தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு ஃபாரீன் செல்லும் யோகம்.. கண்டகச் சனியிலும் அதிர்ஷ்டம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் இந்த பராபவ ஆண்டில் கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியினருக்கு பெரும் பொருளாதார லாபம் ஏற்படும். குரு பகவான் லாபத்தில் வந்து அமர்வதால் அற்புதமான லாபம் உண்டாகும். குடும்பத்தில் திருமண விஷயங்கள் கைகூடி வரும். நீண்ட நாட்களாக திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நல்ல முறையில் குழந்தை பிறக்கும் யோகம் உண்டு. பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் நடைபெறக்கூடிய அமைப்பு உள்ளது. கணவன், மனைவி விஷயத்தில் பிரச்சனைகள் இருக்கும் என்பதால் கவனம் தேவை.

வெளிநாடு யோகம்
திருமண வாழ்க்கையில் விட்டுக் கொடுத்துச் செல்வது நன்மை பயக்கும். நிறைய பேருக்கு வெளிநாடு யோகம் உண்டாகும். நல்ல கல்வி வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு தொழில்கள் அமையும். கம்யூனிகேஷன் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இளைய சகோதரர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய வியாபார ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். நிறைய முன்னேற்றம் ஏற்படும். நாக தெய்வங்களை வழிபாடு செய்வது மேன்மையைத் தரும்.
தன்னம்பிக்கை
ஆண்டு தொடக்கத்தில் கண்டக சனி இருந்தாலும், 10 இல் குரு உச்சமடைவதால் அற்புதமான வருடமாக இருக்கும். பட்டம், பெயர், புகழ் கிடைக்கும் அமைப்பு உள்ளது. பொருளாதார சுமைகள் உங்களுக்கு தீரும். 3 ஆம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் தன்னம்பிக்கை, தைரியம் ஏற்படும். சகோதர வழிகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
குழந்தை பாக்கியம்
குழந்தை பாக்கியம் கிடைக்கும். மன ரீதியாக நிறைய பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்த நிலைமைகள் எல்லாம் நீங்கும். காதல் வாழ்க்கை இனிக்க ஆரம்பிக்கும். தவறுதலான தொடர்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. வைகாசி மாத்திற்குப் பிறகு அனைத்து சுப காரியங்களையும் செய்து முடிக்க அற்புதமான வாய்ப்பாக இருக்கும்.
வேலைவாய்ப்பு
கண்டகச் சனி உங்களுக்கு இருந்தாலும் இந்த ஆண்டில் அற்புதமான யோகம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். குரு 10 ஆம் இடத்தில் கடந்த ஒரு வருடமாக வேலை போயிருக்கலாம். பதவியில் இருந்து கீழே வந்திருக்கலாம். குரு 11 ஆம் இடத்தில் கேதுவில் வருவதால் வெளிநாட்டில் வேலை தேடுவோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கடல் தாண்டி வேலைக்குச் செல்வீர்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.
பிரச்சனைகள்
ராகு பகவான் 5 ஆம் இடத்தில் வந்துவிடுவதால் பிள்ளைகளால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது. காதல் விஷயத்தில் பிரச்சனை, காதல் திருமணத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளதால் திருமண விஷயத்தை இந்த காலகட்டத்தில் பேசாமல் இருப்பது நன்மை பயக்கும். கெரியர், படிப்பில் கவனம் செலுத்துவது நன்மை பயக்கும். திருமண விஷயத்தை ஒத்திவைப்பது நல்லது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications