Simmam Rasi Palan: சிம்ம ராசிக்கு உறவுகளால் வரும் சிக்கல்.. தப்பிக்க இதை மட்டும் பண்ணுங்க
Simmam Rasi Palan: சித்திரை மாதம் தொடங்கியுள்ள நிலையில், சிம்ம ராசியினருக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகளும் சில முக்கிய மாற்றங்களும் காத்திருக்கின்றன. தொழில், பணவரவு, உறவுகள் உள்ளிட்டவற்றில் கிடைக்கும் பலன்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பரிகாரங்களை இங்கே பார்க்கலாம்.
சித்திரை மாதம் 2026 மற்றும் பராபவ தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது. சூரிய பகவான் மீன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகியுள்ளார். இந்த சித்திரை மாதத்தில் அட்சய திருதியை நன்னாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கல் உப்பு, அரிசி, பருப்பு வாங்குவது நன்மையைத் தரும். மே 4 முதல் 28 ஆம் தேதி வரை கடும் வெயில் நிலவும்.

பராபவ வருடத்தின் முதல் மாதமான இந்த சித்திரை மாதத்தில் ஒவ்வொரு ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில், இந்த சித்திரை மாதத்தில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து பார்க்கலாம்.
சிம்மம் (Simmam Rasi Palan)
சிம்ம ராசியினருக்கு தடைகள் அனைத்தும் தவிடு பொடியாகும் காலகட்டம். புதிய பொறுப்புகள் தேடி வரும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறி இனி அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். விடுபட்டிருந்து தெய்வ வழிபாடுகளைச் செய்து மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
கவனம்
உறவுகள் தொடர்பான விஷயங்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் செய்யாத தப்புக்கு பழியேற்கும் நிலைமை ஏற்படும். ஏதாவதொரு கோபம் உருவாகிக் கொண்டே இருக்கும். கோபத்தில் அதீத கவனமாக இருப்பது நல்லது. நெகட்டிவாக சிந்திப்பது, அதுபோன்ற நபர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதும் நன்மையைத் தரும். நிம்மதியான தூக்கம், உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் கொடுப்பது அனுகூலத்தை ஏற்படுத்தும்.
தடை நீங்கும்
சிறு சிறு தடைகள் காணப்பட்டாலும் தெய்வத்தின் அருளால் அவை தவிடு பொடியாகும். உயர்கல்வி, ஆன்மீகம் தொடர்பான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். தொலைதூர பயணங்களை மேற்கொள்வீர்கள். கல்வி, வேலை தொடர்பாக வெளியூர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் வெளிநாடு நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படும்.
அனுகூலம்
அந்த தொடர்புகள் மூலமாக சில அனுகூலங்கள் ஏற்படும். எல்லா விஷயத்திலும் நேர்மறையான கண்ணோட்டம் உங்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை தரக்கூடியதாக அமையும். தலைவலி, தொற்று நோய் சம்பந்தப்பட்ட பாதிப்புகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது நன்மையைத் தரும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. தினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் கடைப்பிடிப்பதே சிறந்த பரிகாரமாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. விநாயகர் வழிபாடு, முருகர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். சுப்பிரமணிய புஜங்கத்தை கேட்பது படிப்பது நன்மையைத் தரும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications