சனிப்பெயர்ச்சி: சிக்கலில் சிக்கும் சிம்மம்.. திடீர் அதிர்ஷ்டத்தால் செல்வம் சேரும்.. ஆனா எச்சரிக்கை
சனிப்பெயர்ச்சி பலன்கள்: வரும் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நிகழப் போகும் முக்கியமான கிரகப் பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். ஒரு ராசியில் அதிக காலம் பயணம் செய்யும் கிரகம் சனி பகவான். இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்மம் ராசியினருக்கு என்ன நடக்கும், என்ன விதமான பலன்கள் கிடைக்கும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் காணலாம்.
நீதியை நிலைநாட்டக் கூடியவர் சனி பகவான். நாம் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப பாரபட்சமின்றி சுப பலன்களையும், கெடு பலன்களையும் கொடுக்கக் கூடிய நீதிமான். சனி என்றாலே பொதுவாக எல்லோருக்கு ஓர் அச்சம் ஏற்படும். கெடு பலன்களை மட்டும் கொடுக்க கூடியவர் அல்ல சனி பகவான். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களை அள்ளித் தரக் கூடியவர்.

2025 ஆம் ஆண்டில் சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். சிம்ம ராசியினருக்கு ஏழரை சனி தொடங்குகிறது. சிம்ம ராசியினருக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், சனியினால் ஏற்பட போகும் மாற்றம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்: சிம்ம ராசியைப் பொருத்தவரை அஷ்டமசனி ஆரம்பாகிறது. இந்த சனி பல்வேறு பிரச்சனைகளை, விளைவுகளை கொடுக்கும். அஷ்டமசனி நல்ல அமைப்பு கிடையாது. இதில் சிறிய சிறிய நல்ல விஷயங்களும் நடக்கும். முன்னோர்கள் வழி சொத்துகள் கிடைக்கும். அதில் நீண்டகாலமாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதன் மூலமாக வர வேண்டிய அனைத்து பணங்களும் வந்து சேரும்.
அடுத்த இரண்டரை ஆண்டுகள் யாரிடம் இருந்தும் உங்களுக்கு பண உதவி கிடைக்காது. யாரிடமாவது கடன் கேட்டால் கடன் கிடைக்காது. பணம் கொடுத்தவர்களிடமிருந்து திரும்ப வராது. வங்கியில், ஆப்பில், கந்து வட்டியில் கூட கடன் கிடைக்காது. பொருளாதாரத்தில் சிக்கனத்தை பேணி காக்க வேண்டும். கையில் இருக்கும் பணத்தை தேவையில்லாமல் செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது.
உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட எந்தவொரு உதவியும் இருக்காது. ஆரோக்கியத்தில் குறைபாடுகள் ஏற்படும். ஆஞ்சியோ, பைபாஸ், சிறு சிறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளுவதற்கான சூழல் ஏற்படும். கண்டத்துக்கு நிகரான தொந்தரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையில்லாத உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
மது பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட பழக்கங்கள் இருந்தால் அதனை விடுவது நல்லது. அதனை கடைப்பிடித்தால் ராஜ உறுப்புகள் என்று சொல்லக்கூடிய கல்லீரல், மண்ணீரல், இருதயம், நுரையீரல், கணையம், மூளை போன்றவற்றில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். நீண்டநாள்களுக்கான நோயைக் கொடுத்துவிடும்.
இரவு நேரத்தில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது. அஷ்டமசனி காலத்தில்தான் அதிகளவில் விபத்து ஏற்படும். சிம்ம ராசி ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் வண்டி ஓட்ட வேண்டியதிருந்தால் பகலில் நன்றாக ஓய்வெடுத்துவிட்டு ஓட்டுவது நல்லது. செய்யாத தவறுக்கு வீண் பழி ஏற்படுவதற்கான நிலை ஏற்படும். மன உளைச்சல், மன தாக்கல்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் தொடர்ந்து எழுதுவது நல்லது. தோல்வி அடைந்தாலும் வெற்றியைக் கொடுக்கும்.
கடன் தொல்லைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதன் மூலம் நிறைய தொந்தரவுகளை, பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஏற்கனவே இருக்கும் கடன்களை கட்டி முடிப்பது நல்லது. இஎம்ஐயில் சிக்குவதைத் தவிர்ப்பது நல்லது. பணம் வாங்கியவர்கள் உங்களிடம் திரும்பித் தர மாட்டார்கள். உங்களுக்கே அவர்களிடமிருந்து பணத்தை கேட்பதற்கு சங்கடப்படும் சூழல் ஏற்படும். அடுத்த இரண்டரை ஆண்டுகள் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அஷ்டமசனியில் கடன் கொடுத்தால் திரும்ப வரவே வராது.
கடும் மன உளைச்சல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஒருவரை ஒருவர் அவமரியாதை செய்யக்கூடிய சூழல் ஏற்படும். கொஞ்சம் பொறுமையாக செல்வது நல்லது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலைமைகள் எல்லாம் தீரும். பார்ட்னர்ஷிப்பில் கண்டிப்பாக பிரிவு உண்டாகும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.












Click it and Unblock the Notifications