புது வீடு.. புது காரு.. மிதுன ராசிக்கு அள்ளி கொடுக்கும் சுக்கிரன்.. ஒரே ஒரு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அந்த வகையில், இன்று சுகாதிபதியான சுக்கிரப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

உலகில் உள்ள மனித உயிர்களின் காதலுக்கு காரணமாக இருப்பவர் சுக்கிர பகவான். காதலின் கிரகமாக கருதப்படும் சுக்கிர பகவான் ஜூன் 28 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு செல்கிறார். பொதுவாக சுக்கிரன் செல்வம் மற்றும் செழிப்புக்கு அதிபதியாவார். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களுக்கு அதிபதியாகவும் சுக்கிரன் இருக்கிறார்.

Sukkiran peyarchi Lucky zodiac signs Midhunam

வண்டி, வாகனம், தொழில் கூட்டாளிகள் உள்ளிட்ட சுக வாழ்க்கைக்கும் சுக்கிரன் முக்கியமானவர். நவ கிரகங்களில் சுக்கிரனை அசுரன் என்று அழைப்பார்கள். அந்த வகையில், இந்த சுக்கிரப் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மிதுன ராசி பலன்

மிதுன ராசிக்கு சுக்கிரன் பஞ்சமாவதி மற்றும் விரயாதிபதி ஆவார். இதுநாள் வரை சுக்கிரன் உங்களின் லாப ஸ்தானத்தில் இருந்தார். இதன் காரணமாக தொட்டதெல்லாம் பொன்னாகி அற்புதமான பலன்கள் கிடைத்திருக்கும். தற்போது அவர் 11 வது இடத்தில் இருந்து விலகி 12 ஆம் இடமான விரய ஸ்தானத்தில் பெயர்ச்சி ஆகியுள்ளார்.

சொத்து

உத்யோகம் மற்றும் தொழிலில் எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். சிலருக்கு வெளிமாநில, வெளிநாடு பயணங்கள் ஆதாயத்தை கொடுக்கும். சொந்த வீடு, நிலம், வண்டி, வாகனம் மாதிரியான சொத்துகள் சேரும். நீண்ட காலமாக நிறைவேறாத சொந்த வீடு கனவு இந்த காலத்தில் நிறைவேறுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.

அங்கீகாரம்

இந்த காலம் அரசியல் வாதிகளுக்கு சிறப்பானதாக இருக்கும். தடைபட்ட பதவிகள் எல்லாம் வந்து சேரும். புதிய பதவிகளால் உங்கள் பெயர், புகழ், அந்தஸ்து ஆகியவை உயரும். அரசுப் பணிகளில் இருப்போருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட அங்கீகாரங்கள் கிடைக்கும்.

மாற்றங்கள்

திடீர் அதிர்ஷ்டத்தால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்கான சுப செலவுகள் அதிகரிக்கும். தனவரவு நிச்சயம் உண்டு. உங்களின் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும். தொழிலில் முதலீட்டில் லாபம் நன்றாக இருக்கும். முன்னேற்றத்துக்கான பாதைகளை வகுப்பீர்கள். வீடு, உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும்.

பாராட்டு

தொழிலில் உங்களின் முயற்சி எவ்வளவு தீவிரமாக உள்ளதோ அவ்வளவு நற்பலன்கள் கிடைக்கும். சுப செலவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கணவன் - மனைவி இடையே அந்யோநியம் அதிகரிக்கும். உங்கள் புத்திசாலித்தனத்தால் நெருக்கடியான காலங்களில் சாதுர்யமாக செயல்பட்டு பாராட்டை பெறுவீர்கள்.

கவனம்

குழந்தைகளின் கல்வியில் கவன சிதறல் ஏற்படும். சிலருக்கு மனதில் அதிகளவு எண்ணங்கள் பாய்ந்தோடும். எண்ணங்களில் கட்டுப்பாடு தேவை. பணிச்சுமை, அலைச்சல், தூக்கமின்மை அதிகரிக்கும். கவனமாக இல்லையென்றால் உத்யோகத்தில் முன்னேற்றம் தடைபடுவதுடன் சின்ன சின்ன பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

பரிகாரம்

குழந்தைகளுக்கான செலவை வீண் விரயம் ஆகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். காரணம் பண வரவுக்கு ஏற்ற செலவும் இந்த காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எதிர் பாலினத்தவர் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுவது மற்றும் அம்மன் கோயிலுக்கு குங்குமம் வாங்கித் தருவது நன்மையை தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+