ஜென்ம சனி: கும்பம், மீனம் ராசிக்கு சனிப்பெயர்ச்சியில் கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் நிகழவுள்ள முக்கிய கிரக பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். மற்ற கிரகங்களை விட ராசியில் அதிக காலம் பயணிப்பது சனி பகவான் தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம், மீனம் ராசிகளுக்கு பலன்கள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொகுப்பில் சனிப்பெயர்ச்சியால் கும்பம், மீனம் ராசியினருக்கு ஏற்படப் போகும் மாற்றம் குறித்து பார்க்கலாம்.

Sani peyarchi Rasi palan

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி விலகுவதால் அமோகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். 30, 40 வயதுகளில் இருப்பவர்களை தலைகீழாக புரட்டிப்போட்ட ஜென்மசனி விலகப் போகிறது. பணம், நண்பர்கள், காதல், உறவுகள் எல்லாவற்றையும் பற்றி புரிந்து கொண்டிருப்பீர்கள். தனக்குள்ளேயே சோம்பல், தன்னம்பிக்கை இல்லாத அமைப்புடன் இதுவரை இருந்திருப்பீர்கள்.

இனி உற்சாகம் பிறக்கும் காலகட்டமாக இருக்கும். ஏழரை சனியில் கடுமையான அமைப்பு என்று சொல்லக்கூடிய 5 ஆண்டுகளை கடந்து விட்டீர்கள். இனி உங்களுக்கு கிடைத்த அனுபவத்தை எல்லாம் வைத்து வாழ்க்கையை புரிந்திருப்பீர்கள். எடுத்த காரியங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மனதில் புதிய திடம் உண்டாகும். சந்தோஷம் திரும்ப கிடைக்கும். எல்லா வகையிலும் படிப்படியாக மாற்றம் வருவதை காண்பீர்கள்.

நல்ல மாற்றம் உண்டாகும் காலமாக இருக்கும். ஜாதகத்தில் இருக்கும் நிலையைக் கொண்டு முன்னேற்றமான அமைப்புகள் உண்டாகும். 50 வயது தாண்டியவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிக்கப் போகிறது. ராசியில் சனி வந்து உட்காருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக ராகு ராசியில் இருந்ததால் சில பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். வாழ்க்கையில் கற்றுக் கொடுக்க கூடியவர் சனி பகவான். தற்போது தனி ராசியில் வந்து உட்காருவதால் சில படிப்பிணைகளை கற்றுக் கொள்ளும் காலமாக இருக்கும்.

பொறுமையாக, நிதானமாக இருக்க வேண்டிய காலகட்டம். ஆசைவார்த்தை காட்டக்கூடிய காலகட்டமாக இருக்கும். புதிதாக தொழில் தொடங்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக உறவுகளுடன் சேர்ந்து தொழில் தொடங்குவதை தவிர்ப்பது நல்லது. பணத்தினால் உறவில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்படும். அண்ணன், தம்பிகள் ஒதுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

தாய் விஷயங்களில் சில கஷ்டங்கள் ஏற்படும். உறவுகளிடம் பணப் பிரச்சனை ஏற்படும் சூழல் ஏற்படும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். பண விஷயங்களில் இளைஞர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வீடு, வாகனம், சொத்து சேர்க்கை, நிலம் வாங்கக்கூடிய அமோகமான காலகட்டமாக இருக்கும்.

50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பணம் பற்றிய புரிதலை ஏற்படுத்தக் கூடிய காலகட்டமாக இருக்கும். வேலையில் எந்த தொந்தரவு ஏற்பட்டாலும் அதனை விடாமல் இருப்பது நல்லது. புதிய வேலைகள் கிடைத்தாலும் சில பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+