Sani Peyarchi: சிம்ம ராசியை வச்சு செய்யப் போகும் அஷ்டம சனி.. 5 விஷயங்களில் மிக கவனம்
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2026 ஆம் ஆண்டில் முக்கிய கிரகப் பெயர்ச்சியான சனிப்பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். வரும் மார்ச் மாதத்தில் முக்கிய கிரக மாற்றமான சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

மார்ச் 6 ஆம் தேதி காலை 8:24 மணிக்கு சனி பகவான் தன் சொந்த வீடான கும்ப ராசியில் இருந்து, குருவின் வீடான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனி பகவானின் இந்தப் பெயர்ச்சி காரணமாக பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மருத்துவத் துறையில் புரட்சி ஏற்படும். இந்த சனிப்பெயர்ச்சியான 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிம்ம ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
கும்பத்தில் இருந்து மீனத்துக்குப் பெயர்ச்சியாகக் கூடிய சனி பகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் பாவத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இந்த சனியை அஷ்டமசனி என்று குறிப்பிடுவார்கள். ஏழரை வருடத்தில் கொடுக்கக்கூடிய அத்தனை பிரச்சனைகளையும் இந்த அஷ்டமசனி காலமான இரண்டரை ஆண்டுகளில் கொடுக்கப் போகிறார். இந்த காலகட்டத்தில் 5 விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
பண விஷயத்தில் கவனம்
உறவுகள் மூலமாக கையில் இருக்கக்கூடிய பணம் கரைவதற்கான வாய்ப்புள்ளது. கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். கொடுத்த பணம் திரும்பி வராமல் போவதற்கான அதிக வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சிறிய சிறிய பிரச்சனைகள் கண்டிப்பாக வந்து போகும். புத்திசாலித்தனத்தால் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை சரி செய்ய முடியும். தீர்க்க முடியாத பிரச்சனைகளை கடவுளிடம் ஒப்படைப்பது நல்லது.
கவலை வேண்டாம்
வேலை செய்யும் இடத்தில் சிறிய சிறிய குழப்பங்கள், பிரச்சனைகள், வேலை அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது போல இந்த காலகட்டத்தில் உங்களுடைய வேலைகளை சரியாக செய்து கொண்டிருப்பது நல்லது. எதிர்வீடு, பக்கத்து வீடு போன்ற நபர்கள் யாருடனும் நல்ல உறவில்லை என்றாலும் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்கு மனதில் ஒரு இடம் கொடுத்து வருத்தப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். எலும்பு சார்ந்த பிரச்சனைகள், ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகளில் கவனமாக இருப்பது நல்லது. சனியின் பார்வை 2 ஆம் பாவத்தைப் பார்க்கிறது. குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். இந்தப் பொருளுக்கு நான் கேரண்டி கொடுக்கிறேன் என்று வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. தேவையில்லாமல் பழி பாவத்திற்குள்ளாகும் சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
சொத்துகளில் கவனம்
5 ஆம் பாவத்தை சனி பார்ப்பதால் பூர்வீக சொத்து, வீடு, மனை இருந்தால் அதனை சென்று பார்த்து வருவது நல்லது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் சொத்தை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவர்களே உங்களுக்கு எதிராக மாறும் சூழல் உள்ளது. மற்றவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கான வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்தில் கவனம் தேவை. குழந்தைகளுக்கான இடைவெளியைக் கொடுப்பது நல்லது. அவர்களை அதிகாரம் செய்வது, திட்டுவது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
தொழில்
பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு வழக்குகள் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. சனி பகவான் தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் தொழிலில் சிறிய சிறிய பிரச்சனைகள் வந்து போவதற்கான வாய்ப்புள்ளது. 6, 7 க்கு அதிபதியான சனி பகவான் என்பதால் பெரிய அளவில் கடன் வாங்காமல் இருப்பது நன்மை பயக்கும். கணவன், மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. இதுபோல சிறிய சிறிய விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். 100க்கு 30 சதவீதம் நன்மைகளைப் பெறும் காலகட்டமாக இருக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications