தமிழ் புத்தாண்டு பலன்: சிம்ம ராசிக்கு கடன் பிரச்சனை ஓவர்.. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்?
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் ராசி பலன் (Simmam Rasi Palan)
சிம்மம் ராசியினருக்கு அஷ்டமசனி இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். டிசம்பர் வரைக்கும் கேது இருப்பதால் வண்டி வாகனத்தில் செல்லும்போது மிகுந்த கவனமாக இருப்பது நன்மை பயக்கும். 24 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாகனத்தில், தொழிலில், குடும்பத்தில் கவனமாக இருப்பது நல்லது. துணை சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. அவர்கள் உங்கள் நன்மைக்காகவே சொல்வார்கள் என்பதால் அதைக் கேட்பது நல்லது.
கடன் தீரும்
உறவுகள், நண்பர்கள் உங்களை உசுப்பேற்றுவதை நம்பாமல் இருப்பது நன்மை. குரு 12 இல் கடகத்தில் உச்சம் பெறுவதால் தாய் வழி உறவுகள், ரத்த பந்த உறவுகளில் மேன்மை ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். கடனை அடைப்பதற்கான முயற்சிகளில் ஏற்றம் பெறுவீர்கள். நிம்மதி ஏற்படும். முதலீடுகளை செய்து மகிழ்வீர்கள். இதுவரை இருந்து வந்த நோய் பாதிப்புகள் படிப்படியாக குணமடையும்.
ஆரோக்கியம்
நடக்க முடியாதவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு குணமடைவீர்கள். நன்றாக நடக்கத் தொடங்குவீர்கள். எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும். நரம்பு, வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. மோர், மாதுளம்பழம் சாப்பிடுவது நன்மையைத் தரும். உணவு தொடர்பான விஷயங்களில் அக்கறை செலுத்துவது நல்லது. இரவு 7 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வது நல்லது.
பொறுமை அவசியம்
தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் மேலதிகாரிகளுக்கு ஆலோசனை கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. இணக்கமாகச் செல்ல வேண்டும். பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது நல்லது. ஆரோக்கியம் பலப்படும். பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
வழிபாடு
திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் கோபப்படுவது, கத்துவதைத் தவிர்ப்பது நன்மையைத் தரும். சிம்ம ராசியினருக்கு திண்டிவனம் - பாண்டிச்சேரி செல்லும் வகையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். மாத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பைரவருக்கு தீபம் போடுவது நன்மையைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு டும் டும் டும் கன்ஃபார்ம்.. காதல் வாழ்க்கை இனிக்கும் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் காலகட்டம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: கன்னி ராசிக்கு மே 14க்கு பிறகு மாறும் வாழ்க்கை.. தொட்டதெல்லாம் துலங்கும் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏழரை சனியிலும் மேஷ ராசிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா.. முழு பலன்கள் விவரம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications