மிதுன ராசியினருக்கு தொழில் தொடங்கும் யோகம்.. லாபம், பணம், வெற்றி, அதிர்ஷ்டம் கொட்டும்
சனிப்பெயர்ச்சி: அனைத்து கிரகங்களிலும் மிகவும் வலிமை வாய்ந்த கிரகம் என்றால் அது சனி பகவான் தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்பது போல நல்ல பலன்களையும், கெட்ட பலன்களையும் சமமாக கொடுப்பவர். இந்த சனிப்பெயர்ச்சியில் மிதுன ராசியினர் கோடீஸ்வர யோகத்தைப் பெறப் போகின்றனர். மிதுன ராசியினருக்கு கிடைக்கும் அதிர்ஷ்ட பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இயக்கத்தை மாற்றுவதும், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவதும் வழக்கம். அதன்படி கடந்த மார்ச் 29 ஆம் தேதி ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வான சனிப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. அடுத்தடுத்து ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

கர்மக்காரகன், நீதிமான் என்று அழைக்கப்படக் கூடிய சனி பகவான் நாம் செய்யும் கர்ம பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நமக்கு சுப, அசுப பலன்களை தரக்கூடியவர். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியால் 6 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கவுள்ளது. அதில் 92 சதவீத பலனைப் பெறப்போகும் ராசியாக மிதுன ராசியினர் உள்ளனர்.
அடுத்த இரண்டரை ஆண்டுகள் சனி பகவானால் என்னவிதமான அதிர்ஷ்டம் மிதுன ராசியினருக்கு கிடைக்கப் போகிறது என்று தெளிவாக இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு அருமையான பெயர்ச்சியாக இந்த சனிப்பெயர்ச்சி அமையப் போகிறது. தொழில் சனியாக சனி பகவான் வந்து அமர்ந்திருக்கிறார். சனீஸ்வரர் தொழில் காரகன் என்பதால் தொழில், உத்தியோகம் ஆரம்பிக்கும் யோகம் ஏற்படும். உங்களுக்கான தொழில், வியாபாரம், வேலையை நீங்கள் தேர்ந்தெடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
குழப்பமாக இருந்த நிலை எல்லாம் மாறி தெளிவாக முடிவெடுத்து பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ராசிக்கு 10 ஆம் இடத்தில் சனி பகவான் வருவதால் நல்ல அமைப்பாக இருக்கும். எதிர்பாராத முன்னேற்றம், இடமாற்றம், எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு காலகட்டமாக இருக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கான பதவிகள் வந்து சேரும்.
மீடியா துறையில் இருப்பவர்கள், சினிமா துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் வரும். இரண்டரை ஆண்டுகளில் நல்ல புகழைப் பெறுவீர்கள். வரும் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. புகழ், பெயர் உண்டாகக்கூடிய காலகட்டமாக இருக்கும். கவனிப்பாரற்று கட்சியில் இருந்தவர்களுக்கு நல்ல பதவி, தலைமைப் பதவி கிடைக்கும்.
உடற்பயிற்சி தினந்தோறும் செய்வது நன்மையைத் தரும். தாய், தந்தை வழியில் மிகச்சிறந்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரால் நல்ல பலனையும், ஆதாயத்தையும் பெறுவீர்கள். அக்கம்பக்கத்தினர், தொழில், வேலையில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. சில சங்கடங்களையும், அவமானங்களையும், தோல்விகளையும் சந்திக்கக் கூடிய நிலை ஏற்படும். குறுக்கு வழியைத் தேர்ந்தெடுப்பதை தவிர்ப்பது நல்லது.
நேர்வழியில் தொழில் செய்வது நல்ல பலன்களைத் தரும். தொழிலுக்கான அடித்தளத்தை இந்த ஆண்டுகளில் போட்டு வைக்கும் காலகட்டமாக இருக்கும். வரும் காலங்களில் இதன் மூலமாக அபரிமிதமான லாபம் காண்பீர்கள். தொழில் ஆரம்பித்தால் எடுத்தவுடன் கோடிக்கணக்கில் வருமானம் வராது. படிப்படியாக லாபம் கட்டாயம் கிடைக்கும். இரண்டரை ஆண்டுகளில் மிகப்பெரிய லாபம் கிடைக்கக்கூடிய சூழல் உண்டாகும். எதைச் செய்தாலும் நேர்மையாக செய்வது சனி பகவானின் பரிபூரண அருளைப் பெற உதவும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications