Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ் புத்தாண்டு பலன்: ராஜயோகம் பெறும் சிம்ம ராசி.. பணத்திற்குப் பஞ்சமே இருக்காது

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு பலன்: தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வரவுள்ளது. வரும் புத்தாண்டு புதுமைகளைத் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய ஆசையாகவும் இருக்கும். அந்த வகையில், துலாம் ராசிக்காரர்களுக்கு வரும் தமிழ் புத்தாண்டில் என்ன மாதிரியான நற்பலன்கள் கிடைக்கும் என்று இந்த ஜோதிட கட்டுரையில் துல்லியமாகப் பார்க்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டை ஏராளமான மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்தப் புத்தாண்டு மாற்றங்களைத் தரக் கூடியதாகவும், முன்னேற்றம் மிக்கதாகவும் இருக்குமா என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய குரு சனி ராகு கேதுவின் பெயர்ச்சியை வைத்துதான் இந்த புத்தாண்டு பலன்கள் கணிக்கப்படுகின்றன.

tamil-new-year-lets-take-a-look-at-the-good-benefits-and-yogas-that-thulam-libra-people-will-get

புராதன காலகட்டத்தில் வாழ்ந்த சித்தர்கள் எழுதி வைத்த பாடல்களைப் பொருத்துதான் அந்த வருடத்தின் முழு வெண்பாவும் அமையும் என்பதை பொதுப் பலன்கள் என்று கூறுவோம். அந்த அடிப்படையில் இந்த ஆண்டு விசுவாசுவ வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் இந்த வருடம் தொடங்குகிறது.

இந்த வருடத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். அதேபோல, இந்த ஆண்டு கண்டிப்பாக 12 ராசிக்காரர்களுக்கும் மகத்துவம் வாய்ந்த காலகட்டமாக இருக்கும். அந்த வகையில், துலாம் ராசியினருக்கு தமிழ்ப் புத்தாண்டில் கிடைக்கும் நல்ல பலன்கள், கிடைக்கக்கூடிய யோகங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன்

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் இந்த புத்தாண்டில் மிகச்சிறந்த பலன்களைப் பெறப் போகின்றனர். 8 இல் மறைந்த குரு 9 ஆம் இடத்தில் குரு வருகிறார். தொட்டதெல்லாம் துலங்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். வருட கிரகங்கள் என்று சொல்லக்கூடிய 4 கிரகங்களும் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமாக உள்ளது.

*5 ஆம் இடத்தில் இருந்த குரு 6 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார்

* 6 இல் இருந்த ராகு 5 ஆம் இடத்துக்கு வந்திருக்கிறார்

* விரையத்தில் இருந்த கேது 11 ஆம் இடத்தில் இருக்கிறார்

அசுப கிரகங்கள் என்று சொல்லக்கூடிய இடத்தில் எந்த கிரகங்கும் இல்லை. இதனால், நீங்கள் நினைத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளாக எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு மிகச்சிறந்த பொற்காலமாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத நல்ல செய்திகள் உங்களுக்கு வந்து சேரும். வாழ்க்கையில் கெட்டு ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்குப் பெயர்ந்தவர்களுக்கு மிகச்சிறந்த மாற்றங்கள் ஏற்படும்.

வெற்றி

மே மாதம் 11 ஆம் தேதிக்குப் பிறகு கட்டாய இடமாற்றம் உண்டாகும். பல நாடுகளுக்குப் பயணம் செய்யக்கூடி யோகம் உண்டாகும். பல தொழில் சார்ந்த விஷயங்களில் நல்ல முடிவுகளை எடுத்து தொழிலில் வெற்றிகளை குவிக்கப் போகிறீர்கள். கையில் கட்டுக் கட்டாக பணம் புழங்கக்கூடிய நேரமாக இருக்கும். துலாம் ராசிக்கு 3 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் புதிய முயற்சிகள் அனைத்தும் கைகொடுக்கும்.

ராஜயோகம்

கடந்த 4 வருடங்களில் முயற்சிகளில் தோற்றுப் போனவர்கள், மன உளைச்சலில் இருந்தவர்கள் மே 11 ஆம் தேதிக்கும் பிறகு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் முதலீடு செய்யலாம், மண் வாங்கலாம். புதிய முயற்சிகளை செயல்படுத்தலாம். வாழ்க்கைக்கு நல்லனவற்றை அனைத்தும் செய்யலாம். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள்.

கடனில் இருந்து விடுதலை

கடன் தொல்லைகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். கிரெடிட் கார்டு கடன்களில் இருந்து விடுதலை அடைவீர்கள். மன நோய், மன அழுத்தம் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். மறைமுகமாக இருந்த போட்டி, பொறாமை விலகும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

பொற்காலம்

ராசியை குரு பார்ப்பதால் எண்ணமும், மனதும் தெளிவாகும். இந்த ஆண்டு போல பொற்காலமாக இனிவரும் காலங்களில் அமைவது கடினம் என்பதால் அனைத்து முயற்சிகளையும் செய்து வரும் ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைத்துக் கொள்வது நல்லது. பணம், புகழ், செல்வம் அனைத்தும் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

எச்சரிக்கை

5 ஆம் இடத்தில் ராகு அமருவதால் பிள்ளைகள் விஷயங்களில் எச்சரிக்கை. பிள்ளைகளுடன் தேவையில்லாத மனஸ்தாபம் உண்டாகும். குழந்தை பாக்கியத்துக்காக மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு சிறு சிறு அசெளகரியங்கள் ஏற்படும். குலதெய்வ வழிபாடுகள் தடைபடும். 12 இல் இருந்து கேது விலகி லாப ஸ்தானத்தில் வருவதால் பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. வாயை கட்டுப்படுத்துவது நல்லது. சூழலுக்கேற்ப நடந்துகொள்வது அதீத நன்மையைத் தரும். கடன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

பெண்கள், மாணவர்கள்

மாணவர்களுக்கு இதுவரை பல தடுமாற்றம் இருந்திருக்கும். போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பெண்களுக்கு மிகச்சிறந்த பலன்கள் கிடைக்கும். மறுமணம் உண்டாகும். திருமணத்தில் நல்ல சந்தோஷ அமைப்பு உண்டாகும். மனச் சிக்கலில் இருந்து விடுபட்டு புதிய முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். 12 மாதத்துக்குப் பின்னர் பெரிய புகழ் உண்டாகும். தொழில் அதிபராகக்கூடிய சூழல் ஏற்படும்

மதிப்பெண்

துலாம் ராசிக்காரர்களுக்கு 100க்கு 99 சதவீதம் நல்ல அமைப்பாக இருக்கும்.

வழிபட வேண்டிய தெய்வம், பரிகாரம்

துர்கை வழிபாடு அருமையான பலன்களைத் தரும். அம்பாள், காளி, துர்கை கோயிலில் வெள்ளி, ஞாயிறில் ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றுவது நல்லது. எலுமிச்சை மாலை சாற்றுவதும் நல்லது. கடன் சுமை, நோய்கள் தீர எலுமிச்சம்பழத்தை தலையை சுற்றி சூழத்தில் ஏற்றி வைப்பது நன்மையைத் தரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+