சனி பெயர்ச்சி பலன் 2023: ஜென்ம சனி என்றாலும் ஜெயிப்பது நீங்கதான்..என்ஜாய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பெயர்ச்சி 2023 ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வாக்கிய பஞ்சாங்கப்படியும் நிகழப்போகிறது. சனிபகவான் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை வரை சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியாக பயணம் செய்யப்போவதால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. உங்களுடைய ராசிக்கு விரைய ஸ்தான அதிபதியம் அவரே. சனிபகவான் ஜென்ம ராசியில் அமரப்போகிறார். இனி குடும்பம் பற்றியும், உங்களுக்கு வரப்போகும் வருமானம் பற்றியும் அதிகம் பெருமையாக பேசாதீர்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரும் சனிபகவான் ஜென்ம சனியாக பயணம் செய்யப்போகிறார். எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை சமாளித்து சாதனைகளாக மாற்றுவது உங்களுடைய கைகளில் உள்ளது.

சனிபகவான் உங்க ராசியில் அமர்ந்து உங்க லக்னத்திற்கு மூன்றாம் வீடு, ஏழாம் வீடு, லாப ஸ்தானமான 10ஆம் வீட்டினை பார்க்கிறார். சனிபகவானின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் கும்ப ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ஜென்ம சனி

ஜென்ம சனி

30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் ராசிக்கு வந்து அமர்கிறார் ராசி அதிபதி சனிபகவான். கும்பம் ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும். 30 வயதை கடந்த வர்களுக்கு முன்னேற்றகரமான காலம் காரணம் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார் சனிபகவான். சனியின் பார்வை, மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. தொழில் தொடங்குவீர்கள். பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். கடல் கடந்து செல்லும் எண்ணம் வரும். தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு தொடர்பான ஆதரவு கிடைக்கும்.

தொழில் வியாபாரம்

தொழில் வியாபாரம்

சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு நல்லது நடக்கும். சனிபகவனால் அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. புரமோசன் கிடைக்கும். இதுநாள் வரை வராமல் இருந்த பணம் வரும்.

சுபகாரியத்தால் மகிழ்ச்சி

சுபகாரியத்தால் மகிழ்ச்சி

அதிர்ஷ்டம் மூலம் பணம் வரும். சனிபகவான் ஏழாம் வீட்டை பார்ப்பதால் தொழில் பிசினஸ் கூட்டுத்தொழில் நன்றாக நடைபெறும் சுப செலவுகளும் வரும். சனி உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டை பார்க்கிறார். திருமணம் தடைகளுக்குப் பிறகு நடைபெறும். தைரியமும் தன்னம்பிக்கையும் கைகூடி வரும் சகோதர சகோதரிகளுக்கு சுப செலவுகள் செய்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அதற்கான யோகம் வந்து விட்டது.

 பரிகாரம் என்ன?

பரிகாரம் என்ன?

வெளிநாடு யோகமும் கைகூடி வருகிறது. புதிய நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். தேவையில்லாமல் அதிகமாக கடன் வாங்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை காட்டுங்கள். ஆஞ்சநேயர், விநாயகர் வழிபாடு அவசியம். காலபைரவரை வழிபடுங்கள். பாதிப்புகள் நீங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+