தமிழ் புத்தாண்டு பலன்: ராஜாபகவத் போல மாறும் விருச்சிக ராசி.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் விருச்சிகம் ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன் (Viruchigam Rasi Palan)
விருச்சிகம் ராசிக்கு இந்த தமிழ் புத்தாண்டு அற்புதமாக இருக்கும். எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்து வந்தார்களோ அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். வாழ்க்கையை செட்டிலாக்கிக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். பாக்கியத்தில் குரு இருப்பதால் பெரிய அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அசாத்தியமான அதிர்ஷ்டம், தெய்வ அனுக்கிரகம் உண்டாகும். நிறைய பேர் வெளியூர், வெளிநாடு செல்வது, பிஆர் கிடைப்பது, கோல்டன் விசா வாங்குவதற்கான யோகம் உண்டாகும்.

வீடு கட்டும் யோகம்
கோயில் கட்டுவது, வீடு கட்டுவது, தொழில் அமைவது, பூர்வீக தொழில் கிடைப்பது, எம்பஸியில் வேலை கிடைப்பது, நீதிபதியாவது, அலுவலகத்தில் கொண்டாடுவது போன்ற யோகங்கள் உண்டாகும். ஒரு இடத்தில் இல்லாமல் பல இடங்களில் இருக்கும் சூழல் ஏற்படும். குடும்பத்தில் கண்டிப்பாக குழந்தைகளுக்காக செலவு, மாற்றம் செய்வீர்கள். நிறைய பேருக்கு குடும்பம் அமையும். திருமணமாகும் யோகம் உண்டு. மறுமணத்திற்கான வாய்ப்பு ஏற்படும்.
லட்சியத்தில் கவனம்
எங்கு சென்றாலும் உங்களைப் பற்றி பேசக்கூடிய, பொறாமைப்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாபெரும் வெற்றி பெறும் யோகம் உண்டாகும். புதிய விஷயங்களை எடுத்துச் செய்வீர்கள். வீட்டில் நிறைய நன்மைகள் நடக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். மாபெரும் வெற்றி பெறும் யோகம் உண்டு. உங்களுடைய வேலை, லட்சியத்தை மட்டும் விட்டு விடாதீர்கள். யாராக இருந்தாலும் தைரியமாக நின்று ஜெயிக்கக்கூடிய யோகம் உண்டாகும். வாய்ப்பு உங்களைத் தேடி வரும்.
முதலீடு செய்யும் யோகம்
தெய்வ அனுக்கிரகம் முழுமையாக இருக்கம். பூர்வீகத்தில் முதலீடு செய்யும் யோகம் உண்டாகும். பூர்வீக நிலத்தில் முதலீடு செய்வீர்கள். கோயில் கட்டும் யோகம் உண்டு. ஆஸ்திரேலியாவில் செட்டிலாகும் யோகம் உண்டு. தேனியில் ரிசார்ட் கட்டும் வாய்ப்புள்ளது. வளர்ச்சியைக் கொடுக்கக்கூடிய அமைப்பு உள்ளது. பெரிய மாற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும்.
குரு பார்வை
குரு பார்வை ராசி, லக்னத்தில் இருப்பதால் பண வரவு சிறப்பாக இருக்கும். உங்களைப் பார்த்தாலே பணம் கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வர வேண்டிய அரியர் பணங்கள் வந்து சேரும். வழக்குகளில் சிக்கியிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டு வரும் யோகம் உண்டு. அற்புதமான அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
வழிபாடு
மாணவர்களுக்குப் படிப்பு அற்புதமாக இருக்கும். நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். முன்னோர்கள் வழிபாடு செய்த தெய்வங்களை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அப்பாவின் குலதெய்வத்தை வழிபாடு செய்வது நன்மையைத் தரும். ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள லட்சுமி பூவராக சுவாமியை வழிபாடு செய்வது நன்மையைப் பெற்றுத் தரும். 100க்கு 90 சதவீதம் நன்மைகள் நிறைந்த ஆண்டாக இருக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: ரிஷப ராசிக்கு குரு உச்சம்.. கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டரு.. மிதுன ராசிக்கு கொட்டும் பணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. தொழிலில் அற்புதமான முன்னேற்றம் -
Rasi Palan This Week:குருவின் அருளால் சனியிடமிருந்து தப்பிக்கும் மீன ராசி..பண விஷயத்தில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. விருச்சிக ராசிக்கு அடிக்கும் மெகா ஜாக்பாட் -
Rasi Palan This Week: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. வாழ்க்கையே மாறப்போகுது -
Rasi Palan This Week: மகர ராசி பிரச்னைக்கு எல்லாம் எண்டு கார்டு.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
Rasi Palan This Week: ஜாவா சுந்தரேஷனாக மாறும் தனுசு ராசி.. இனி சிங்கப் பாதை தான் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?











Click it and Unblock the Notifications