சனிப்பெயர்ச்சி: மேஷம், ரிஷபம் ராசியினருக்கு என்ன பலன்கள் கிடைக்கும்.. முழு விவரம் இதோ
சனிப்பெயர்ச்சி பலன்கள்: 2025 ஆம் ஆண்டில் நிகழவுள்ள முக்கிய கிரக பெயர்ச்சிகளில் சனிப் பெயர்ச்சி மிக மிக முக்கியமானதாகும். மற்ற கிரகங்களை விட ராசியில் அதிக காலம் பயணிப்பது சனி பகவான் தான். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்லுமளவுக்கு பலம் வாய்ந்த கிரகம். இந்த சனிப்பெயர்ச்சியில் மேஷம், ரிஷபம் ராசிகளுக்கு பலன்கள் குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சனி பகவான் வருகிற 29 ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சனி பகவான் சுமார் இரண்டரை ஆண்டுகள் இந்த நிலையில் பயணிக்க போகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த தொகுப்பில் சனிப்பெயர்ச்சியால் மேஷம் மற்றும் ரிஷப ராசியினருக்கு ஏற்படப் போகும் மாற்றம் குறித்து பார்க்கலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கப் போகிறது. இருப்பினும் பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தாது. இளைய பருவத்தினருக்கு பணம், உறவு தொடர்பான சில அமைப்புகளை அடையாளம் காட்டும். 12 ஆம் இடத்தில் வரும் சனியால் நல்ல வருமானம் கிடைக்கும். ஆனால், அதனை சேமித்து வைக்க முடியாது. வேலையில் பிடித்தமில்லாத சூழல் ஏற்படும். வேலை போகும் திரும்பக் கிடைக்கும்.
தொழில் ஆரம்பிக்கும் அமைப்புகளில் சில விரையங்கள் ஏற்படும். வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, சொந்தங்களுக்கு செலவளிக்கும் தன்மை, பங்குச் சந்தை முதலீட்டில், தங்கத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யும் யோகம் உண்டாகும். ராகு கேது அடுத்த மூன்று மாதத்தில் ராகு 11 ஆம் இடத்தில் வருவது ஒன்றரை வருடங்களுக்குப் பெரிய பாதிப்புகளைத் தராது. மார்ச் 29 முதல் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடக்கும் சனி பெயர்ச்சியில் இளம் வயதினருக்கு சில மாற்றங்கள் உண்டாகும்.
வேலை மாற்றம், வெளிநாட்டுக்குச் செல்லுதல், அலைச்சல், தேவையில்லாத சங்கடங்கள், வரும் பணத்தை செலவு செய்யக்கூடிய நிலை ஏற்படும். 50 வயது தாண்டியவர்களுக்கு நல்ல வீடு கட்டுதல், கார் வாங்குதல், வாகனம் வாங்குதல், பிள்ளைகளுக்கான செலவு, மங்களகாரியங்கள் வீட்டில் நடக்கும் போன்றவை உண்டாகும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. மற்றபடி அமோகமாக காலகட்டமாக இந்த சனிப்பெயர்ச்சி இருக்கும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய யோக பலன்களை சனிப்பெயர்ச்சி தரப்போகிறது. எல்லா கிரகங்களும் பெரும்பாலும் சாதகமான நிலையை தரக்கூடிய நிலையில் உள்ளது. சனிப்பெயர்ச்சி மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சியில் 2 ஆம் இடத்துக்கு குரு வருகிறார். 2, 11 ஆம் இடங்களை மிகுந்த சுபத்துவத்தை அடையப் போகின்றன.
பணம் வரவு உண்டாகும். வெற்றி, லாபம் கிடைக்கும். தொட்டது துலங்கும். அனைத்து அமைப்புகளிலும் வெற்றி உண்டாகும். இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகள் உண்டாகும். நிறைய திறமைகள் இருந்தும் சாதிக்க முடியாதவர்களுக்கு இனி சாதகமான காலகட்டமாக இருக்கும். உங்களுடைய கனவுகள் அனைத்தும் நினைவாகும்.
கோச்சார ரீதியாக சனி 11 ஆம் இடத்தில் இருக்கும்போது பிறந்த ஜாதகத்தில் கேந்திர கோணாதிபதிகள், யோகாதிபதிகளின் தசாபுத்திகள் நடந்து கொண்டிருந்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். 25 வயதில் இருப்பவர்களுக்கு நல்ல துணை கிடைக்கும். வயதிற்கேற்றாற் போல நீங்கள் நினைப்பதை அப்படியே நடத்தும் யோகமான காலகட்டமாக வரும் இரண்டரை ஆண்டுகாலம் இருக்கும்.
வேலை, தொழில், லாபம், லாபத்தில் சேமிப்பு உண்டாகும். பண வரவு அபரிமிதமானதாக இருக்கும். சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உண்டாகும். எல்லாவற்றிலும் நிறைவாக இருக்கும் தன்மை உண்டாகும். பெண்ணுக்கு ஆணாலும், ஆணுக்கு பெண்ணாலும் சந்தோஷம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். எல்லாவற்றிலும் வெற்றி, லாபம், பண வரவு உண்டாக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
-
குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு பேச்சில் தான் கண்டமே.. இந்த விஷயங்களை செய்திடவே செய்திடாதீங்க -
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: தனுசு ராசியினரே தயாராகுங்கள்! குரு தரப்போகும் அபார யோகங்கள் -
விருச்சிகத்துக்கு பொற்காலம் ஆரம்பம்.. குருவின் அருளால் வரப்போகும் ராஜயோகம் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications