இறங்கி ஆடு கபிலா.. இது நம்ம காலம்.. கடக ராசிக்கு சுக்கிரனால் மாறும் வாழ்க்கை
சுக்கிரன் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில், இன்று சுகாதிபதியான சுக்கிரப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
உலகில் உள்ள மனித உயிர்களின் காதலுக்கு காரணமாக இருப்பவர் சுக்கிர பகவான். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார்.

வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடக ராசி பலன்
கடக ராசிக்கு சுக்கிரன் 10 ஆம் இடத்தில் இருந்து 11 ஆம் இடமான லாப ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகி ஆட்சி அமைக்கவுள்ளார். இது அடுத்த ஒரு மாதத்துக்கு அற்புதமான பலன்களை கொடுக்கும். உத்யோகத்தில் இருப்போருக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் லாபம் சிறப்பாக இருக்கும். உங்கள் உழைப்பு, திறமைக்கேற்ற பலன் அதிகளவு கிடைக்கும்.
மகிழ்ச்சி
உத்யோகத்தில் பதவி உயர்வு, தடைபட்ட நற் பலன்கள் நிவர்த்தியாகும். வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்கள் வாங்குவீர்கள். வீடு, நிலம், வண்டி, வாகனம் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகளின் சேர்க்கை இருக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இதுநாள் வரை இருந்த பிரச்னைகள் விலகும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
லாபம்
அஷ்டமத்து சனியால் கஷ்டப்பட்டவர்களுக்கு இந்த காலம் சிறப்பாக இருக்கும். உங்கள் லாப ஸ்தானத்துக்கு அதிபதியான சுக்கிரன் அதே லாப ஸ்தானத்தில் அமர்வது அற்புதமான பலன்களை கொடுக்கும். பொதுவாக லாப ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருப்பது அருமையான அமைப்பு. உத்யோகம், தொழிலில் அபரிமிதமான யோகங்கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
அதிர்ஷ்டம்
திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களை திக்கு முக்காட செய்யும். உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சனி பகவானும் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். இதனால் கடந்த காலங்களில் இழந்தவற்றை மீட்பதற்கான காலமாக இது இருக்கும். ஏற்கனவே தொழில் செய்தாலும், மனதில் நீண்ட காலமாக திட்டமிட்ட புதிய தொழிலையும் தொடங்குவீர்கள்.
முன்னேற்றம்
பண வரவு நன்றாக இருக்கும். உங்கள் பொருளாதாரம் உயர்வடையும். கலை, ஊடகம், அழகு சாதனம், கேளிக்கை சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்போர் நல்ல ஏற்றத்தை காண்பீர்கள். உங்கள் லாபம் பன் மடங்கு அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கான வழி வகை உருவாகும். தொழிலில் விருத்தியாகும். ஆன்மிக பயணம் மன நிறைவை தரும்.
சுப காரியங்கள்
புதிதாக உத்யோகம் தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகி உங்களின் முயற்சிகள் எல்லாம் வெற்றிகளாக மாறும். தடைபட்ட சுப காரியங்கள் தற்போது நிறைவேறுவதற்கான வாய்ப்புள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உத்யோகத்தில் பணிச்சுமை குறைந்து ஓய்வு கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
பரிகாரம்
அஷ்டமத்து சனி விலகிவிட்டது என்று நற் பலன்களுக்காக காத்திருக்கும் கடக ராசியினருக்கு இனி அடுத்தடுத்து நற் பலன்கள் கிடைக்கும். வேப்ப மரத்துக்கு தண்ணீர் ஊற்றுவதாலும், அருகில் உள்ள பிள்ளையார் கோயில் சென்று வழிபடுவதால் சுக்கிரனால் நற் பலன்கள் அதிகளவு கிடைக்கும்.












Click it and Unblock the Notifications