சனிப்பெயர்ச்சியில் தங்கம் வாங்கி குவிக்கும் 3 ராசிகள் யார் தெரியுமா?.. தங்க மழை பெய்ய போகுது
சனிப்பெயர்ச்சி: ஒன்பது கிரகங்களில் வலிமையான கிரகம் என்றால் சனி பகவான் தான். இந்த சனி பகவான் மார்ச் 29 ஆம் தேசி கும்பத்தில் இருந்து மீனத்துக்கு பெயர்ச்சியாகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் யோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி வருகிற மார்ச் 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு.. அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம்.

12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள். சனியின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். சனியால் பாதிப்பு உள்ளதை போல, சில நன்மைகளும் உள்ளன.
அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் பொன் வரவை பெறும் ராசியினர் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். சனிப்பெயர்ச்சியில் 3 ராசியினர் தங்கத்தை வாங்கி குவிக்கப் போகின்றனர்.
சனி பகவான் பொருள் வரவைக் காட்டிலும் பொன் வரவை தரக்கூடியது. 2025 ஆம் ஆண்டின் திருக்கணிதத்தின்படியும் வரக்கூடிய சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சியையும் கணக்கில் கொண்டு பிரசன்ன அடிப்படையில் விருச்சிகம், தனுசு, மகரம் ராசிக்காரர்கள் பஞ்சம சனியில் அணிகலன்கள் வாங்கும் யோகம் உண்டு. ஒரு குண்டுமணி தங்கத்தையாவது வாங்குவது உங்களுக்கு யோக பலன்களைத் தரும். சேமிப்புக்குப் பின் செலவு என்ற யோக அமைப்பில் வாங்கக்கூடிய அதிஷ்டம் உண்டு.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு பஞ்சம சனி நடைபெறவுள்ளது. எந்த வகையிலும் பொருளை முதலீடு செய்யாவிட்டால் உங்களுக்கு வேறொரு வகையில் செலவைத் தருவதற்கான அபாயம் உண்டு. விருச்சிகம் செவ்வாயின் வீடாக இருந்தாலும் திருக்கணிதத்தின்படியும், குருப்பெயர்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் உங்களுக்கு தங்கம் வாங்குவதற்கான யோகம் உண்டு. இந்த காலகட்டத்தில் நீங்கள் தங்கத்தை வாங்குவது உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களைக் கொடுக்கும். மேலும் மேலும் தங்கம் வாங்குவதற்கான முயற்சியை உண்டாக்கும். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும்.
தனுசு: தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி நடைபெறவுள்ளது. தனுசு குருவின் வீடாக இருந்தாலும், குரு சனி சேர்க்கை, குரு சனி பார்வை உங்களுக்கு குரு சண்டாள யோகத்தை உண்டாக்கினாலும் உங்களுக்கு தங்கம் வாங்குவதற்கான யோகம் உண்டு. 4 ஆம் இடமான தாய், முயற்சி ஸ்தானம். நீங்கள் முயற்சி செய்தால் தங்கத்தை சேர்க்கும் யோகம் உங்களுக்கு உண்டாகும். உபயோகப்படுத்தும் தங்கத்தை மாற்றுவது, புதிய தங்கத்தை வாங்குவது உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். படிப்படியாக தங்கத்தை வாங்கும் யோகத்தை உங்களுக்கு சனி பகவான் அள்ளிக் கொடுப்பார்.
மகரம்: மகர ராசியினருக்கு சகாய சனி. கடந்த காலங்களில் தகரமாகிப்போன மகர ராசியில் சஞ்சரித்து வந்த சனி பகவான் கும்பத்துக்கும், தற்போது கும்பத்தில் இருந்து மீனத்துக்கும் போவதால் உங்களுக்கு தங்கம் வாங்குவதற்கான யோகம் உண்டு. சனி பகவானின் சொந்த வீடாக இருக்கக்கூடிய மகர ராசிக்காரர்களுக்கு சநி பகவான் நன்மையை தரப் போகிறார். தங்கம் உங்களுடைய அந்தஸ்தத்தை அதிகரிக்கும். கஷ்ட காலங்களில் தங்கம் உங்களுக்கு கைகொடுக்கும். இந்த காலகட்டங்களில் உங்களுக்கு தங்கம் சேர்க்கக்கூடிய யோகம் உண்டு.
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் இயற்கையிலேயே தங்கம் வாங்கக்கூடிய அமைப்பு இந்த காலகட்டத்தில் விருச்சிகம், தனுசு, மகர ராசியினருக்கு உண்டு. எனவே, இந்த காலகட்டத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படுவதற்கான சூழல் உருவாகும்.












Click it and Unblock the Notifications