கும்ப ராசிக்கு சொத்துகளை குவிக்கும் சுக்கிரன்.. கால் வைக்கும் இடமெல்லாம் கரன்ஸி.. ஆரோக்கியம் கவனம்
சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கும் காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கும்ப ராசி பலன்
சனியின் ஆளுமையில் பிறந்தவர்கள் கும்ப ராசிக்காரர்கள். நிதானம், பொறுமையை இயல்பாகக் கொண்டிருப்பவர்கள். உழைப்பே உயர்வு தரும் என்று நம்புபவர்களாக இருப்பீர்கள். 3 ஆம் இடத்தில் இருந்து சுக்கிரன் 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். உங்கள் ராசிக்கு 4க்கு உரியவர் சுக்கிரன். சுகத்தை கொடுக்கக் கூடியவர். வீடு, வண்டி, வாகனத்துக்கு அதிபதியாக இருக்கக்கூடியவர் சுக்கிரன். பாக்கியத்தையும் கொடுக்க கூடியவர்.
சொத்துகள் சேரும்
சுக்கிர பகவான் 4 ஆம் இடத்தில் ராசியில் ஆட்சி பலம் பெற்று வலிமையாக வந்து அமர்கிறார். உங்களுக்கு சுகம் கட்டாயம் கிடைக்கும். வீடு, வண்டி, வாகன யோகம் உண்டாகும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். தாயின் நலம், தாய் சார்ந்த விஷயங்கள், தாய் வர்க்கம் ரீதியில், சொத்துகள் ரீதியில் தாயினால் அனுகூலம் உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.
4 என்பது வீடு. வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். வீடு வாங்குது, அப்பார்ட்மெண்ட் வாங்குவது, நிலம் வீங்குவது, வீட்டை புனரமைப்பது போன்றவை ஏற்படும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்ற நினைத்த வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். வாகனம் தயாரிப்பு உதிரி பாகம் தயாரிக்கும் தொழில், டிராவல்ஸ், வாகனம் சம்பந்தப்பட்ட தொழில்களைச் செய்யும் கும்ப ராசியினருக்கும் நற்பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.
குழப்பம் தீரும்
ரியல் எஸ்டேட் தொழிலில் நற்செய்தி வந்து சேரும். 4 க்கு உரியவர் 4 ஆம் இடத்திலேயே ஆட்சி பலம் பெற்று வலிமையாக இருப்பதாலும், காரக கிரகம் சுக்கிரன் வலிமையாக இருப்பதால் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதில் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். விவசாயத்தில் மாற்றம் கொண்டு வரும் காலகட்டமாக இருக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மனம் சார்ந்த விஷயத்தில் குழப்பம், தெளிவில்லாத தன்மை, முடிவை எடுக்க முடியாத நிலை இருந்திருக்கும். இனி அந்த நிலைமை எல்லாம் மாறும்.
பாக்கியம் கிடைக்கும்
பாக்கியாதிபதி வலுப்பெறுவதாலும், குரு பார்வை இருப்பதாலும் மிகப்பெரிய பாக்கியம் கிடைக்கும். எதை நினைத்து உழைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அந்த விஷயம் நடக்கும் நேரமாக இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். பண வரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய உறவு உங்கள் குடும்பத்தில் வந்து சேரும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
படிப்பு
குழந்தைகள் விருப்பப்பட்ட படிப்புகளை படிக்க வைப்பீர்கள். நீங்கள் விரும்பிய துறைகளை, படிப்புகளை படிக்கும் நல்ல காலகட்டமாக இருக்கும். ஜூன் 29 முதல் ஜூலை 8 ஆம் தேதி வரை சுக்கிரன் சூரியனின் நட்சத்திரத்தில் பயணிப்பதால், கூட்டுத் தொழிலில் அற்புதமான லாபத்தைக் காண்பீர்கள். அரசு அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். காதல் அமைப்பில் இருப்பவர்களுக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும்.
கடன் கிடைக்கும்
ஜூலை 8 முதல் 20 ஆம் தேதி வரை சுக்கிரன் சந்திரன் பயணிப்பதால் தொழிலை விரிவுபடுத்துவதற்கான கடன் கிடைக்கும். கடன் சார்ந்த விஷயங்கள் வெற்றிகரமாக அமையும். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். கடல் கடந்து செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது நல்லது.
முயற்சிகளில் வெற்றி
ஜூலை 20 முதல் 25 ஆம் தேதி வரை செவ்வாயின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் முயற்சிகள் நன்றாக இருக்கும். சகோதரர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வுகள் மாறும் காலகட்டமாக இருக்கும். தொழிலில் புதிய டெக்னிக்குகள், ஐடியாக்களைப் புகுத்தி அதில் வெற்றி காண்பீர்கள். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான வாய்ப்புகள் வந்து சேரும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என மாற்றங்களை கொடுக்கக்கூடிய காலகட்டமாகவும், திடீர் அதிர்ஷ்டங்கள் வரும் காலகட்டமாகவும் அமையும்.












Click it and Unblock the Notifications