சனிப்பெயர்ச்சி சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?.. அஷ்டம சனியில் இருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை?
சனிப்பெயர்ச்சி பலன்கள்: திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷ ராசியினருக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதிமான், கர்மக்காரகன், முடவன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். சிம்ம ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்தில் அதவாது 8 ஆவது இடத்துக்கு சனி போகிறார். லக்னத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சிம்ம ராசியினருக்கு சுய ஒழுக்கம், கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தவறான இடங்கள், தெரியாத இடங்கள், யாரென்று தெரியாதவர்களின் பிரச்சனைகளுக்காக செல்வதை தவிர்ப்பது நல்லது. அவமானம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எடுத்த காரியங்களில் வெற்றிகள் தடைபடுவதற்கான வாய்ப்புள்ளது.
வேலையில் பிரச்சனை
வேலையில் மன அழுத்தம், பணிச் சுமை உண்டாகும். அடுத்த இரண்டரை வருடத்துக்கு வேலையில் சுமை ஏற்படும். இரவு நேரத்தில் வேலை செய்வது, ஊரை விட்டு வெளியேறுவது, உயரதிகளால் பிரச்சனை போன்றவை ஏற்படும். கடுமையான மனப்பான்மை கொண்ட உயரதிகாரிகளிடம் வேலை செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். மனதில் சமநிலையற்ற தன்மை உண்டாகும்.
மிகப்பெரிய பாதிப்பு இல்லை
கடந்த இரண்டரை ஆண்டுகாலம் கடகத்துக்கு இருந்த நிலைமை சிம்மத்துக்கு ஏற்படாது. குரு பார்வை கும்பத்தின் மேல் விழுவதால் உங்களுக்கு வரும் பிரச்சனைகள் பெரிதளவில் இருக்காது. லக்னத்துக்கு 11 என்பது பெரிய வெற்றி, லாப ஸ்தானம். அடுத்த ஒரு வருடத்துக்குப் பிரச்சனை என்பது இல்லை. அதற்கடுத்த ஒரு வருடம் தான் பிரச்சனை ஏற்படும்.
வெற்றிகளைக் குவிக்கும் நேரம்
குரு லாப ஸ்தானத்தில் அமருவதால் தடையைக் கொடுத்து வெற்றியைத் தருவார். முதலில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். பொறுமையாகவும், நிதானமாகவும் இருந்தால் வெற்றியைக் காண்பீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின், உங்களின் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. மர்ம உறுப்புகளில் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
பேச்சில் கவனம்
அஷ்டமத்தில் சனி வருவதால் பேச்சில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். முகம் சுழிக்கும் வார்த்தைகள், எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அமைதியாக இருந்தால் நிறைய விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு உணவளிப்பது உங்களுக்கு அருமையான பலன்களைத் தரும். மாணவர்களுக்கு கல்விக்கான தான தர்மங்களைச் செய்வது நல்லது. ஒரு நாளாவது மெளன விரதம் இருப்பது நல்லது. சனி அல்லது ஞாயிறு அன்று மெளன விரதம் இருப்பது நல்லது. சுவாமியை 1 நிமிடம் முட்டங்கால் போட்டு அமர்ந்து சுவாமியை வழிபட்டு, பின்னர் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வது நல்ல பலன்களைத் தரும்.
வழிபட வேண்டிய தெய்வம்
திருச்செந்தூர் முருகனை வழிபடுவது நல்லது. ஆஞ்சநேயருக்கு வியாழக்கிழமை தோறும் செந்தூரம் தானமாக அளிப்பது நல்ல பலன்களைத் தரும். தியானம், யோகா செய்வது நல்ல பலன்களைத தரும்.
மதிப்பெண்
மகிழ்ச்சி, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் 100க்கு 70 மதிப்பெண் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications