Sani Peyarchi: ஜென்ம சனியிலும் சக்கைப்போடு போடும் மீனம் ராசி.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்
சனிப்பெயர்ச்சி: வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருக்கிறார். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று பழமொழி ஜோதிடத்தில் மிகவும் பிரபலம். இந்த வருடத்தில் நடைபெறும் முக்கியமான பெயர்ச்சியாகவும் இது உள்ளது. இந்த சனிப்பெயர்ச்சி 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள, பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
மீனம் [Meenam Sani peyarchi palan]
மீனம் ராசியினருக்கு இதுவரை 12 ஆம் இடத்தில் இருந்த சனி ஜென்ம சனியாகிறார். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிகள் அதீத கவனம் தேவை. பெண்கள் ஹார்மோன், கர்ப்பப்பை, கழிவுப் பாதை, கால் வரைக்கும் உள்ள உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது. இல்லையெனில், தேவையில்லாத பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.

ஜென்மசனி
ஜென்மசனியில் திருமணம் நடக்கும் யோகம் உண்டு. புதிய தொழில் தொடங்குவீர்கள், புதிய நகைகளை வாங்கி மகிழ்வீர்கள். விவசாய நிலங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். கால்நடைதொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். நினைத்தவை எல்லாம் நடப்பதற்கான யோகம் உண்டாகும். தினந்தோறும் தோப்புக்கரணம் போடுவது நன்மை பயக்கும்.
ஆசிர்வாதம்
தெய்வ சந்நிதானத்திற்குச் சென்று வருவீர்கள். குருமார்கள் ஆசிர்வாதம் உண்டாகும். உங்களுடைய வீடு தேடி தெய்வங்கள் வரும் யோகம் உண்டு. திருமணத் தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் பனி போல விலகும். பணவரவுக்கான நல்ல காலகட்டம்.
வாகன யோகம்
ஜென்மசனியிலும் பல நல்ல விஷயங்கள் நடக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் நீங்கள் பிறந்த கிழமையில் காலை ஒருமுறை எழுந்து குளித்துவிட்டு 5 அகல்தீபம் ஏற்றி மனதிற்குப் பிடித்த தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்து கொள்வது நன்மை. கோயில்களுக்குச் செல்கிற சமயத்தில் அழுவதை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்திலும், வண்டி வாகனத்திலும் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது.
நல்ல செய்தி
யார் எது சொன்னாலும் தர்க்கம், வீண் வாதத்தைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. பொறுமையாக எல்லா விஷயத்தையும் கடைப்பிடிப்பது நல்லது. குருவுடைய ஆசிர்வாதம், மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். குங்குமப்பூ போட்டு தண்ணீர் குடிப்பது பெரிய கீர்த்தியையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
பரிகாரம்
யோக பலத்தை அதிகளவில் பெறக்கூடிய காலகட்டம். தொழிலில் இருந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரணமாக நிவர்த்தியாகும். மன அழுத்தத்திற்கு ஆளாகமல் இரவு நேர தூக்கத்தை சரியாக கடைப்பிடிப்பது நல்லது. நாமக்கல் நரசிம்மர் கோயில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது, அந்தக் கோயில்களில் நடைபெறும் அன்னதானத்திற்கு மளிகைப் பொருள்கள் தானமாக கொடுப்பது ஏற்றத்தைத் தரும். மாதத்தில் ஒரு விாழக்கிழமையில் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றுவது, அன்னதானத்திற்கு கொடுப்பது நன்மையைத் தரும்.












Click it and Unblock the Notifications