சனி சுக்கிரன் சேர்க்கை: தானத்ய யோகத்தால் பணத்தை அள்ளப் போகும் 3 ராசிகள் எது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சனி சுக்கிரன் சேர்க்கை 2025: சனி பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஆகிய இருவரும் கும்ப ராசியில் இணைவதால் மூன்று ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப் போகிறது. பொருளாதாரத்தில் எதிர்பாராத வகையில் முன்னேற்றத்தை காணப் போகிறார்கள். எந்தெந்த ராசிக்காரர்கள் யோகத்தை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்... (சனி சுக்கிரன் இணைவு)

கிரகங்களின் சேர்க்கை, இடமாற்றம் ஆகியன ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தின்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் கிரகங்கள் பெயர்ச்சி அடைகின்றன. சில சமயத்தில் ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் இணைவதால் சில யோகங்களைப் பெறுவார்கள்.

saturn venus transit

அதன்படி 2025 புத்தாண்டில் கும்ப ராசியில் சனி மற்றும் சுக்கிரன் பகவான் இணைய உள்ளனர். சனி மற்றும் சுக்கிரனின் இந்த இணைவால் தானத்ய யோகம் உண்டாகிறது. இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்களின் பொருளாதாரத்தில் எதிர்பாராத அளவில் மாற்றத்தைப் பார்க்கப் போகிறார்கள். ஒரு ராசியில் இரண்டு கிரகங்கள் இணைவதால் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படும். இதில் சில ராசிக்காரர்களுக்கு பல்வேறு யோகங்கள் உண்டாகும்.

தானத்ய யோகத்தால் மூன்று ராசிக்காரர்கள் அனைத்து வகையான யோகங்களையும் பெறவுள்ளனர். பொருளாதார ரீதியில் அதிக லாபத்தைக் காணப் போகிறார்கள். அதிர்ஷ்டம் பெறும் அந்த 3 ராசிகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்...

மேஷம் (Aries): சனி பகவானும், சுக்கிர பகவானும் கும்ப ராசியில் இணைகின்றனர். இந்த சேர்க்கையால் பண வரவை அதிகம் பெறப்போகும் ராசிகளில் மேஷ ராசியும் ஒன்று. தானத்ய யோகத்தால் தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார சூழல் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பணம் சார்ந்த பிரச்னைகள் தீரும். பழைய சேமிப்புகள், முதலீடுகள் மூலமாக நல்ல வருமானம் கிடைப்பதற்கான யோகம் உண்டு. நீண்ட நாட்களாக திருமண வரனுக்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடும்.

துலாம் (Libra): தானத்ய யோகத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் நடப்பதற்கான யோகம் உண்டு. அரசியல் கட்சிகளில், உ.ரிய பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு கட்சியில் பெரிய பொறுப்புகள் கிடைக்கும். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கலைத் துறைகளில் இருப்பவர்களின் புகழ் பெருகும். மகிழ்ச்சியுடன் இருப்பதற்கான காலமாக இருக்கும். கடன்களை அடைப்பீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதார சூழல் நிலையாக இருக்கும்.

மகரம் (Capricon): சனி, சுக்கிரன் பகவானின் சேர்க்கையால் உருவாகும் தானத்ய யோகத்தால் மகர ராசிக்காரர்களின் பொருளாதார சூழல் மேம்படும். உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். வீடு மற்றும் நிலம் வாங்குவதற்கான யோகம் உண்டு. அலுவலகத்தில் உயரிய பதவிகளில் இருக்கும் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதன் மூலம் நல்ல பலனை அடைவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+