Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி 2023.. கோடீஸ்வர யோகத்தை தரப்போகும் சனி பகவான்..மின்னல் வேக பலன்கள்.. பரிகாரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் நாளைய தினம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிபகவானின் பார்வை 3,7,10ஆம் இடங்களின் மீது விழுகிறது. கும்ப ராசியில் இருந்து சனி பகவான் மூன்றாம் பார்வையாக மேஷ ராசியையும், ஏழாம் பார்வையாக சிம்ம ராசியையும், 10ஆம் பார்வையாக விருச்சிக ராசியையும் பார்வையிடுகிறார்.

Sani Peyarchi Palan 2023-26 Tamil: Who will get Kodeeswara Yogam and parikaram

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார்.

சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசியான தனது சொந்த வீட்டிற்குச் செல்கிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு யாருக்கு என்ன பலன் என்ன பாதிப்பு வரும் அதற்கான பரிகாரம் என்ன என்ற பார்க்கலாம்.

மேஷம்

Sani Peyarchi Palan 2023-26 Tamil: Who will get Kodeeswara Yogam and parikaram

மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவானின் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். உங்களின் செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். வெளிநாட்டு வேலை கிடைக்கும். அந்நிய தேசத்து வருமானம் உங்களை கோடீஸ்வரர் ஆக்கும். குபேர யோகம் தேடி வரப்போகிறது. திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ரிஷபம்

சனி பகவான் மேஷம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். ஆட்சி பெற்ற சனியால் சச மகாயோகம் செயல்படும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும்.திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.

மிதுனம்

சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக படாத பாடு பட்டிருப்பீர்கள். அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். நிறைய தர்மங்களை செய்யுங்கள். ஏனெனில் இது தர்ம சனி காலம். வேலையில் சம்பள உயர்வு புரமோசன் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். நகை, பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும்.

கடகம்

சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும். கஷ்டமில்லாமல் இந்த 30 மாதங்களை கடந்துவிடுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இதுநாள் வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து உங்களை ஆகா ஓஹோ என்று வாழ வைத்தவர் சனி பகவான். எண்ணற்ற வருமானங்கள், செல்வங்களை கொடுத்து வந்தார். இனி சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். சனிபகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டச்சனியையும் கஷ்டமில்லாமல் கடந்துவிடுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும்.

கன்னி

சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். சனி பகவான் தனது சொந்த வீட்டுக்கு வருவதால் நோய்கள் தீரும். கடன்கள் கட்டுப்படும். அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். புதிய தொழில்களை ஆரம்பிக்க லாபங்கள் கொட்டும். இனி இரண்டரை ஆண்டு காலம் உங்களுக்கு ராஜயோக காலம். சுகங்கள் தேடி வரும். செல்வமும் செல்வாக்கும் கூடும். . திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரப்போகிறது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே.. அர்த்தாஷ்டம சனியால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த நீங்கள், விபத்துக்களை சந்தித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறப்போகிறது. வேலையை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமணம் தடைகளைத் தாண்டி நடைபெறும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி பெறும்.

விருச்சிகம்

அர்த்தாஷ்ட சனி காலம் வரப்போகிறது. சனி பகவான் நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள். பணவரவு அதிகரிக்கும் அதே நேரத்தில் நோய்களும் வெளிப்படும். நோய்களை குணப்படுத்துவீர்கள். தனவரவு அதிகரிக்கும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே.. ஏழரை ஆண்டுகாலமாக சனி பகவான் ஆட்டி படைத்து வந்தார். ஏழரை சனி முடிவடைந்து விட்டது. இனி நன்மைகள் தேடி வரும் காலம். வராத பணம் கைக்கு தேடி வரும். ஏழரை ஆண்டுகாலமாக துன்பப்பட்டு சாவின் கடைசி நுனிவரை பார்த்து விட்டு வந்திருப்பீர்கள். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனிபகவான் இனி லாபங்களைத் தரப்போகிறார்.

மகரம்

சனி பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பாத சனியாக குடும்ப சனியாக அமரப்போகிறார். ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடுவீர்கள். உங்களுக்கு தன வருமானமும் லாபமும் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலம் தொடங்குகிறது. சனி பகவான் உங்களுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். வேலை செய்யும் இடத்தில் பளு அதிகரிக்கும். 30 வயதிற்கு மேற்பட்ட சிலர் தொழில் தொடங்குவீர்கள். அரசு வேலை கிடைக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

மீனம்

Sani Peyarchi Palan 2023-26 Tamil: Who will get Kodeeswara Yogam and parikaram

மீன ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. காரணம் சனி பகவான் உங்க ராசிக்கு 12ஆம் வீட்டு அதிபதி. சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். பணத்தை சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+