Rishabam Rasi Palan: ரிஷப ராசியினரின் கடன் பிரச்சனைக்கு எண்டு கார்டு.. இனி அதிர்ஷ்டம் மட்டும்தான்

Subscribe to Oneindia Tamil

செப்டம்பர் மாத பலன்: ஆகஸ்ட் மாதம் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான இந்த காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

நவக்கிரகங்களில் உள்ள ஒன்பது கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒரு சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், ஒரு சில ராசியினருக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன், புதன், செவ்வாய் மற்றும் சூரியன் ஆகிய 4 கிரகங்களும் தங்கள் நிலையை அடுத்தடுத்து மாற்றுகின்றன.

rishabam-september-month-rasi-palan-rishabam-rasi-people-will-get-good-benefits-during-this-month

செப்டம்பர் 13 ஆம் தேதி துலாம் ராசியில் செவ்வாய் பெயர்ச்சியாகிறார். செப்டம்பர் 14-ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரனுன் பெயர்ச்சியாகி புதனுடன் இணைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் லட்சுமி நாராயண யோகத்தை உண்டாக்குகின்றன. செப்டம்பர் 15 ஆம் தேதி கன்னி ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்களும் நிகழ்கின்றனர். செப்டம்பர் மாதம் நிகழும் இந்த கிரக மாற்றங்களால் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இழுபறியாக இருந்த நிலைமைகள் அனைத்தும் படிப்படியாக மாறும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், சமுதாயத்திலும் காப்பாற்றக் கூடிய அமைப்பு உள்ளது. பழைய கடன்களை அடைக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். ரத்தத்தில் பரவும் நோய்களில் கவனம் தேவை. சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

குழப்பம் தீரும்

40 வயதைக் கடந்தவர்கள் லிவர் செயல்பாடு தொடர்பான பரிசோதனையை மேற்கொள்வது நல்லது. மனக் குழப்பம் தீரும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். குருவின் பார்வை 10 ஆம் இடத்துக்கு இருப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் அற்புதமான யோகம் உண்டாகும். நீங்களே ஏதாவது தவறு செய்தால் மட்டுமே பாதிப்புகள் வரும்.

அனுகூலம்

மற்றபடி அற்புதமான காலகட்டமாக இருக்கும். எல்லா விதத்திலும் அனுகூலம் உண்டு. வண்டி, வாகனங்களை மாற்றி மகிழ்வீர்கள். நிலம், வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களைச் செய்வீர்கள். நிலம் வாங்குவது, வீடு புதுப்பிப்பது, வீடு இடிப்பது, பண்ணை வீடுகள் கட்டுவது போன்றவற்றை செய்து மகிழ்வீர்கள். நீண்ட நாள்களாக பேசி வந்தாலும் இதனை செய்யாமல் இருப்பீர்கள்.

கோபம் வேண்டாம்

ஆனால், கைகூடாமல் இருந்திருக்கும். வரும் 15 நாட்களில் இவை தொடர்பான அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியைத் தரும். ஆசைகளை எல்லாம் முயற்சிகளால் செய்து முடிப்பீர்கள். வார்த்தைகளில் மட்டும் மிகுந்த கவனம் தேவை. உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவதை தவிர்ப்பது நல்லது. துர்கையை மனதாரப் பிரார்த்தனை செய்வது, வழிபடுவது பெரிய சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+