ஒரே கல்லில் ரெண்டு மாங்கா.. கன்னிக்கு அடிச்ச ஜாக்பாட்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி கொட்டும்
சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கு காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி ராசி பலன்
உத்திரம் 2, 3, 4 நட்சத்திர பாதங்களையும், அஸ்தம் 1, 2, 3, சித்திரை 1, 2 ஆகிய 9 நட்சத்திர பாதங்களையும் கொண்டது கன்னி ராசி. பொதுவாக கன்னி ராசிக்காரர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். புதனுடைய ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் சமயோஜித புத்தி இருக்கும். எந்த இடத்தில் எதைப் பேச வேண்டுமோ அதைப் பேசி சாதிப்பவர்களாக இருப்பீர்கள். அக்கவுண்ட், ஆடிட்டிங், தகவல் தொடர்புத் துறை, ரிசர்ச் துறைகளில் அதிக அளவில் இருப்பார்கள்.
பாக்கியம்
கன்னி ராசிக்காரர்களுக்கு 2 க்கு உரியவராகவும், 9 க்கு உரியவராகவும் சுக்கிர பகவான் இருக்கிறார். தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தின் அதிபதியாகவும், பாக்கியத்தை தரக்கூடியவராகவும் இருக்கிறார். தற்போது சுக்கிரன் 8 ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார். பணத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பாக்கியத்தில் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த சுக்கிரப் பெயர்ச்சி நல்ல பாக்கியத்தை கொடுக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
பணவரவு அதிகரிக்கும்
சுக்கிரன் 9 ஆம் இடத்தில் ஆட்சி பலத்தோடு வந்து அமர்கிறது. தனம் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றத்தை கொடுக்கும் பெயர்ச்சியாக இருக்கும். காசு பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். புதிய கடன்கள் வந்து சேரும். பணத்தால் அனுகூலம் ஆதாயம் உண்டாகும். செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். குடும்பம் அமையக்கூடிய காலகட்டம். திருமண யோகம் கைகூடி வரும். திருமணம் செய்யும் ஆர்வம் உண்டாகும். சுப காரியங்களை செய்து மகிழ்வீர்கள்.
குடும்பம்
கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரும் காலகட்டமாக இருக்கும். பெண்களால் அனுகூலம், ஆதாயம் உண்டாகும். எல்லாமே குடும்பத்துக்கு என்ற பொதுநலன் எண்ணம் வரும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழக்கூடிய காலகட்டமாக இருக்கும். சொகுசு சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் வாங்கும் தன்மை உருவாகும். உங்கள் பேச்சு, வாக்கு இனிமையாகும். பேச்சினால் மதிப்பு, மரியாதை கூடும்.
வண்டி, வாகன யோகம்
குரு பகவான் தன ஸ்தானத்தைப் பார்க்கிறார். பொருளாதாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகும். நல்ல படிப்பு படிக்கக்கூடிய அமைப்புகள் உண்டாகும். விரும்பிய துறைகளை விரும்பிய கல்லூரிகளில் எடுத்து படிப்பீர்கள். நல்ல யோகம் கிடைக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று நினைத்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். அதற்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.
வீடு, நிலம் அதிர்ஷ்டம்
சுக்கிரன் ஆட்சி பலத்தோடு இருப்பதால் வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். குழம்பிக் கொண்டிருந்தவர்கள் தெளிவுடன் விரும்பிய இடத்தில் வீடு, நிலங்களை வாங்குவீர்கள். 4 ஆம் இடத்தின் அதிபதியான குருவே 4 ஆம் இடத்தை பார்ப்பதால் புதிய வாகனங்கள், வீடுகள், அசையும் அசையா சொத்துகள் வாங்கும் அம்சம் உண்டாகும். குடும்பத்தில் புதிய உறவுகள் வந்து சேரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருமண யோகம்
திருமண யோகம் கைகூடி வரும். காதலில் இருப்பவர்கள் பெற்றோரிடம் சம்மதம் வாங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். அதில் வெற்றியையும் பெறுவீர்கள். அந்நியோன்யம் பெருகும். தூர தேசத்துக்கு செல்லும் வாய்ப்புகள் வரும். தகவல் தொடர்புத் துறையில் இருப்பவர்கள் வெளிநாட்டில், வெளிமாநிலம் சென்று வேலை செய்யும் அமைப்பு உண்டாகும். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
-
Tamil Puthandu Rasi Palan: மீனம் ராசிக்கு கோடிகளை குவிக்கும் நேரம்.. தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications