சனிப்பெயர்ச்சி 2025: அஷ்டம சனியால் இப்படி ஒரு யோகமா?.. சிம்மம் ராசிக்கு எதிர்பாராத டிவிஸ்ட்
சனிப்பெயர்ச்சி: சனிப்பெயர்ச்சியால் ஏற்படவுள்ள மாற்றங்களை உலகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. கிரகங்களில் சனிப்பெயர்ச்சியின் மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பெயர்ச்சியின் மூலம் சிம்ம ராசிக்கு அஷ்டம சனி ஏற்பட உள்ளது. இது சிம்ம ராசிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று இத்தொகுப்பில் விரிவாக காணலாம்.
சனி பகவான் வருகிற மார்ச் 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு.. அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீன ராசியில் இருக்கப் போகிறார். பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருப்பது சனி தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம்.

நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும். அதனால் மக்கள் சனிப்பெயர்ச்சியை அதிகளவு உற்று கவனிப்பார்கள். சனியின் இந்த பெயர்ச்சி 12 ராசிகளிலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் சிம்ம ராசிக்கு அஷ்டம சனி ஏற்படவுள்ளது.
எதிலும் ஆளுமையுடன், நேர்மையாக செயல்படும் சிம்ம ராசிக்காரர்கள் அஷ்டம சனியை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. சனி பகவான் எப்போதும் இருக்கும் இடத்தை விருத்தி செய்வார். கடன், நோய் ஆகியவை விலகி உங்களுக்கு விபரீத ராஜயோகம் ஏற்படவுள்ளது. சனி சிம்மத்துக்கு ஆறாம் இடத்துக்குரியவர். இத்தனை நாட்கள் அவர் ஏழாம் இடத்தில் இருந்து ஏராளமான பிரச்னைகளை கொடுத்திருப்பார்.
உத்யோகம், தொழில், ஆரோக்கியம் ஆகியவற்றில் சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். தற்போது கஷ்டங்கள் ஏற்பட்டாலும் திடீர் யோகங்கள் ஏற்படும். இன்னும் தெளிவாக சொன்னால் முதலில் சோதனைகள் மலை போல வந்தாலும், அதன் பிறகு வரப்போகும் சாதனைகளால் அவை பனி போல விலகும். சனி எட்டாம் இடத்துக்கு வருவதால் உங்களுக்கு முன்னேற்றம் ஏற்பட போகிறது.
புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும். சித்தர்கள் வழிபாட்டால் ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். கடன் சுமை குறைந்து, பொருளாதாரத்தில் வளர்ச்சி இருக்கும். தொழிலில் மாற்றம் ஏற்படுவது நிச்சயம். விபரீதம் மறைந்து ராஜயோகம் ஏற்படுவது நிச்சயம். புதிய புதிய சிந்தனைகள் அதிகம் வந்து கொண்டே இருக்கும். சின்ன சின்ன சங்கடங்கள் வந்தாலும் மனதில் ஒரு வித அமைதி, திருப்தி ஏற்படும்.
சனி எட்டாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்தை பார்ப்பதால் தொழிலில் படிப்படியான நகர்வை எடுத்து வைக்க வேண்டும். தொழிலில் திட்டமிடாமல் இறங்கும் காரியங்கள் பின்னடைவை ஏற்படுத்தும். குழப்பங்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் நிதானமாக யோசித்து தெளிவான முடிவை எடுப்பது அவசியம். வயிறு, கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
சிவன், கால பைரவர் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருவதால் காரிய தடைகள் நீங்கி, எதிலும் வெற்றி கிடைக்கும். இது பொது பலன் தான். உங்கள் சுய ஜாதகத்தின் தசா புத்தி அடிப்படையை ஒருமுறை பார்த்துவிட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications