ஆரம்பிக்கலாங்களா.. விருச்சிகம் ராசிக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம்.. கொட்டிக் கொடுக்கும் 4 கிரகங்கள்
சதுர் கிரக யோகம்: ஜோதிட சாஸ்திரப்படி நான்கு கிரகங்கள் சேர்க்கையின்போது சதுர் கிரக யோகம் ஏற்படும். அந்த வகையில் மீனம் ராசியில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கை நடைபெறவுள்ளது. இது மிகவும் அரிய நிகழ்வு. இது விருச்சிகம் ராசியில் ஏற்படுத்தவுள்ள தாக்கத்தை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
மீனம் ராசியில் ஏற்கனவே ராகு பகவான் இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் தேதி சுக்கிரன் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிவிட்டார். மீனத்தில் சுக்கிரன் உச்ச பலத்தில் இருக்கிறது.

இதேபோல பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி புதன் பகவான் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். புதன் அங்கு நீட்சமாக உள்ளார். இது நீட்சபங்க ராஜயோகத்தை உருவாக்க உள்ளது. மார்ச் மாதம் 14 ஆம் தேதி சூரிய பகவானும் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை சதுர் கிரக யோகம் என்பார்கள்.
விருச்சிகம் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களின் கூட்டு சேர்க்கை நடைபெறவுள்ளது. செவ்வாய் பகவானை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியினர் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மற்றவர்களை காயப்படுத்தி விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவீர்கள்.
கடந்த காலங்களில் நீங்கள் ஏராளமான விஷயங்களை தியாகம் செய்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கையே மொத்தமாக மாறி மனதில் பயம், பதற்றம் அதிகரித்திருக்கும். போதும்.. போதும் என்கிறளவுக்கு பிரச்னைகளை சந்தித்திருப்பீர்கள். உங்களுக்கு இந்த 4 கிரகங்களின் சதுர் கிரக சேர்க்கை நல்ல பலன்களை தரவுள்ளது.
பூர்விக தொழிலில் நல்ல ஏற்றம் இருக்கும். தொழில் ரீதியாக இருந்த தடைகள் விலகும். புதிய தொழில் முயற்சி வெற்றியடையும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதேபோல ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட் சம்பந்தப்பட்ட துறையில் இருப்போருக்கும் நல்ல உயர்வு கிடைக்கும்.
புதிய உத்யோகத்துக்கான முயற்சிகளும் வெற்றிகரமாக நிறைவேறும். ஏற்கனவே பணியில் இருப்போருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. இந்த காலத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி பணியிட மாற்றங்கள் நிகழும். நீண்ட காலமாக நீங்கள் சிந்தித்த திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவதற்கு இது உகந்த காலம்.
திருமணம் சார்ந்த தடைகள் விலகி இக்காலத்தில் திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்புள்ளது. நினைத்தபடி நல்லபடியான வரன் அமையும். மறுமணம் சார்ந்த முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். காதல் உறவு திருமணத்தில் முடியும் யோகமும் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு தற்போது குழந்தை பேறு கிடைக்கும்.
புதிய நிலம், வீடு, வண்டி, வாகனம் வாங்குவதற்கான சூழல் உள்ளது. சுப செலவுகள் உண்டு. புதிய சொத்துகளுடன் பூர்வீக சொத்துகளும் உங்கள் கைக்கு வரும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்க. கல்வியில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். குல தெய்வத்தின் அருள் முழுவதுமாக கிடைக்கும். விவசாயம், புதிய தொழிலில் நல்ல யோகம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications