Viruchigam: விருச்சிக ராசிக்கு அடிக்கும் பம்பர் பரிசு.. வெற்றிகள் குவியும்.. வீடு, நிலம்னு செட்டிலாகும் நேரம்
Tamil Puthandu Palan: தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டு பிறந்துள்ளது. கிருஷ்ணபட்சத்தில் துவாதசி திதியில், சதயம் நட்சத்திரத்தில் இந்தப் புத்தாண்டு பிறந்துள்ளது. இந்த தமிழ்ப் புத்தாண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
பரிவர்த்தன யோகத்தோடு உருவாகியுள்ள இந்த தமிழ் புத்தாண்டில் பல்வேறு யோகங்கள் கண்டிப்பாக கிடைக்கும். வரும் குருப்பெயர்ச்சியின் மூலமாக குரு பகவான் உச்சமடைவதால் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார முன்னேற்றங்கள் நல்லவிதமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான நன்மைகள் கிடைக்கும் அற்புதமான ஆண்டாக இருக்கும்.

குரு பகவான் வீட்டில் புதன் பகவானும், புதன் பகவான் வீட்டில் குரு பகவானும் இருப்பதால் சரளமான வகையில் சிறப்பு, உத்தியோகத்தில் நல்ல பொறுப்பு கிடைக்கும். ஏழ்மை விலகி செல்வாக்கு அடையும் சிறந்த ஆண்டாகும். மழைப்பொழிவு நன்றாக இருக்கும். விளைச்சல் அதிகமாக இருக்கும். பசுக்கள் நிறைய பாலை கொடுக்கும். உரத் தொழிற்சாலைகள் நம் நாட்டிலேயே அதிகளவில் உற்பத்தி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும். காப்பீடில் நிறைய மாற்றம் ஏற்படும். மகசூல் நன்றாக இருக்கும். அந்த வகையில், இந்த தமிழ்ப் புத்தாண்டில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்கள் (Viruchigam Rasi Palangal)
விருச்சிக ராசிக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு வெற்றிகளைக் குவிக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். சொந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் உள்ளது. எந்தவித உதவியும் இல்லாமல் சாதகமான சந்தர்ப்பங்கள் அமையும். ராசிக்கு அதிபதியான செவ்வாய் பகவான் பூமிக்கு அதிபதியாக இருப்பதால் பூர்வீகம் சொத்துகளில் இருக்கும் வில்லங்கங்கள் தானாக விலகும். பூர்வீக சொத்து இல்லை என்பவர்களுக்கு புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.
திடீர் அதிர்ஷ்டம்
விருச்சிக ராசியினருக்கு வேகம், விவேகம் எப்போதும் அதிகமாக இருக்கும். 4க்கு உடைய சனி பகவான் 5 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். தாய் சொல்லை தட்டாதவர்களாக இந்த ஆண்டு இருக்கும். 7 ஆம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் விபரீத ராஜயோகத்தில் அமர்ந்திருப்பதால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் நிறைய நன்மைகள் நடக்கும். இதுவரை ஒரு மாடி விட்டு ஏழையாக இருப்பீர்கள்.
குரு பார்வை
பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காத நிலைமைகள், கணவன், மனைவிக்குள் கருத்து மோதல்கள் போன்றவை இருக்கும். அந்த நிலைமை படிப்படியாக மாறும். ஜூன் மாதத்தில் இருந்து ராசியை குரு பார்ப்பதால் பொற்காலமாக இருக்கும். வாடகை கடையை சொந்தமாக வாங்குவீர்கள். உத்தியோகத்தில் அடுத்தடுத்து பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புதையல் தரக்கூடிய ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு இருக்கும்.
அனுகூலம்
8 இல் குரு, 5 இல் சனி என இதுவரை பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்திருப்பீர்கள். உளவியல் ரீதியான பிரச்சனைகள் இருந்திருக்கும். இனி அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். குறிப்பாக, ஜூன் மாத ஆரம்பத்தில் மன அழுத்தம் போன்றவை இருந்தாலும் அதிலிருந்து வெளிவரக்கூடிய அமைப்பு ஏற்படும். ஜூன் மாதத்தில் இருந்து எல்லா விஷயங்களும் சிறப்பாக இருக்கும்.
முயற்சிகளில் மேன்மை
டாப் கிளாஸ் யோகம் உண்டாகும் புத்தாண்டாக அமையும். உச்ச குரு ஜூன் மாதம் 2 ஆம் தேதியில் இருந்து 5 ஆம் பார்வையாக பார்ப்பது விருச்சிக ராசியைத் தான். நல்ல அறிமுகங்கள் கிடைக்கும். அமைச்சர், எம்எல்ஏ, செல்வாக்கு மிகுந்தவர், பணக்காரர்களின் தொடர்புகள், சந்திப்புகள் ஏற்படும். ஒரு வருடமாக என்ன விஷயங்கள் நடக்கவில்லை என்று முயற்சி செய்து கொண்டிருந்தீர்களோ அந்த விஷயங்கள் நடக்கும் காலகட்டம்.
வழிபாடு
வீடு, நிலம் வாங்கும் அமைப்பு உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். உத்தியோகத்தில் நல்ல மாற்றங்களும், முன்னேற்றங்களும் ஏற்படும் காலகட்டம். மன அழுத்தம் நீங்கும். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி பெறும் யோகம் உண்டு. மிகப்பெரிய மாற்றங்கள், உன்னதங்கள் ஏற்படும் அமைப்பு உள்ளது. திருச்செந்தூர் முருகனை வழிபாடு செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications