தற்கொலை எண்ணத்தை தடுப்பது எப்படி? ஜோதிட பரிகாரம் இருக்கிறதா? முழு விவரம்!
சென்னை: தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல என்று தெரிந்தும் பலரும் தங்களின் உயிரை தற்கொலை செய்து மாய்த்துக்கொண்டுள்ளனர். ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று உயர்பதவி வகித்த காவல்துறை அதிகாரி விஜயகுமாரின் தற்கொலை பலரையும் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது. தற்கொலை மரணங்களுக்கு ஜோதிடரீதியான காரணங்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
தற்கொலைக்கான காரணங்கள்: தற்கொலை என்பது மிகப்பெரிய சமூக பிரச்சினை கொலைகள், விபத்துக்கள் மூலம் நிகழும் மரணங்களை விட தற்கொலை மூலம் நிகழும் மரணங்கள் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர் 10 ஆம் தேதியை உலக தற்கொலை தடுப்பு தினமாக உலக சுகாதார நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. கடன் தொல்லை, நோய்களின் தீவிரத்தினால் சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதே நேரத்தில் நன்றாக படித்த சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருந்தவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்தால் ஜாதகத்திலேயே தற்கொலைக்கான காரணத்தையும் அறிந்து கொள்ளலாம். சனி கர்ம வினை கிரகம். கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார். அதனால் எந்த ராசியில் நின்றாலும் தப்பு செய்தால் அவருக்கு பிடிக்காது. ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும்.

மரணம் எப்போது நிகழும்: ஒருவருக்கு நீண்ட சிறப்பான ஆயுளை தரும் கிரகம் சனி பகவான் ஆவார். ஒரு ஜாதகத்தில் 8 ஆம் இடத்தை கொண்டு ஆயுளை பற்றியும் 2 , 7, 11ஆம் இடத்தை கொண்டு மரணத்தை பற்றியும் கூறமுடியும். மாரக தசை அல்லது புத்தி வரும் காலங்களில் மிக கவனமுடன் இருப்பது அவசியம். ஓருவருக்கு 2,7,11 அதிபதிகள் தொடர்பு கொள்ளும் காலங்களில் ராகு அல்லது கேதுவையும் தொடர்பு கொள்ளும் போது மரணம் ஏற்படுகிறது.மாரகாதிபதிகளின் தசாபுத்திகாலத்தில் லக்னத்திற்க்கு ஏற்படும் கிரகங்களின் தொடர்பை பொருத்து மரணத்தின் தன்மை அமைந்துவிடுகிறது. மரணத்திற்கு அதிபதிகளான 2,7,11 அதிபதிகளின் தசா புத்தி அந்தரங்கள் நடைபெற்று அப்போது கோசாரத்தில் ராகு/ கேது ஆகிய சர்ப கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை ஆயுள் ஸ்தானத்திற்கு அமைந்து நிற்கும் போது மரணத்திற்கு நிகரான கண்டங்கள் நிகழ்கின்றது.
ஆயுஸ் ஸ்தானம்: பொதுவாக ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். எட்டாம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். 8ஆம் இடத்தில் கிரகம் அமர்ந்தால் அந்த தசைகளில் மரணத்துக்கு ஒப்பான கண்டங்களையும் நஷ்டங்களை ஏற்படுத்தும். லக்னத்துக்கு 8ல் செவ்வாய் இருந்தால் ரத்தக் கொதிப்பு ஏற்படும். புதன் வந்தால் தண்ணீரில் கண்டம் வரும். சுக்கிரன் வந்தால் கோழை மனதோடு,தற்கொலைக்குத் தூண்டும்.எனவே அதற்கான பரிகாரங்களைச் செய்து கொள்ள வேண்டும்.
தற்கொலை எண்ணம்: ஜாதகத்தில் லக்னாதிபதி பாதிக்கப்படுவது, 6, 8, 12 ஆம் இடங்களில் மறைவதால் தற்கொலை எண்ணம் ஏற்படுகிறது. சந்திரனை மனோகாரகன் ஜாதகத்தில் சந்திரனின் பலம் குறைந்தவர்களுக்கு, லக்னாதிபதி வலிமையாக இருக்கும் பட்சத்தில் தற்கொலை எண்ணம் ஏற்படாது. லக்னாதிபதியும், சந்திரனும் வலிமை இழந்திருக்கும் பட்சத்தில் லக்னத்தில் அமர்ந்திருக்கும் கோள் தற்கொலை எண்ணத்தைக் கட்டுப்படுத்தும். சூரியனும் பலமாக இருந்தால் தற்கொலை எண்ணம் தடுக்கப்படும். அதேபோல கிரகங்களின் கூட்டணி வலிமையாக இருந்து சுப கிரகங்களின் பார்வை இருந்தாலும் தற்கொலை எண்ணம் ஏற்படாது.
கொடூர மரணம்: சந்திரன் மனோகாரகன், புதன் புத்திநாதன். சந்திரனும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்தால் தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது. கிணற்றில் குதித்தும், கடலில் குதித்தும், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் சந்திரன் நீர் காரகன். ராகு கேது பாம்பு கிரகங்கள். சந்திரனின் மீது ராகுவின் நிழல் படரும்போது, அதாவது ராகுவின் தாக்கம் உடையவர்களுக்கு தற்கொலை எண்ணம் தோன்றுகிறது.
விஷம் குடித்து தற்கொலை: ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன், ராகுவோடு சூரியனின் தாக்கமும் இணையும்போது அவமானம் அல்லது கவுரவக் குறைபாடு ஏற்படுகிறது. புதனுடன் ராகு சேர்ந்து வலுவில்லாத நிலையில் இருக்கும் ஜாதகக் காரகர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வார்கள். சிலர் விஷ ஊசி போட்டும் உயரமான மாடியில் இருந்து குதித்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர். புதனோடு கேது சேர்ந்திருக்கும் ஜாதகக் காரகர்கள் ரசாயனங்களை குடித்து தற்கொலை செய்து கொள்வார்களாம். பொட்டாசியம் சயனைடு, தூக்கமாத்திரை குடித்தும் தற்கொலை கொள்வார்கள்.
சனிபகவான்: சனி ஆயுள்காரகன் ஒருவரின் ஆயுளை தீர்மானிப்பவர் சனிதான். ஒருவரின் மரணம் எப்படி இருக்கவேண்டும் என்று முடிவு செய்பவரும் சனிதான். சனியோடு புதன் சேர்ந்து வலிமையற்ற நிலையில் இருந்தால் வண்டி வாகனங்களில் மோதி தற்கொலை செய்து கொள்வார். ஓடும் கார் அல்லது பேருந்தில் விழுந்தும், ரயிலில் விழுந்தும் கொடூரமான முறையில் தற்கொலை செய்து கொள்வார்களாம்.
தற்கொலை எண்ணம்: ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயும் புதனும் வலிமையற்ற நிலையில் இணைந்திருந்தால் தீக்குளித்து தற்கொலை செய்வார்களாம். கையை, கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டும் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொண்டும் தற்கொலை செய்து கொள்வார்கள். துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், மின்சார சாதனங்களாலும் தற்கொலை செய்து கொள்வார்களாம். பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் வலிமையான நிலையில் இருந்தால் தற்கொலை எண்ணங்கள் வருவதில்லை. இல்லாவிட்டால் கோடி கோடியாக பணம் இருந்து கோடீஸ்வரர்களாக வாழ்ந்தவர்கள் கூட நொடியில் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
பரிகாரம் என்ன: எந்த பிரச்சினை என்றாலும் எதிர்கொள்ளலாம். எதற்குமே தற்கொலை தீர்வாகாது. ஜாதகத்தில் கிரகங்கள் வலிமையற்ற நிலையில் இருந்தால் அதற்கேற்ப பரிகாரங்கள் செய்யலாம். இதற்குப் பரிகாரமாக ஆயுள் காரகனான சனைஸ்வர பகவானை வணங்குவது மற்றும் பித்ரு வழிபாடுகள் தொடர்ந்து செய்வது. தர்ம காரியங்கள் செய்யலாம். ஆண்டு தோரும் ஆயுஷ்ய ஹோமம் மற்றும் ம்ருத்யஞ்சய ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவை பிறந்த நாட்களில் செய்யலாம். எமனை சம்ஹாரம் செய்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் மற்றும் காலசம்ஹார மூர்த்தியை பிறந்தநாட்களிலும் ஜென்ம நட்சத்திரநாட்களிலும் வணங்குவது நன்மை தரும். மிருத்யுஞ்ச ஹோமம் செய்யலாம். ருத்ர ஹோமம் செய்யலாம். விஷ்ணு சகஸ்ராநாமம் படிக்கலாம். சந்திரனால் உண்டாகும் பாதிப்பினை சரிசெய்யும் திறமை சூரியனுக்கு உண்டு. அதேபோல புதனால் பாதிப்பு இருந்தால் அதையும் சூரிய பகவான் சரி செய்வார். அதிகாலைச் சூரியனின் ஒளிக்கதிர்களுக்கு மனிதனின் மூளையைச் சரிசெய்யும் திறன் உண்டு. அதனால்தான் நம் முன்னோர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்யும் பழக்கத்தினை ஏற்படுத்தினர். சூரிய நமஸ்காரம் செய்வது உடல்நலத்திற்காக மட்டுமின்றி, மனநலத்திற்கும் மிகவும் நல்லது. இது தற்கொலை எண்ணத்தை தடுக்கும் எனவே சூரியனை தினசரியும் வணங்குங்கள்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications