Tamil Puthandu Palan: சிம்ம ராசிக்கு குரு பார்வை.. அஷ்டமசனியிலும் அதிர்ஷ்டத்தை அள்ளும் யோகம்
Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன்கள் (Simmam Rasi Palangal)
சிம்ம ராசியினருக்கு அற்புதமான ஆண்டாக இருக்கும். குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருக்கும்போது புத்தாண்டு பிறந்துள்ளதால் வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும். வருமானம், வசதி வாய்ப்புகள் நன்றாக இருக்கும். கணவன், மனைவிக்குள் சிறிய சிறிய பிரச்சனைகள், சிக்கல்கள் பிரிவுகள் ஏற்படும். டிசம்பர் மாதத்தில் இருந்து அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
குரு பார்வை
சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான யோகம் ஏற்படும். கடந்த ஓராண்டாக 8 இல் சனி இருப்பதால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்திருப்பீர்கள். அதனால் பயப்படத் தேவையில்லை. 12 இல் வரப்போகும் குரு பகவான் 8 ஆம் இடத்தில் உள்ள சனி பகவானை பார்ப்பதால் அஷ்டமத்து சனியால் வரும் பாதிப்புகள், தாக்கம் பரிபூரணமாக விலகும்.
வெற்றி மேல் வெற்றி
அதீத உழைப்பை, முயற்சியை போட வேண்டிய காலகட்டமாக இருக்கும். எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நன்மை பயக்கும். எதிர்ப்புகளை தோற்கடிக்க கூடிய அமைப்புள்ளது. வெற்றிகளைக் குவிக்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். பெரியளவில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. நிறைய சுற்றுப் பயணங்கள் செய்யக்கூடிய அமைப்பு ஏற்படும்.
வெளிநாடு யோகம்
வெளிநாடு, வெளிமாநிலத்தில் செட்டிலாக வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு அந்தப் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எல்லா விஷயங்களிலும் ஒரு நிம்மதி ஏற்படும். ராசியாதிபதி சூரியன் உச்சம் பெற்றிருப்பதால் அஷ்டமசனியின் அச்சம் நீங்கும். இதுவரை இருந்து வந்த மன சங்கடங்கள் பரிபூரணமாக நீங்கும். குரு பகவான் நல்ல அமைப்பில் உள்ளதால் நிறைய நன்மைகள் ஏற்படும் காலகட்டம்.
வழிபாடு
ஒருவிதமான சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். சொத்து தொடர்பான சந்தேகம், எந்த விஷயத்தை எடுத்தாலும் இப்படி ஆகிவிடுமோ, அப்படி ஆகிவிடுமோ என்பது போன்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். அதுபோன்ற நிலைமைகள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கும். திருவண்ணாமலை சென்று வழிபாடு செய்வது சிம்ம ராசியினருக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications