Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகரத்துக்கு சுக்கிரன் அருளால் ராஜயோகம்.. புது வீடு, புது கார்னு வாழ்க்கையே மாறப்போகுது.. என்ஜாய்

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் யோக பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரப் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. சுக்கிரனே எல்லா மனித உயிர்களுக்கும் காதலுக்கும் காரணமாக இருப்பவர். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார்.

Sukkiran peyarchi Magaram Lucky zodiac signs

திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார். அதனால் அவரை களத்திர காரகன் என்றும் கூறுவார்கள். வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகர ராசி பலன்

உழைப்பே உயர்வு தரும் என்று நம்பக் கூடியவர்கள், மற்றவர்களுக்காக அயராது உழைப்பவராக மகர ராசியினர் இருப்பீர்கள். சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5க்கும், 10க்கு உரியவர். உங்கள் ராசிக்கு ராஜ யோகத்தைக் கொடுக்கக் கூடியவர் சுக்கிரன். 4 ஆம் இடம் எனும் சுக ஸ்தானத்தில் இருந்து 5 ஆம் இடம் எனும் பூர்வ புண்ணிய ஸ்தானத்துக்கு சுக்கிரன் பெயர்ச்சியாகிறார்.

நற்பெயர் கிடைக்கும்

5 ஆம் இடத்தில் சுக்கிர பகவான் ஆட்சி பலத்தோடு வலிமையாக இருந்து பலன்களைக் கொடுக்கப் போகிறார். 5 என்பது அதிர்ஷ்ட ஸ்தானம். சொந்த ஊருக்குச் சென்று வருவதற்கான பாக்கியம் உண்டாகும். அங்கு உங்களுக்கு நற்பெயர் உண்டாகும். பூர்வீகம் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்க்கும் காலகட்டமாக இருக்கும். பாகப் பிரச்சனை, சகோதர, சகோதரிகளுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு கட்டாயம் தீர்வு கிடைக்கும்.

கோயில் காரியம்

குலதெய்வத்தின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும். கோயில் திருப்பணிகளில் ஈடுபடுவது, முன்னின்று கோயில் காரியங்களைச் செய்யும் வாய்ப்பு உண்டாகும். குழந்தைகள் விஷயங்களில் நன்மை உண்டாகும். அவர்களுடைய ஆசைகள் நிறைவேறும் காலகட்டமாக இருக்கும். பிள்ளைகளின் படிப்பு நன்றாக இருக்கும். படிப்பு சார்ந்த விஷயத்தில் அனுகூலம் பெறும் அற்புதமான காலகட்டாக இருக்கும்.

குழந்தை பாக்கியம்

நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஜூன் 29 முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை 5க்கு உரியவர் 5 ஆம் இடத்திலேயே வலுப்பெற்றுள்ளதால் நிச்சயமாக குழந்தை பாக்கியம் உண்டாகும். புதிய உறவுகள் உங்கள் வீட்டிற்கு வந்து சேரும். அந்த உறவுகளால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அபரிமிதமான நன்மைகள், அதிர்ஷ்டங்கள், பதவி உயர்வுகள், அதிகாரம் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

அதிர்ஷ்டம்

ஜூலை 8 ஆம் தேதி வரை சுக்கிரன் சூரியனின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். எதிர்பாராத இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலம் செல்வதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் அற்புதமான மாற்றங்கள் உண்டாகும்.

தொழில்

தொழில் மூலமாக அபிவிருத்தி உண்டாகும். 10க்கு உரியவர் வலுப்பெறுவதால் தொழிலில் நல்ல விஷயங்கள் நடக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். கடன் வாங்கி தொழிலை விரிவுபடுத்துவதற்கான யோகம் உண்டாகும். பட்டம், பதவி, கெளவரத்தை நிலைநாட்டும் காலகட்டமாக இருக்கும்.

ஆசைகள் நிறைவேறும்

ஜூலை 20 ஆம் தேதி வரை சுக்கிரன் சந்திரனின் நட்சத்திரத்தில் பயணிப்பதால் உங்களுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேற்றக்கூடிய நேரமாக இருக்கும். தாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் தீரும். தாயின் சொத்துகள் வந்து சேரும். தாயுடன் பிணைப்பு அதிகரிக்கும். ஏற்கனவே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் சரியாகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த இடைவெளிகள் சரியாகும்.

புதிய உறவுகள்

அன்பு, பாசம், காதல் மேலோங்கும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து தொழில் தொடங்கும் யோகம் உள்ளது. ஏற்கனவே கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு நன்மைகள் உண்டாகும். நீங்கள் சந்திக்கும் நபர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய நண்பர்கள், புதிய உறவுகள் கிடைப்பார்கள். பழைய நண்பர்களை பார்க்கும் வாய்ப்பு உண்டாகும். அவர்கள் மூலமாக உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும்.

சொத்துகள் வாங்கும் யோகம்

ஜூலை 20 ஆம் தேதிக்குப் பிறகு செவ்வாயின் நட்சத்திரத்தில் சுக்கிரன் பயணிப்பதால் வீடு, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு வாங்கும் எண்ணம் மேலோங்கும். வீட்டை புனரமைக்கும் யோகம், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழும் சூழல் ஏற்படும். புதிய வாகனம், நிலம், வீடு, கட்டிய வீடு வாங்குவது, வீட்டை வாடகைக்கு விடுவது போன்ற விஷயங்களைச் செய்து மகிழ்வீர்கள். கலைத் துறையில் உங்களை ஈடுபடுத்தி ஜொலிக்கும் வாய்ப்பு ஏற்படும். டெக்ஸ்டைல், அழகு சம்பந்தப்பட்ட பொருள்கள் விற்பனை, தொழிலில் லாபம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம், ஜாக்பாட் யோகம் உண்டு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+