Rasi Palan This Week: சுக்கிரனின் அருளால் அதிர்ஷ்டம் பெறும் ரிஷபம்.. சொந்த தொழில் தொடங்கும் யோகம்
Rishabam Rasi Palan: பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, தை 19 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷபம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சூரியன் இருப்பதால் தேவையில்லாத டென்ஷன், அழுத்தம் போன்றவை ஏற்படும். இளைய சகோதரன், சகோதரி மூலமாக பிரச்சனைகள் வரலாம். வீட்டில் தேவையில்லாத பிரச்சனை, ஈபி பிரச்சனை, தீ விபத்து போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தாயின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.
வண்டி, வாகன யோகம்
வேலையில் டென்ஷன், குடைச்சல் இருந்தாலும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சுக்கிரனும், புதனும் சேர்ந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். நிறைய பேருக்கு பயணங்கள் ஏற்படும். புதிய வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. அலுவலகம் மூலமாக சில நன்மைகள் கிடைக்கும். தேவையில்லாத மன உளைச்சல், பிரச்சனைகள் சரியாகும்.
பணவரவு
தொழில் ஸ்தானம் பலமாக இருப்பதால் பணத்திற்குப் பஞ்சமே இருக்காது. சுக்கிரன், புதனுக்கு குரு பார்வை இருப்பதால் பெரிய வெற்றிகளைக் கொடுக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய தொழில் தொடங்குவது, வியாபாரம் தொடங்கும். யோகம் உண்டாகும். மனம் ரீதியாக, உளவியல் ரீதியாக பல பிரச்சனைகள் சரியாகக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
முருகர் வழிபாடு
வேலையைத் தவிர மற்ற விஷயங்கள் கொஞ்சம் சிறிது பிரச்சனையைக் கொடுக்கும். தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழுபறியாக இருந்த விஷயங்கள் நீங்கும். முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். காது, மூக்கு, தொண்டை, பல் தொடர்பான ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
தொழில்
தொழிலில் அற்புதமான அமைப்பு ஏற்படும். கூட்டுத் தொழிலில் இருந்து தனித்தொழில் தொடங்கும் யோகம் உண்டு. தாய் வழி உறவு, தந்தை வழி உறவு ஏற்றம் ஏற்படும். தேவையில்லாத மந சங்கடங்கள் குறையும். உடனிருந்தவர்கள், கூட்டாளிகள் திடீரென மன ஸ்தாபங்களையோ, கஷ்டங்களையோ ஏற்படுத்துவார்கள். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நடக்கும். செல்வாக்கு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.












Click it and Unblock the Notifications