Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு சொத்துகளை குவிக்கும் யோகம்.. உடனிருப்பவர்களிடம் கவனம்

Subscribe to Oneindia Tamil

வார ராசி பலன்: அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலான புரட்டாசி 20 முதல் 26 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான சிம்ம ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

Weekly rasi palan Simmam Lucky zodiac signs

சூரியன் கன்னி ராசியில் வரக்கூடிய மாதமே புரட்டாசி. கன்னி என்பது புதனின் வீடு. புதனுக்கு மிதுனம், கன்னி ஆகிய இரண்டு வீடுகள் உள்ளன. செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் நவராத்திரி ஆரம்பித்து நிறைவடைந்துள்ளது. அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் அனைத்து விஷயங்களிலும் அனுகூலம் காணப்படும். குடும்பத்தில் துணைவியாருடன் மனம் விட்டுப் பேசுவது நன்மை பயக்கும். காதல் அமைப்பில் கனிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது நல்லது. அசையும், அசையா பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். அமைதியாக இருப்பது நன்மை பயக்கும். அஷ்டமத்தில் சனி இருப்பதால் நல்ல நட்புகள், நல்ல உறவுகளை கெடுக்க பார்க்கும்.

மற்றவர்கள் சொல்

தேவையில்லாதவர்கள் சொல்வதை வேதவாக்காக கேட்க வைக்கும். பிள்ளைகள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. தாயாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும் பிள்ளைகள் சொல்வதைக் கேட்பது நன்மையை ஏற்படுத்தும். தொழில் ரீதியாக சிறு சிறு சலசலப்புகள் காணப்படும். ஆனால், அந்த சலசலப்புகள் விரைவில் மாறும் அமைப்பு உண்டு.

பொறுமை அவசியம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் பேப்பர் போடுவது, வேலையை விடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தொழிலில் பிரச்சனைகள் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மேலதிகாரிகளிடம் வாக்குவாதம், தர்க்கத்தை தவிர்ப்பது நல்லது. பொறுமை, நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். புரட்டாசி முடியும் வரை வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தோப்புக்கரணம்

நல்லெண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்வது மன அழுத்தத்தை போக்கும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். அஷ்டமத்தில் இருக்கும் சனிக்கு தினமும் 11 முறை தோப்புக் காரணம் போடுவதால் மனம் தெளிவடையும். இல்லையெனில் மனக் குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். மனம் கோபமான தன்மையில் இருக்கும்போது மற்றவர்களிடம், உறவினர்களிடம் கடிந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

ஆரோக்கியம்

பெற்றோர், பெரியோரிடம் மனம் விட்டுப் பேசுவது நன்மையை ஏற்படுத்தும். கண்டிப்பாக சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு. திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. உத்தியோகம், தொழிலில் கவனமாக இருப்பது நல்லது. காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவு, அலர்ஜி, சளி தொந்தரவு, அலர்ஜி, பல் தொடர்பான பிரச்சனைகள் போன்றவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.

வழிபாடு

சனிக்கிழமை தோறும் தாயார், பெருமாள் வழிபாடு செய்வது முன்னேற்றத்தை தரும். சகலவிதத்தில் நன்மையை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+