Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பேச்சுதான் உங்களுக்கு பலமே
வார ராசி பலன்: செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான ஆவணி 30 முதல் புரட்டாசி 5 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் பிறக்கவுள்ளது. புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரியது. சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 15 முதல் 21 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. அவர்களிடம் எந்தவொரு விஷயத்துக்கும் வாக்குவாதம் செய்யாமல் இணக்கமாகச் செல்வது நன்மை பயக்கும். பிள்ளைகள் வாகனங்கள் செல்லும்போது கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு போன்றவற்றில் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் காணப்படும்.
கடன் தீரும்
பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். ஒரு நாள், இரண்டு நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் பூரண குணமடைந்து வீடு திரும்புவீர்கள். இடாற்றம், தொழில் மாற்றம், வியாபார மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து விதமான மாற்றங்களும் உங்களுக்கு நடக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும்.
மாற்றங்கள்
வரும் மாற்றங்களைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அதன் மூலமாக நல்ல ஏற்றங்களைப் பெறுவீர்கள். பெரிய நம்பிக்கையும், பலமும் ஏற்படும். ஏற்றம் நிறைந்த நேரம் இது. வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறும் நல்ல காலகட்டம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் அமருவதாலும், சனி வக்கிரப் பார்வை இருப்பதாலும் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
குடும்பம்
பிள்ளைகளுக்கு நரம்பு பாதிப்பு, தோல் அலர்ஜி, காய்ச்சல் வருவது, அதற்காக செலவு செய்யும் சூழல் உணடாகும். பூர்வீக சொத்து பிரச்சனை, அரசு சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. குடும்ப ஸ்தானத்தில் குரு இருப்பதால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உங்கள் பேச்சால் அனைத்துப் பிரச்சனைகளையும் சாதுரியமாக முடிப்பீர்கள்.
ஆரோக்கியம், வழிபாடு
முதுகு வலி, வயிற்றில் வரும் சிறிய பிரச்சனைகள் கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. அடிவயிறு, கழிவுப் பாதை தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. அபிராமியில் 40, 59, 75 ஆகிய பாடல்களைப் படிப்பது நல்லது. சந்தோஷம், பொருளாதாரம் ரீதியாக 80 சதவீதமான நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டம். பெருமாள் வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களையும், மாற்றத்தையும், ஏற்றத்தையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications