சனிப் பெயர்ச்சி: வம்சமே காலி.. மறந்தும் ‘இந்த’ விசயத்தை செய்யாதீங்க! சனி பகவானை கோபமாக்கும் செயல்கள்
சென்னை: 2025 ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி மார்ச் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது ஓரளவுக்கு அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலனை கொடுக்கும் பெயர்ச்சிதான். அதே நேரத்தில் சனி பகவானை கோபப்படுத்தும் செயல்களை செய்யாமல் இருப்பது நன்மை பயக்கும். அப்படி என்னென்ன விஷயங்கள் இருக்கிறது, சனி பகவானை மகிழ்ச்சி செய்யும் செயல்கள் என்னென்ன என்பது குறித்தும் பார்க்கலாம்.
கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்றால் அது சனி தான். அதனால்தான் அவரை சனீஸ்வரன் என்கிறோம். வலிமையான கிரகமான சனி ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்கிறார். மற்ற கிரகங்கள் இரண்டரை நாள் தொடங்கி ஒரு வருடம் மட்டுமே ஒரு ராசியில் இருப்பார்கள்.

இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி வருகிற மார்ச் 29ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கும்ப ராசியில் சஞ்சரித்த சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவரை பாவ கிரகங்களின் வீட்டில் பயணித்த சனி பகவான் குருவின் வீட்டுக்கு சஞ்சரிக்கிறார். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுக்கும். சனி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது.
நல்லது என்றாலும் கெட்டது என்றாலும் சனி பகவானை சமமாக பாவிக்க வேண்டும். கஷ்டம் நேரும் போது மட்டும் சனி பகவானை நினைக்கக் கூடாது. அதே நேரத்தில் நமக்கு நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு சனி பகவான் தான் காரணம். சில ஆண்டுகள் சனி பகவானால் இன்னல்கள் நடந்தாலும் அதற்குப் பிறகு உங்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.
ஏழரை ஆண்டுகள் சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் சஞ்சரிப்பார். அது ஜென்ம சனியாகவும் அதற்கு மேலேயும் கூட இருக்கலாம். சனி திசை முடியும், அஷ்டம சனி மிகவும் துன்பம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். சில செயல்கள் செய்தால் சனி பகவானின் தீய பார்வையில் இருந்து யாராலும் காப்பாற்ற முடியாது. சுத்தமில்லாத இடங்களும் மனிதர்களும் சனி பகவானுக்கு கோபத்தை ஏற்படுத்தும். குளித்துவிட்டு ஈரத்துடன் வீட்டுக்குள் செல்பவர்கள், சனி பகவானின் கோபப் பார்வையில் சிக்குவார்கள்.
முதல் நாள் உடுத்திய துணியை அடுத்த நாள் உடுத்துவது, இருள் சூழ்ந்திருக்கும் வீடுகள் சனி பகவானுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதன் காரணமாகத்தான் மாலை நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். மேலும் அமங்கல சொற்கள் பேசுவதும், சுத்தமில்லாத இடங்களும் சனி பகவானுக்கு பிடிக்காது. அதனால் தனது கோபப் பார்வையை அங்கே திருப்பி விடுவார்.
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டவர்களுக்கு சனி பகவான் எப்போதுமே எதிரி தான். குறிப்பாக மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டவர்கள் சனி பகவானால் அழிவை சந்திப்பது நிச்சயம். அனைத்து கிரகங்களையும் சிறைபிடித்த ராவணனால் சனி பகவானை ஒன்றும் செய்ய முடியவில்லை. மாற்றான் மனைவி மீது கொண்ட ஆசையே அவனது அழிவுக்கும் காரணமானது. மேலும் வஞ்சகம், சூது செய்து வெற்றி பெறலாம் நினைத்தால் சனி பகவான் தண்டிக்காமல் விடமாட்டார்.
உங்களை மட்டுமல்ல உங்களது வாரிசுகளையும் தண்டிப்பார். சனி பகவானை சரியான முறையில் வழிபடுவது குபேரனை விட ஆயிரம் மடங்கு அனுக்கிரகத்தை அள்ளித் தரும். அதனால் கோபப்படுத்தினால் நீங்கள் மட்டுமல்ல உங்கள் வம்சமும் பாதிக்கப்படும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications