சனிப்பெயர்ச்சி எப்போது?.. இந்த ஆண்டு நடக்குமா?.. நடக்காதா?.. முழு விவரம் இதோ
சனிப்பெயர்ச்சி: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சி எப்போது நடக்கிறது என்ற குழப்பம் எல்லோருக்குமே இருந்து கொண்டிருக்கிறது. நாளை சனிப்பெயர்ச்சி நடக்குமா, நடக்காதா என்ற குழப்பமும், விவாதங்களும் உள்ளன. சில ஜோதிடர்கள் இந்த ஆண்டுதான் சனிப்பெயர்ச்சி என்கின்றனர். சிலர் இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியே கிடையாது. அடுத்த ஆண்டுதான் என்கின்றனர். உண்மையாகவே சனிப்பெயர்ச்சி எப்போது?. சனிப்பெயர்ச்சி இருந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ஜோதிடத்தில் இரண்டு பஞ்சாங்க முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஒன்று வாக்கிய பஞ்சாங்கம். மற்றொன்று திருக்கணிதப் பஞ்சாங்கம். இதில் வாக்கிய பஞ்சாங்கம் என்பது காலம்காலமாக பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறையாகும். இந்த வாக்கியப் பஞ்சாங்கத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்து திருத்தி அமைக்கப்பட்ட பஞ்சாங்கம் தான் திருக்கணிதப் பஞ்சாங்கம். இந்த இரண்டு பஞ்சாங்க முறைகளையும் ஜோதிடர்கள் பின்பற்றி வருகின்றனர்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி 2026 மார்ச் 6 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. ஆனால், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதாவது, தமிழ் மாதத்தில் பங்குனி மாதம் குரோதி வருடத்தில் இந்த சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி இல்லை. வாக்கிய பஞ்சாங்கம் என்பது கோயில் அனுஷ்டாக பஞ்சாங்கம் என்று கூறப்படுகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கம் என்பது தனிப்பட்ட மனிதர்களுக்காகப் பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு முறைகளையும் ஜோதிடர்கள் பின்பற்றி வருகின்றனர்.
சனிப்பெயர்ச்சி எப்போது?
நீதிமான், மந்தன், கர்மக்காரகன் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். ஒரு ராசியில் அதிக காலம் இருக்கக்கூடிய கிரகம் என்றால் அது சனி பகவான் தான். மனிதர்கள் செய்யும் ஒவ்வொரு பாவ, புண்ணியங்களுக்கும் ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். சனி பகவான் தீமையை மட்டுமே தரக்கூடிய கிரகம் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை. நாம் செய்யும் நல்ல, தீய காரியங்களுக்கு ஏற்ப பலன்களை அள்ளித் தரக்கூடியவர். அதனால் தான் கிரகங்களின் பெயர்ச்சிகளில் சனிப்பெயர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஏழரை ஆண்டுகளில் நமக்கு கொடுக்க வேண்டிய அத்தனை நல்ல பலன்களையும், படிப்பினைகளையும் இந்த காலகட்டங்களில் கொடுத்து அருள்வார். அந்த வகையில், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்ச் 29 ஆம் தேதி, சனிக்கிழமை கும்பத்தில் இருந்து சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் சுப பலன்களைப் பெற்று, ராஜயோகம் பெறப் போகின்றனர். சில ராசிக்காரர்கள் கெடு பலன்களைச் சந்திக்கப் போகின்றனர்.
எந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி?
இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சியில் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடப்பெயர்ச்சி ஆகிறார். பொதுவாக சனி பகவான் இருக்கும் ராசியில் இருந்து முந்தைய மற்றும் பிந்தைய ராசிக்காரர்களுக்கு அதன் தாக்கத்தை அதிகளவில் ஏற்படும். அந்த வகையில், மீனம் ராசிக்கு ஐந்து ஆண்டுகளும், கும்பம் ராசிக்காரர்களுக்கு இரண்டரை வருடமும் ஏழரை சனி நடைபெறுகிறது. மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது.
சனியின் பிடியில் இருந்து விடுபடும் ராசிகள்?
மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியால் கடும் பாதிப்புகளைச் சந்தித்து வந்தனர். இந்த சனிப்பெயர்ச்சியில் ஏழரை சனியில் பிடியில் இருந்து மகர ராசிக்காரர்கள் விடுபடப் போகின்றனர்.
ஏழரை சனியால் பாதிக்கும் ராசிகள்?
பொதுவாக சனி பகவான் நம் கர்ம வினைகளுக்கு ஏற்றாற்போல் பாதிப்பைக் கொடுக்க கூடியவர். அதனால் தான் சனி பகவானுக்கு ஈஸ்வர பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. சனி பகவான் உச்சமாகக் கூடிய இடம் துலாம் ராசி. நீதியை வழங்கக் கூடியவர் சனி பகவான். கெடு பலன்களை அதிக அளவில் செய்தவர்களுக்கு மட்டுமே கெடு பலன்கள் கிடைக்கும். ஏழரை சனியில் உச்சத்துக்கு சென்றவர்களும் உள்ளனர். சனி போல கொடுப்பாரும் இல்லை. சனி போல கெடுப்பாரும் இல்லை என்று அதனால் தான் கூறுகின்றனர்.
தர்மத்தின் படி நடந்தாலே சனி பகவான் நல்ல பலன்களைக் கொடுப்பார். மாற்றுத் திறனாளிகள், கடைநிலை ஊழியர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு தான தர்மம் செய்வது நல்ல பலன்களைத் தரும். சிம்ம ராசிக்கு அஷ்டம சனி, தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி உண்டாகிறது.
சனி பகவானை வழிபடுவது எப்படி?
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்ச் 29 ஆம் இரவு 11 மணிக்கு மேல் நடைபெறுவதால், 30 ஆம் தேதியன்று கோயில்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது. எல்லோருமே திருநள்ளாறு போவது நல்லதல்ல. அருகில் இருக்கும் நவக்கிரக கோயிலில் சனி பகவானுக்கு எள் விளக்கு போட்டு வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். தர்ம காரியங்களை அதிக அளவில் செய்தால் சனி பகவானின் பரிபூரண அருளைப் பெறலாம். தர்ம காரியங்களை விட மேலான எந்தவொரு பரிகாரங்களும் சனி பகவானைப் பொருத்தவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு தர்ம காரியங்களை விரும்புபவர் சனி பகவான்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications