சனிப்பெயர்ச்சி 2025: பணக்கார யோகம் பெறும் மகர ராசியினர்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்டம்
சனிப்பெயர்ச்சி 2025: மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சியானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், மகர ராசியினர் இந்த சனிப்பெயர்ச்சியில் எந்தவிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகின்றனர். இந்த சனிப்பெயர்ச்சியில் மகர ராசியினர் பெறும் பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ராசியிலும் சனி பகவான் இரண்டரை வருடம் சஞ்சரிக்கிறார். அனைத்து ராசிகளையும் கடந்து வர கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகும். அந்த வகையில், மார்ச் 29 ஆம் தேதி சனி பகவான் மகர ராசியை விட்டு பெயர்ந்து கும்பத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது சனி மீனத்துக்குப் பெயர்ச்சியாகிறார்.

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் ஏழரை சனியில் இருந்து விடுதலையாகக் கூடிய காலம். இனி உங்களுக்கு பொற்காலமாகத்தான் இருக்கும். சனி விடக்கூடிய காலத்தில் 2 இல் ராகு, 8 இல் கேது வருவதால் அச்சப்படத் தேவையில்லை. ராகு சனியின் வீட்டுக்கும், கேது சிம்மத்துக்கு வந்தாலும் எந்தவிதமான குறைபாடும் வராது. உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் மட்டும் உயர் அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
குரு பகவானும் ஆறாம் இடத்துக்குப் போவதால் தேவையில்லாத பிரச்சனைகளும், சண்டைகளும் வருவதற்கான வாய்ப்புள்ளது. அரசியலில் இருப்பவர்கள் ஜனரஞ்சமாக இருக்கக்கூடியவர்கள் சாதாரணமாக அட்வைஸ் கொடுப்பது கூட பிரச்சனைகளில் முடியும். திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு அனைத்துவிதமான நற்பலன்களும் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு ஏழரை சனி விட்டாலும் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
மகர ராசி பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகளுக்கு தீர்வு கிடைக்கும். அறுவை சிகிச்சை செய்து நன்றாக நடப்பீர்கள் அல்லது எதாவதொரு சிகிச்சை மூலமாக குணமடைவீர்கள். குடும்பத்தில் இதுவரை தாய், தந்தை பேசாமல் இருந்தவர்கள், சகோதரர்களுடனான பிரச்சனைகள், வர வேண்டிய சொத்துகள் அனைத்திலும் பேசி சுமூகமான தீர்வு காண்பீர்கள்.
நீண்டகாலமாக இருக்கக்கூடிய வழக்குகள், விசாரணைகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். புதிய நம்பிக்கை, புதிய வாழ்க்கை பிறக்கும் உங்களுக்கு. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை, உயர் பதவி, நல்ல சம்பளம் கிடைக்கும். இப்போதும் இருக்கும் சூழலில் இருந்து நல்ல மாற்றத்தைப் பெறுவீர்கள். புதிய அலுவலகத்தில் வேலை செய்வது போன்ற நல்ல இடமாற்றம் உண்டாகும்.
2, 8 இல் வரக்கூடிய ராகு கேது புதிய பரிமாணங்களைத் தருவார்கள். வரக்கூடிய வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டால் 6 ஆம் இடத்துக்குப் போகக்கூடிய குரு பகவானும் நமக்கு அதிகமான வாய்ப்பினை, சம்பாதிக்க கூடிய வாய்ப்பை வழங்குவார். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிலத்தில் முதலீடு செய்வது நல்லது. வீடு, வண்டி, வாகனம் யோகம் உண்டு.
கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். வியாபாரம் விஸ்தரிப்பு, புதிய வியாபார முயற்சிகள், வெளிநாட்டு தொடர்புகள் நிறைய கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்கள் நிறைய பணம் போட்டு செய்யலாமா என்றால் தைரியமாகச் செய்யலாம். இந்த சனிப்பெயர்ச்சி எதிர்பார்க்காத நல்ல விஷயங்களைக் கொடுக்கும். நாம் ஏற்கனவே எடுத்த முயற்சிகள் இப்போது நல்ல பலன்களைத் தரும்.
மகர ராசியில் இருக்கும் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் இருந்தே தொழில் செய்யும் பெண்களுக்கு நல்ல முன்னேற்றமான காலமாக இருக்கும். தொழில் செய்யும் முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் பொன்னாகும். சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டு.
மற்றவர்களுக்கு கடன் வாங்கிக் கொடுக்காமல் இருப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது. புதிதாக நண்பர்கள், முகம் தெரியாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வெளியூர் செல்லும் வாய்ப்பை உண்டாக்கித் தரும். 3 ஆம் இடத்துக்குப் போகக்கூடிய சனி பகவானால் இதுவரைக்கும் பெற்றோருக்கு இருந்து வந்த ஆரோக்கியப் பிரச்சனைகள் சரியாகும்.
பள்ளி மாணவர்களுக்கு அருமையான காலமாக இருக்கும். எதிர்கால திட்டம், மேல் படிப்புக்கான திட்டங்கள் அனைத்திலும் முன்னேற்றத்தை காண்பீர்கள். ஏழரை சனி விடுபடுவதால் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். சீர்காழியில் உள்ள அண்ணன் பெருமாள் ஆலயத்தில் வழிபடுவது, நரசிம்மருக்கு தீபம் போடுவது நன்மை பயக்கும்.
வரும் இரண்டரை ஆண்டுகாலங்களுக்கு மகர ராசிக்காரர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் பத்ரகாளி வழிபாடு நன்மையைத் தரும். கிரக தோஷங்களில் இருந்து விடுபட்டு நன்மையைப் பெறுவீர்கள்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications