சிம்ம ராசிக்கு அஷ்டமசனியிலும் அதிர்ஷ்டம்.. சூரியனின் அருளால் பணத்தை மூட்டையில் அள்ளும் யோகம்
Aavani matha palan: ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. 2025 ஆம் ஆண்டின் ஆவணி மாதத்தில் சிம்ம ராசிக்கான பலன்கள், பரிகாரங்கள், என்னென்ன நன்மைகள் கிடைக்கும், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆவணி மாதம் பிறக்கப் போகிறது. சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் ஆரம்பமாகின்றன. அதன்படி, தலைமை கிரகமான சூரியன் ஆட்சி என்கிறது உயர்நிலை அமைப்போடு சிம்மத்தில் வலுவாக இருக்கப் போகிறார். இது விசேஷமான அமைப்பாகும். குரு மிதுனத்திலும், சனி மீனத்திலும், சுக்கிரன், புதனின் இயக்கங்கள் கடகத்திலும், சிம்மத்திலும் மாறியிருக்கின்றன.

கன்னியில் செவ்வாய் இருப்பது நல்ல விசேஷமான நிலையாகும். புதனில் குருவும், செவ்வாயும், கடகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பாகும். கும்பத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பது நல்ல மாற்றங்களைத் தரும். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் நிறைவடைந்து ஆவணி மாதம் பிறக்கிறது.
இந்த ஆவணி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், ஏற்படப் போகும் மாற்றங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதமாக இந்த ஆவணி மாதம் இருக்கும். உங்கள் ராசிநாதனாகிய சூரியன் ராசியிலேயே ஆட்சியாக இருக்கிறார். கேதுவோடு சேர்ந்து சூரியன் இருந்தாலும் உங்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும். 80 சதவீதம் நல்ல பலன்கள் அனைத்தும் கிடைக்கும். 11 ஆம் இடத்தில் குரு பகவான் வெற்றியைத் தரக்கூடிய இடத்தில் இருக்கிறார்.
பண வரவு
2 ஆம் இடத்தில் ராஜயோகாதிபதி 9க்கு உரியவர் 2 இல் இருப்பதால் பண வரவு அதிகரிக்கும். அந்தஸ்து, கெளரவம், வலிமை அதிகரிக்கும் காலகட்டமாக இருக்கும். எதை செய்ய முடியாது, சாதிக்க முடியாது என்று நினைத்தீர்களோ அவை அனைத்தையும் சாதிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். உங்களுக்கு எதிராக போட்டியாக இருந்த அனைத்து விஷயங்களும் ஒழியக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
அஷ்டமசனி
சட்டப் போராட்டங்கள், போலீஸ், கோர்ட் தொடர்பான விஷயங்களில் இருந்து விடுதலை அடையும் யோகம் உண்டாகும்.. அந்த விஷயங்கள் அனைத்திலும் வெற்றியை நோக்கி நகரக்கூடிய சிறப்பு மாதமாக இருக்கும். அஷ்டம சனி ஒரு வருடத்துக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. 7 ஆம் இடத்தில் ராகு இருப்பது மிகப்பெரிய நன்மையை ஏற்படுத்தும்.
கைகொடுக்கும் ராகு
அஷ்டம சனியை ராகு செயல்படுத்த விடாது. 7 இல் ராகு இருப்பதால் கணவன், மனைவிக்குள் பிரச்சனை, கருத்து வேறுபாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவி உறவுகளிடம் அனுசரித்து, பார்த்து செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். காதல் கைகொடுக்காது. இளைய பருவத்தினருக்கு மன அழுத்தத்தை கொடுக்க கூடிய தன்மை உள்ளது.
காதல் வேண்டாம்
20 - 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வேலை அமைப்புகள் போராட்டமாக இருக்கும். வேலையை விட, தொழிலை விட, காதலுக்கு முக்கியம் கொடுத்தால் மன அழுத்தம் நிச்சயம் ஏற்படும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம், எல்லா சூழ்நிலைகளிலும் குடும்பம் அமையக்கூடிய அமைப்புக்கான கட்டமைப்புகள் உருவாகும். வெற்றிகள் கிடைக்கும்.
தொழில்
தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் லாபங்கள் ஏற்படும். பண வரவிற்குத் தடை இல்லாத அமைப்பு உள்ளது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அபரிமிதமான மாற்றங்கள் ஏற்படும் காலகட்டமாக இருக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். பண வரவிற்குப் பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் காலகட்டம்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications