Thulam: ஜாவா சுந்தரேஷனாக மாறும் துலாம் ராசி.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு

Subscribe to Oneindia Tamil

தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் துலாம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

tamil-puthandu-rasi-palan-thulam-rasi-people-will-get-fortunes-during-this-tamil-puthandu-period

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசி பலன் (Thulam Rasi Palan)

துலாம் ராசியினருக்கு அடுத்த இரண்டரை வருடன் வாக்கியத்தின்படி 6 இல் சனி இருப்பதால் தினந்தோறும் உடற்பயிற்சியை தவறாமல் செய்வது நன்மை பயக்கும். சனி துலாமில் உச்சமாகும் ராசி என்பதால் முதுகு தண்டுவடம், கால், கைகளில் பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளதால் உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். நிறைய நன்மைகள் நடக்கும்.

முன்னேற்றம்

இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்துவிதமான நல்ல மாற்றங்களும், முன்னேற்றமும் ஏற்படும். தொழிலே இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் முதலாளியாகும் யோகம் ஏற்படும். நிறைய பேர் உங்களிடம் முதலீடு செய்வார்கள். மண்டபம் வாங்குவது, கிளப் வாங்குவது, பார் நடத்துவது, ஹோட்டல், ரெஸ்டாரண்ட் நடத்துவது போன்ற அமைப்பு உள்ளது.

பெண்கள்

டிரேடிங், ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அமைப்பும் உள்ளது. அடுத்தடுத்து நிறைய முன்னேற்றங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். நிறைய நன்மைகள் நடக்கும். துலாம் ராசி பெண்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். குடும்பத்தில் மட்டும் இணக்கமாகச் செல்வது நல்லது. சமுதாயத்திற்காக வாழக் கூடாது. உறவுகள் தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும்.

முன்னேற்றம்

இடாமாற்றம், வேலை மாற்றம், துறை மாற்றம், அலைச்சல் நிறைந்த வேலை போன்றவை அமையும். கன்சல்டன்ட் உத்தியோகம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். புது வேலை, புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்பு ஏற்படும். ஒப்பந்தம் போடுவது, வாடகை வருமானம் வியாபாரம் செய்வது, நிர்வாகம் பார்க்கக்கூடிய வியாபாரம், சப் கான்டிராக்ட் கிடைப்பது போன்ற யோகம் உண்டாகும்.

வழிபாடு

சனி இருப்பதால் உடற்பயிற்சியை தவறாமல் கடைப்பிடிப்பது நல்லது. மாற்றங்களை நோக்கி முன்னேறக் கூடிய காலகட்டமாக இருக்கும். 2 இல் குரு பார்ப்பதால் ஐஸ்வர்யமும், அஷ்டலட்சுமி கடாட்சமும் உண்டாகும் நல்ல காலகட்டம். மேல்மலையனூர் சென்று வழிபாடு செய்வது நன்மையைத் தரும். மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று உக்கிர தெய்வ வழிபாடு செய்வது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+