தமிழ் புத்தாண்டு பலன்: தனுசு ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. சொந்த வீடு கன்ஃபார்ம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் தனுசு ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தனுசு ராசி பலன் (Dhanusu Rasi Palan)
தனுசு ராசியினருக்கு அர்த்தாஷ்டம சனி நடந்து கொண்டிருக்கிறது. உறவினர்களுடன் தகராறு இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அவர்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் செய்து கொள்வது நன்மை. தனிமைப்படுத்திக் கொண்டு உங்களை வருத்திக் கொள்ள கூடாது. மனதிற்குப் பிடித்தவர்களை சந்திப்பது நன்மை.
உடற்பயிற்சி
மகிழ்ச்சியாக இருக்கலாம். அர்த்தாஷ்டம சனி என்பதால் அச்சப்படத் தேவையில்லை. ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொள்வது நல்லது. உடற்பயிற்சி, நடைப்பயிற்சியை தவறாமல் செய்ய வேண்டும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நிறைய பயணங்களை மேற்கொள்வீர்கள். உள்ளூரிலேயே நிறைய பயணம் ஏற்படும்.
வீடு கட்டும் யோகம்
வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டு. அசையும், அசையா பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிப்பது, வீடு கட்டுவது, உங்களுக்குப் பிடித்த முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் அடுத்தடுத்து நடக்கும். வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பண வரவு நன்றாக இருக்கும்.
திருமண யோகம்
திருமண யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குலதெய்வ வழிபாடு அற்புதமான ஏற்றத்தைக் கொடுக்கும். சுபவிரயங்கள் நடக்கும். வீட்டை புதுப்பிப்பது, இன்டீரியர் டெக்கரேட் செய்வது போன்ற சுபவிரயங்களைச் செய்வீர்கள். வாங்கிய பொருள்களையே வாங்குவதை தவிர்ப்பது நல்லது. நியாபக மறதி ஏற்படும்.
வழிபாடு
பழைய கடன்களை அடைக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். சனி இருப்பதால் தினந்தோறும் ஆயில் புல்லிங் செய்வது நன்மை. மூச்சுப் பயிற்சியை கடைப்பிடிக்க வேண்டும். திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். நல்லெண்ணெய், பசு நெய், திருநீறு, குங்குமம் வைத்து வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications