினைத்தது நிறைவேறும் யோகம் -
குருப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு என்ன பலன்? யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications