Sani Vakra Nivarthi 2025: சிம்ம ராசியை பிடிக்கும் சனி.. கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம்
சனி வக்ர நிவர்த்தி: கிரகங்களில் ஆதிக்கமிக்க சக்தி வாய்ந்த கிரகங்களில் சனி முக்கியமானதாகும். சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று சொல்கிறளவுக்கு செல்வாக்குமிக்கவர். அப்படிப்பட்ட சனி பகவான் கடந்த சில மாதங்களாக வக்ர கதியில் இருந்து வருகிறார். விரைவில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். இது 12 ராசிகளிலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் சிம்ம ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
13.7.25 தேதியில் இருந்து 27.11.25 தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கிறார். சுமார் கடந்த 4 மாதங்களாக, அதாவது 137 நாட்கள் வக்ர நிலையில் இருந்த சனி பகவான் வருகிற 28.11.25 தேதி (கார்த்திகை 12 ஆம் தேதி) வக்ர நிவர்த்தி அடைகிறார். மீனம் ராசியில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். 2025 வருடத்தின் நிறைவில் இருக்கும் நிலையில், இது இந்த வருடத்தில் ஜோதிடத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனி பகவான் குருவின் நட்சத்திரமான பூரட்டாதியில் பயணிக்க போகிறார்.

சனி வக்ர நிவர்த்தி
பொதுவாக சனி பகவான் தொழிலுக்கு காரணமானவர். வக்ர கதியால் கடந்த 4.5 மாதங்களாக தொழிலில் ஏராளமான பிரச்சனைகள் இருந்திருக்கும். அப்படி உத்யோகம், தொழிலில் பிரச்சனைகள் இருந்தவர்களுக்கு இப்போது அது நிவர்த்தியடைய போகிறது. சனி பகவான் தன் இயல்பு நிலைக்கு திரும்பு போவது சற்று நிம்மதியளிக்கும் காலமாக இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்க போகிறது. இதனால் சிம்ம ராசி அடைய போகும் பலன்களை காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு 137 நாட்களாக சனி பகவான் வக்கிரமாக மீன மனையில் அமர்ந்திருந்தார். வரும் 28 ஆம் தேதியன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி பகவான் உங்களுக்கு 6க்கு உரியவர். கடன், நோய், எதிர்ப்பு, பகையைத் தரக்கூடியவர் சனி பகவான். 8 ஆம் இடத்தில் சனி பகவான் அமர்ந்து கடன் கொடுக்கும் வாய்ப்புள்ளதால் மிக கவனமாக இருக்க வேண்டும். கடன் இல்லை என்றால் எதிர்ப்பு, பகை இருக்கும். அல்லது ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் வரும். இந்த விஷயங்களில் நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.
பண விஷயத்தில் கவனம்
கடன் வாங்கினாலும் உங்களுடைய தகுதிக்கு மீறி வாங்காமல் இருப்பது நல்லது. அஷ்டமசனி நடந்து கொண்டிருப்பதால் வலியும், வேதனையும் தொழில் ரீதியாக, போட்டி பொறாமையால் ஏற்படுத்தும். சனி பகவான் நேரடியாக 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் தனம், பொருளாதாரம், குடும்பம் சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. பணம் கிடைக்கும். ஆனால், பணத்தை கையாளக்கூடிய விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. பணத்தைக் கொடுக்கும் போதும், ஜாமீன் கையெழுத்து போடும் போதும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
சனி புத்தி இருந்தால் கவனம்
குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வரும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. பேச்சில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வாக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது. சனி உங்களுக்கு ஆகாதவர், தற்போது 2 ஆம் இடத்தைப் பார்ப்பதால் யாருடனும் கருத்து வேறுபாடுகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சனி புத்திய நடந்து கொண்டிருந்தால் குடும்பம், தனம், வாக்கு, கடன், எதிர்ப்பு விஷயத்தில் சிக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தொழில்
தொழில் ஸ்தானத்தில் சனி இருப்பதால் குழப்ப மன நிலை இருக்கும். உழைப்பிற்கேற்ற பலனில்லை, நல்லது சொன்னாலும் கெட்டதில் முடிகிறது என்கிற நிலை இருக்கும். கோபப்பட்டு வேலையை மட்டும் விடாமல் இருப்பது நல்லது. வேறொரு வேலையை அமைத்துக் கொண்டு விடுவது மட்டுமே நல்லது. ஒரு சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஆனால், அதில் அழுத்தம், டென்சன் ஏற்படும் வாய்ப்புள்ளது. மன ரீதியாக திருப்தி இல்லாத நிலைமை எல்லா விஷயங்களிலும் இருக்கும்.
அகலகால் வேண்டாம்
எந்த விஷயங்களிலும் அகலகால் வைக்காமல் இருப்பது நல்லது. குழந்தை, பூர்வீகம் சார்ந்த விஷயங்கள், டென்சன், பிரஷர், தூக்கமின்மை இருக்கும். மகம் நட்சத்திரக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. மன அழுத்தம் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். எந்த புதிய விஷயங்கள் செய்தாலும் திட்டமிட்டு, சிந்தித்து செயல்படுவது நல்லது. பாக்கியம் நன்றாக இருக்கும். தகப்பன் சார்ந்த விஷயங்கள் நன்றாக இருக்கும். கோபம், ஆக்ரோஷம், பிடிவாதத்தை தவிர்ப்பது நல்லது.












Click it and Unblock the Notifications