கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. மேஷ ராசிக்கு ராஜ கிரகங்களால் நடக்கப் போகும் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

பெயர்ச்சி பலன்கள்: ஜோதிடத்தில் சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சிகளும் நிகழ்ந்துவிட்டன. இந்த 4 கிரகங்களின் பெயர்ச்சியும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த கிரக பெயர்ச்சிகள் மேஷ ராசிக்கு கொடுக்க போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

2025 ஆம் வருடம் ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த வருடத்தில் சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய 4 முக்கிய கிரக பெயர்ச்சிகளும் நடைபெற்றுள்ளன. ஜோதிட ரீதியாக இதை ராஜ கிரகங்கள் என்று சொல்வார்கள். பொதுவாக சனிப்பெயர்ச்சி 2.5 வருடங்களுக்கு ஒருமுறையும், ராகு கேது 1.5 வருடங்களுக்கு ஒருமுறையும், குரு பெயர்ச்சி 2 வருடங்களுக்கு ஒரு முறையும் நடைபெறும்.

Rasi Palan Mesham

அதன்படி இந்த வருடம் சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதியும், குரு பெயர்ச்சி மே 14 ஆம் தேதியும், ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதியும் நிகழ்ந்துள்ளன. சனி பகவான் மீன ராசியிலும், குரு பகவான் மிதுன ராசியிலும், ராகு கும்ப ராசியிலும், கேது சிம்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகியுள்ளனர். அடுத்த 2 வருடங்களில் இது 12 ராசிகளிலும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.

மாத கிரகங்கள் பெயர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருந்தாலும், நமக்கான நல்லது கெட்டதில் இந்த வருட கிரகங்களின் அமைப்பு மிகவும் அவசியம். அதன் காரணமாக தான் வாழ்க்கையில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, இந்த கிரகங்களின் அமைப்புப் பற்றி ஆலோசிக்கிறார்கள். இந்தப் பதிவில் இந்த 3 கிரகங்களின் பெயர்ச்சிகள் மேஷ ராசியில் ஏற்படுத்த உள்ள தாக்கத்தை விரிவாக பார்க்கலாம்.

மேஷம்

மேஷம் ராசிக்கு ஏழரை சனி தொடங்குகிறது. இதை நினைத்து கவலைப்பட வேண்டாம். சனி பகவான் உங்களுக்கு பாதகாபதி ஆவார். சனி பெயர்ச்சியால் உங்களுக்கு நல்ல பலன்கள் தான் கிடைக்கும். உங்களின் கடுமையான முயற்சிக்கு கை மேல் பலன் கிடைக்கும். உங்களின் நேரத்தின் அருமையை சனி பகவான் காட்டி விடுவார். கடன் சுமை சற்று குறையும். பண வரவு இருக்கும்.

சனி பகவான் 12 ஆம் இடத்திலும், குரு பகவான் 3 ஆம் இடத்திலும், ராகு பகவான் 11வது இடத்திலும், கேது பகவான் 5 ஆம் இடத்திலும் இருக்கிறார்கள். விரய செலவுகள் இருந்தாலும் சனி பகவானால் வருமானமும் இருந்து கொண்டே இருக்கும். தொழிலில் உங்களின் ஆர்வம் அதிகரிக்கும். குரு மறைவு ஸ்தானத்தில் இருக்கிறார். ராசிக்கு 12 ஆம் இடத்துக்குரியவர் 3 ஆம் இடத்துக்கு வருவது நல்ல பலன்களையே கொடுக்கும்.

குரு பகவான் பாக்கியம் மற்றும் லாப ஸ்தானத்தை பார்க்கிறார். இது அற்புதமான பலன்களை கொடுப்பார். தெளிவான மன நிலை கிடைக்கும். காரியங்களில் தெளிவாக திட்டமிட்டு வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். குருவால் சுப காரிய தடைகள் நிவர்த்தியாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். தொழிலில் புதிய கூட்டாளிகள் அமைவார்கள்.

சனியின் வீடான 11 வது இடத்தில் ராகு பகவான் அமர்ந்திருப்பதும் நல்ல பலன்களையே கொடுக்கும். நிலம் சார்ந்த பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். பூர்வீக சொத்தில் இருந்த தடைகள் விலகும். வம்பு, வழக்குகளில் தீர்வு கிடைக்கும். வயதானவர்களுக்கு இந்த காலகட்டம் நல்ல பலன்களையே கொடுக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்ட காலமாக ஆசைப்பட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள்.

கேது பகவான் 5 ஆம் இடத்தில் இருப்பதால குழந்தைகள் உறவில் மனக்கசப்பு ஏற்படும். குழந்தைகள் விஷயத்தில் முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். அதில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். குழந்தைகளிடம் கோபத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு சொத்து கொடுக்கும் முடிவை இந்த காலத்தில் தள்ளி வைப்பது முக்கியம்.

சனி பகவானால் அலைச்சல், பணிச்சுமை அதிகரிக்கும். தூக்கமின்மை, வயிறு சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் இருக்கும். பெண்கள் மாதவிடாய் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். எனவே ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் அவசியம். முருகனை வழிபடுவதாலும், கந்த சஷ்டி கவசம் உச்சரிப்பதாலும் பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+